Monday, February 6, 2012

ரத்த அழுத்தம்(BP) அளப்பது பற்றிய புதிய ஆய்வு முடிவு!





நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். மருத்துவரிடம் சென்றால் நமது கையில்  அளவெடுப்பார்கள். 120/80 mm Hg  என்பது இயல்பான  ரத்த அழுத்தம் என்பதையும் அறிவோம்.

இப்பொழுது, லான்செட்(Lancet என்பது 1823 -ல் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஒரு மருத்துவப் பத்திரிகை) ஓர்  ஆய்வு முடிவை  வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கைகளிலும் எடுக்கப்படும் சிஸ்டாலிக் அளவில் (மேல் பகுதியில் குறிபிடப்படும்) அளவில் 15 mm Hg அளவுக்கு மேல் வித்தியாசம் வந்தால், கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது(peripheral vascular disease ) என்றும். மேலும், மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்(cerebrovascular disease)  என்பது  தான்  அந்த ஆரயிச்சியின் முடிவு.

இது குறித்து  மருத்துவ நிபுணர்களின் கருத்து...

" இது ஒரு நல்ல ஆய்வு. வழக்கமா ஒரு கையில்தான் ரத்த அழுத்தத்தை அளப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் அளப்போம். வழக்கமாக,  இந்தியாவில்  30 சதவிகித்தினருக்கு  இரண்டு கைகளுக்கிடையே 10  mm Hg வித்தியாசம் இருக்கும். எப்படியோ, இரண்டு கைகளிலும் அளப்பது ஒன்று சிரமம் கிடையாது.  அதைச் செய்யலாம்" என்கிறார் டாக்டர் அனூப் மிஸ்ரரா.(Dr Anoop Misra, chairman of Fortis' Centre of Excellence for Diabetes, Metabolic Diseases and Endocrinology)

"முதல் முறையா ரத்த அழுத்தம் அளக்கப்படும்  நோயாளிகளுக்கு  கை மற்றும் கால்களில்  அளப்போம். கைகளில் உள்ள ரத்த  அழுத்தத்தை விட கால்களில் கூடுதலாக இருக்கும். கைகளைவிட கால்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கால்களில் உள்ள தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும். இரண்டு கைககளுக்கிடையே  15 mm Hg
 மேல் வித்தியாசம் இருந்தால், அது கைகளில் உள்ள தமனியில் அடைப்பு உள்ளது என்பதோடு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களிலும், இதயத் தமனிகளிலும்  அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்"  என்கிறார் இதய நிபுணர் டாக்டர் கே.கே.அகர்வால்.(Dr K K Aggarwal,  president of Heart Care Foundation of India)

 இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய டாக்டர் கிறிஸ்டோபர் கிளார்க்(Dr Christopher Clark, University of Exeter Peninsula College of Medicine and Dentistry (PCMD)),  சொல்கிறார். "கைகளில் காணப்படும் சிஸ்டாலிக் அழுத்தத்தின் வேறுபாட்டிற்கும், ரத்த நாளங்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு  இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆராய்ந்தோம். நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொர்பு இருக்கிறது என்பேதே எங்கள் முடிவு. இரண்டுக் கைகளிடையே  10  mm Hg அல்லது 15  mm Hg அல்லது அதற்கு மேலும் வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு வியாதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மேற்கொண்டு அவர்களை  பரிசோதனைகளுக்கு  உட்படுத்தலாம்"

ஆரம்ப நிலையில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கும் உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு உதவும்.

எது எப்படியோ, காலிலும் BP அளக்கலாம் என்பதை இப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன். மேலும், இனி மருத்துவரிடம் செல்லும் பொழுது இரண்டு கைகளிலும் BP பார்க்கும்படி கேட்டுக் கொள்வோம்.

இது  குறித்து பத்திரிகை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்.

.

19 comments:

  1. சார் ரெண்டு கையிலும் BP பார்ப்பது டாக்டரா செய்தால் தான் உண்டு ! நாம் சொல்லி செய்ய மாட்டார் சார். மேலும் இது பற்றி நாம் அவருக்கு விளக்கி சொன்னால், " டாக்டருக்கே பாடம் எடுக்குறீங்களா?' என கோபமாகவும் வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  2. பல புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நாம் வீட்டுலேயே பரிசோதிக்க மெஷீன் ஒன்னு வச்சுருக்கோம். ரெண்டுகைகளிலும் பார்க்க பிரச்சனை இல்லை. செஞ்சுட்டால் ஆச்சு.
    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மோகன் குமார் said...

    //சார் ரெண்டு கையிலும் BP பார்ப்பது டாக்டரா செய்தால் தான் உண்டு! நாம் சொல்லி செய்ய மாட்டார் சார். மேலும் இது பற்றி நாம் அவருக்கு விளக்கி சொன்னால், " டாக்டருக்கே பாடம் எடுக்குறீங்களா?' என கோபமாகவும் வாய்ப்பு உண்டு//

    நீங்க சொல்றதுல உண்மை இருக்கத்தான் செய்து. இருந்தாலும், நாமும் கேட்டுக் கொள்ளலாம் என்பது தான் என் கருத்து.

    மருத்துவரிடம், எனக்கு இந்த மருந்தை எழுதிக் கொடுங்கன்னு கேட்கிற நோயாளிகளும் உண்டு!

    ReplyDelete
  5. @ மோகன் குமார்

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...

    //பல புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//

    வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. நல்ல, உபயோகமான தகவல். நீங்கள் சொன்ன மாதிரி, நமக்குப் பழக்கமான மருத்துவர்களிடம் இது மாதிரி பரிசோதனை செய்யச் சொல்லி கேட்கலாம்!!

    ReplyDelete
  8. துளசி கோபால் said...

    //நாம் வீட்டுலேயே பரிசோதிக்க மெஷீன் ஒன்னு வச்சுருக்கோம். ரெண்டுகைகளிலும் பார்க்க பிரச்சனை இல்லை. செஞ்சுட்டால் ஆச்சு.//


    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  9. மனோ சாமிநாதன் said...

    //நல்ல, உபயோகமான தகவல்.//

    மிக்க நன்றி மேடம்.

    //நீங்கள் சொன்ன மாதிரி, நமக்குப் பழக்கமான மருத்துவர்களிடம் இது மாதிரி பரிசோதனை செய்யச் சொல்லி கேட்கலாம்!!//

    ஆம், அவர்களும் அறிந்திருப்பார்கள். நிச்சயம் செய்வார்கள்.

    ReplyDelete
  10. துளசி மேடம் சொல்லியிருப்பது போல் வீட்டில் கருவி வைத்துள்ளோம். நல்ல தகவல். இரண்டு கைகளிலும் பார்க்க வேண்டுமென்பதை மனதில் குறித்துக் கொண்டோம்.

    ReplyDelete
  11. உபயோகமான பகிர்வு. வீட்டிலேயே பிபி பார்க்கும் மெஷின் இருந்தால்தான் சௌகர்யம். வேறுபாடு இருந்தால் (குடும்ப) மருத்துவரிடம் அழுத்திச் சொல்லலாம்.

    ReplyDelete
  12. ராமலக்ஷ்மி said...

    //துளசி மேடம் சொல்லியிருப்பது போல் வீட்டில் கருவி வைத்துள்ளோம். நல்ல தகவல். இரண்டு கைகளிலும் பார்க்க வேண்டுமென்பதை மனதில் குறித்துக் கொண்டோம்.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  13. ஸ்ரீராம். said..

    //உபயோகமான பகிர்வு.//

    மிக்க நன்றி சார்,


    //வீட்டிலேயே பிபி பார்க்கும் மெஷின் இருந்தால்தான் சௌகர்யம். வேறுபாடு இருந்தால் (குடும்ப) மருத்துவரிடம் அழுத்திச் சொல்லலாம்.//

    நல்ல யோசனை மகிழ்ச்சி!

    ReplyDelete
  14. நாம டாக்டரிடம் கேட்டா கோபித்துக் கொள்ள நிச்சயமா வாய்ப்பிருக்கு. ஒரு டாக்டர் கொடுத்த மருந்தை இன்னொரு டாக்டர் அது சரியான மருந்துதான்னு ஒத்துக்கறதெ கடினம். இதுல நாம சொல்றதை எங்கே கேப்பாங்க !!

    வீட்ல மெஷின் வெச்சுக்கிட்டா தொல்லையில்லை.

    ReplyDelete
  15. நல்ல தகவல். நன்றி.

    ReplyDelete
  16. அப்பாவி தங்கமணி said...

    //Nice informative post//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  17. அமைதிச்சாரல் said...

    // நாம டாக்டரிடம் கேட்டா கோபித்துக் கொள்ள நிச்சயமா வாய்ப்பிருக்கு.//

    நிச்சயமாக இந்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும்.

    //வீட்ல மெஷின் வெச்சுக்கிட்டா தொல்லையில்லை.//
    ஆமாம், வித்தியாசம் தெரிதால் அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  18. ஒரு கையில் எடுக்கிறதே நர்ஸம்மாதான். அவங்ககிட்ட ரெண்டு கையிலும் எடுக்கச் சொன்னா முறைப்பாங்க. மேலும், இதை மருத்துவர்களே நடைமுறைக்குக் கொண்டு வர்றது நல்லது.

    அப்புறம், வீட்டில் பெரும்பாலும் டிஜிட்டல் பிபி மானிட்டர்தான் வெச்சிருப்போம். அது அவ்வளவு accurate கிடையாதுன்னும் சொல்றாங்களே (இந்திய) டாக்டர்ஸ் அப்படியா? ஆனா, இங்கயும் (அபுதாபி) பல மருத்துவமனைகளில் டிஜிட்டல்தான் இருக்கு.

    ReplyDelete
  19. ஹுஸைனம்மா said

    //ஒரு கையில் எடுக்கிறதே நர்ஸம்மாதான். அவங்ககிட்ட ரெண்டு கையிலும் எடுக்கச் சொன்னா முறைப்பாங்க.//
    அப்படி முறைச்சா அவங்க மெயில் ஐடி வாங்கிட்டு வாங்க நம்ம பதிவ அவங்களுக்கு நேரடியா அனுப்பிடுவோம்:-)))!்.

    //மேலும், இதை மருத்துவர்களே நடைமுறைக்குக் கொண்டு வர்றது நல்லது.//
    செய்வாங்க. கால்ல பிபி அளக்கலாம்னு படிச்சவுடன், அட இது புதுசா இருக்கே ஒரு பதிவு போடலாமேன்னு போட்டுட்டேன். இவ்வளவு பேரு படிச்சுட்டு பின்னூட்டமெல்லாம் போட்டுடாங்க. அது போதும் நமக்கு. மற்றத மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    //அப்புறம், வீட்டில் பெரும்பாலும் டிஜிட்டல் பிபி மானிட்டர்தான் வெச்சிருப்போம். அது அவ்வளவு accurate கிடையாதுன்னும் சொல்றாங்களே (இந்திய) டாக்டர்ஸ் அப்படியா?//
    ஆரம்ப நிலையில் அப்படி சொல்லப்பட்டது உண்மைதான். ஆனால், இப்பொழுது எல்லா மருத்துவர்களும் டிஜிட்டல் பயன்படுத்துகிறார்கள். மேலும் 'மெர்குரி' பயன்படுத்தப்படும் பழைய மீட்டர்களால் சுற்று சூழலுக்கு கேடு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதனால், அதை தவிர்க்கும் படியும் கூறுகிறார்கள்.

    //ஆனா, இங்கயும் (அபுதாபி) பல மருத்துவமனைகளில் டிஜிட்டல்தான் இருக்கு.//
    அப்படியா, டிஜிட்டல் மீட்டர்கள் நீண்ட நாள் உழைப்பதில்லை என்று கூறுகிறார்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் அதுதான் பயன்படுத்தப் படுகிறது.

    தங்களின் கருத்துக்கு நன்றி மேடம்.

    ReplyDelete