Tuesday, January 22, 2013

அபூர்வ நீள வால் பறவையின் படங்கள்!

அண்மையில், வேதரானியம் அருகே உள்ள  எனது சொந்த ஊரான கருப்பம்புலம் சென்றிருந்தேன். காலை நேரத்தில் NIKON COOLPIX S2500 காமிராவில் வீட்டிற்கு முன்புறம் உள்ள இடங்களை படம்பிடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, சுமார் ஒன்றரை அடி  நீளமுள்ள வாலுடன் வெள்ளை நிறத்தில் சவுக்கு காட்டில் வந்து அமர்ந்த ஒரு பறவையை பார்த்த நேரத்தில் படம் பிடித்தேன். அது ஒரு சில நிமிடத்திற்குள் சவுக்கு காட்டினுள் சென்று மறைந்துவிட்டது.


                                               long tailed bird at karuppampulam


அந்தப்  பகுதியில் இந்த பறவையை இது வரை, ஒரு ஆசிரியை  தவிர யாரும்  பார்த்ததாகச் சொல்லவில்லை. அந்த ஆசிரியையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கேயிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளியருகே மாந்தோப்பில் பார்த்ததாக கூறினார்.

இந்தப் பறவை எங்கிருந்து வந்தது என்று அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

.

9 comments:

  1. இது Asian Paradise Flycatcher என்ற பறவை. இது அவ்வளவு ஒன்றும் அபூர்வமல்ல. காடுகளை ஒட்டிய கிராமப்புறங்களில் சாதாரணமாகக் காணக் கிடைக்கக்கூடிய பறவை.

    ReplyDelete
  2. வித்தியாசமான பறவையைப்பற்றிய பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமை.

    பறவையின் பெயரை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார் மதுரை அழகு. படமும் தகவலும் இங்கே: http://flyingbeautieshimachal.blogspot.in/2010/03/asian-paradise-flycatcher.html

    ReplyDelete
  4. It is new(s) information for me. thanks for sharing.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  5. மதுரை அழகு said...

    //இது Asian Paradise Flycatcher என்ற பறவை//

    பெயர் சொன்னதற்கு நன்றி சார்.

    **************

    //இது அவ்வளவு ஒன்றும் அபூர்வமல்ல.//

    என்னுடைய வாழ்நாளில் முதல்முறையாக, அதுவும் எங்கள் பகுதியில் பார்த்ததால் அப்படி குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி, இப்பொழுது தெளிவுப் பெற்றேன்.

    **************

    //காடுகளை ஒட்டிய கிராமப்புறங்களில் சாதாரணமாகக் காணக் கிடைக்கக்கூடிய பறவை.//

    தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுகிறதா? அப்படியெனில்,எந்த ஊர்களில் என்று குறிப்பிட்டால் நன்று.

    தங்களுடைய வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி சார்!

    ReplyDelete