Saturday, July 21, 2012

பில்லா டூவும், நண்பரின் அனுபவமும்!




எனது  நண்பர், கடந்து ஞாயிற்றுக் கிழமை, சென்னை தேவி பாரடைசில் பில்லா 2 பார்க்க, தனது மகன், மகள், மனைவி மற்றும் அம்மா ஆகியோருக்கு, ஐந்து டிக்கெட் புக் செய்துவிட்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகுதான், தியேட்டர் நிர்வாகம் "சிறுவர்களை அனுமதிக்க முடியாது.  இது பெரியவர்களுக்கான படம்" என்று சொல்லியிருக்கிறார்கள். 
"சரி, டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்டதற்கு 
"விற்றது விற்றதுதான். நீங்கள் வேண்டுமானால் யாரிடமாவது விற்றுக் கொள்ளுங்கள்" என்றார்களாம். கடைசியாக, பிள்ளைகள் மற்றும் அம்மாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கணவன் மனைவி மட்டும் படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். பலர் சிறுவர்களுடன் அங்குமிங்கும் அலைந்தது பரிதாபமாக இருந்ததாம்.

இப்பொழுது 'A' சர்டிபிகேட் படங்களை பார்ப்பதற்கு, சிறுவர்களை கட்டாயம் அனுமதிக்க கூடாது என்று அரசு எச்சரிக்கை செய்திருப்பதாக சொன்னார்களாம். இது நல்ல விஷயம்தான்.  ஆனால், விரைவில் ஒரு விடுமுறை தினத்தில் நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்கு வரப் போகிறதே? அப்பொழுது என்ன செய்வது?!
.

12 comments:

  1. அதானே அப்பொழுது எல்லாரும் சேர்ந்து பார்ப்பார்கள்..

    ReplyDelete
  2. சரியான கேள்வி. டிவிக்கும் கூட சென்சார் வேண்டும் தான்

    ReplyDelete
  3. The movie will be applied for censorship again and will be telecasted in TV Channel(s) with the cuts by censor board.. All the scenes screened in movie theatre will not come when telecasted in TV channels..

    ReplyDelete
  4. முத்துகுமார் சரியா சொல்லிட்டார், தொ.காவில படம் போடும் போது மறுதணிக்கை செய்து "U" வாங்கித்தான் போடணும் ஆனால் அது ஒப்புக்கு தான் அதிக கட் இருக்காது. இந்தி டர்ட்டி பிக்சரை இரவு 10 மணிக்கு மேல் தொ.காவில் போடணும் என்றே சொல்லியாச்சு.

    தேவியில் பொல்லாதவன்(தனுஷ்) படத்திற்கு சிறுவர்களை அனுமதித்தற்கு தியேட்டர் நிர்வாகியை கைது செய்துட்டாங்க, எனவே சூடு கண்டப்பூனையா பயந்துட்டாங்க போல.

    தொ.கா விளம்பரத்துக்கு கூட சென்சார் வாங்கணும் ,ஆனால் கவர்ச்சியா இருக்கே எப்படினுலாம் கேட்கக்கூடாது ,"கவனிச்சா" யூ சான்று கொடுப்பாங்க.

    தொ.கா நிகழ்ச்சிகளுக்கு தான் சென்சார் இல்லை எனவே அவர்கள் தான் ஆபாசமா பிக்பாஸ் போல நிகழ்ச்சி போடுறாங்க. அதுக்கும் இப்போ கெடுபிடி போடுறதா பேச்சு.

    ReplyDelete
  5. ஆமாங்க வீட்டு நடுக்கூடத்துக்கு வரும்போது என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  6. நல்ல கேள்வி...
    TV யில் வராத அசிங்கமா ?

    ReplyDelete
  7. //நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்கு வரப் போகிறதே? .// நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்குள் வர விடுவதுதற்கு அனுமதிக்கும் நம் தவற்றை முதலில் நாம் திருத்துவோம்.

    ReplyDelete
  8. முதலில் நீங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு படத்திற்கு போனதே தவறு அல்லவா ?

    ReplyDelete
  9. முதலில் நீங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு படத்திற்கு போனதே தவறு அல்லவா ?

    ReplyDelete
  10. முதலில் நாம் திருத்துவோம்.

    ReplyDelete
  11. //முதலில் நீங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு படத்திற்கு போனதே தவறு அல்லவா ? //
    மிடில் கிளாஸ் மக்களின் வழக்கமான காசு வீணா போயிடக் கூடாது என்ற என்ற எண்ணமாக இருக்கும்.அதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. //மிடில் கிளாஸ் மக்களின் வழக்கமான காசு வீணா போயிடக் கூடாது என்ற என்ற எண்ணமாக இருக்கும்.அதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்//

    நண்பரும் அப்படி நினைத்துதான் படம் பார்த்திருப்பார். சரியாகச் சொன்னீர்கள் சார்!

    ReplyDelete