இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டு தனியார் பொறியியல் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். பிரச்சினைக்கு காரணமாகச் சொல்லப்படுவது, புதிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிடுவதால் கிடைக்கும் கமிஷன் தொகைதான். படிக்க வேண்டிய வயதில், கமிஷன் கொடுத்து மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் அற்ப செயலுக்கு பலியாகி, ஒரு மாணவனின் உயிர் போய்விட்டது, மற்ற மாணவர்களுக்கு வாழ்வு போய்விட்டது.
சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லுரி மாணவன் தனக்குத் துணையிருந்த பெண்மணி, தன்னை கண்டித்தார் என்பதற்காக அவரை கொலை செய்து எரித்துவிட்டான்.
நான் இங்கு சொல்லவருவது, அண்மையில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், அங்கு அவரின் மகன் சட்டக்கல்வி பயில ஆசைப்பட்டதாகவும், தான் அதை மறுத்து பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதாகவும் கூறினார். மகனின் சட்டக்கல்வி விருப்பத்திற்கு தடையாக அவர் இருப்பதற்கு காரணாமாக சொன்னது. "சட்டக்கல்வி மாணவர்கள் மோசமானவர்கள், எனது மகனையும் கெடுத்து விடுவார்கள்" என்றார்.
சட்டக் கல்வி பயிலும் எனது மகனுக்கு விடுதி தேடும் போது பட்ட அவமானங்கள், அனுபவங்களை இங்கே விவரிக்க இடமில்லை. நான் சந்தித்த விடுதிக் காப்பாளர்கள் "முதலில் இடத்தைவிட்டு நகருங்கள், லா காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு ஹாஸ்ட்டல் கிடையாது" என்றார்கள். ஏன் இதை சொல்கிறேனென்றால் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள் அவர்கள் எந்த சமூக விரோத செயலிலும் ஈடு படமாட்டார்கள் என்ற எண்ணம் நமது மக்களிடையே இருப்பதால்தான் அவர்களை கண்காணிக்கத் தவறி விடுகிறோம்.
அடையாறு துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாக பத்திரிகையில் படித்தது "கல்லூரி மாணவர்களுக்கு, வீடுகளை 15 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடுகின்றனர். பின், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை, வீட்டு உரிமையாளர்கள் கண்காணிப்பதில்லை. இனி வீட்டு உரிமையாளர்கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, தங்கள் வீடுகளை மாணவர்களுக்கு வாடகைக்கு விடவேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு, இனி வீட்டு உரிமையாளர்களும் பொறுப்பாவார்கள்".
எந்தக்கல்வி பயின்றாலும் மாணவர்கள் மாணவர்கள்தான் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் நிருபித்துள்ளன. பெற்றோர்களே, உறவினர்களே, வீட்டு உரிமையாளர்களே மாணவர்களை அவர்கள் படிக்கும் பாடப்பிரிவைக் கொண்டு தரம் பிரிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.
எந்தக்கல்வி பயின்றாலும் மாணவர்கள் மாணவர்கள்தான் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் நிருபித்துள்ளன. பெற்றோர்களே, உறவினர்களே, வீட்டு உரிமையாளர்களே மாணவர்களை அவர்கள் படிக்கும் பாடப்பிரிவைக் கொண்டு தரம் பிரிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.
ReplyDelete...correct!
//மாணவர்களை அவர்கள் படிக்கும் பாடப்பிரிவைக் கொண்டு தரம் பிரிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்//
ReplyDeleteஉண்மைதான்.. நன்றாகச்சொன்னீர்கள்.
நீங்கள் கூறும் கருது நன்றாக இருக்கிறது, அனால் இது நமது ஆசையே.
ReplyDeleteநிதர்சன உண்மை வேறாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால் சட்ட கல்லூரிகளில் சேரும் பொழுது எந்த ஒரு மாணவனும் (மனைவியும்) நல்ல எண்ணங்களோடு தான் செல்கிறார். அனால் அங்கு இருக்கும் சீனியர் மாணவ குழுமங்கள், ஆசிரிய குழுமங்கள், ஊழிய குழுமங்கள் அந்த புதிய மாணவரையும் எதாவது ஒரு குழமத்தில் சேர்க்க வற்புறுத்தி , சேர வைத்து விடுவார்கள்.
சில மருத்துவ, பொறியியல், கலை கல்லூரிகளும் இந்த பிரிவில் அடங்கும்.
Environment has definitely great influence on deciding our own habits & behaviours.
ReplyDeleteஉண்மை தான். நானும் சட்டம் படித்தவன். எனது நண்பர்கள் குழு முழுவதுமே அப்போதிருந்தே பல நல்ல ஆக்கபூர்வ செயல்களில் ஈடு படுவோம். அது இன்று வரை தொடர்கிறது. வெறுமனே எங்களை சட்டம் படித்தவர் என்றும் ஒதுக்கலாம். எங்களுடன் பழகி பார்த்தால் தான் எங்கள் நோக்கம்புரியும்
ReplyDeleteநல்ல கருத்துக்களை சொல்லி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteகருத்துக்களை தெரிவித்த சித்திரா மேடம், அமைதிச்சாரல் மேடம்,
ReplyDeleteராம்ஜி_யாஹூ சார், மோகன் குமார் சார்,சந்ரு சார் அனைவருக்கும் நன்றி.
//ராம்ஜி_யாஹூ said...
நீங்கள் கூறும் கருது நன்றாக இருக்கிறது, அனால் இது நமது ஆசையே.
நிதர்சன உண்மை வேறாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால் சட்ட கல்லூரிகளில் சேரும் பொழுது எந்த ஒரு மாணவனும் (மனைவியும்) நல்ல எண்ணங்களோடு தான் செல்கிறார். அனால் அங்கு இருக்கும் சீனியர் மாணவ குழுமங்கள், ஆசிரிய குழுமங்கள், ஊழிய குழுமங்கள் அந்த புதிய மாணவரையும் எதாவது ஒரு குழமத்தில் சேர்க்க வற்புறுத்தி , சேர வைத்து விடுவார்கள்.//
இதற்கு மோகன் குமார் சார் சொல்லும் பதில்:
நானும் சட்டம் படித்தவன். எனது நண்பர்கள் குழு முழுவதுமே அப்போதிருந்தே பல நல்ல ஆக்கபூர்வ செயல்களில் ஈடு படுவோம். அது இன்று வரை தொடர்கிறது. வெறுமனே எங்களை சட்டம் படித்தவர் என்றும் ஒதுக்கலாம். எங்களுடன் பழகி பார்த்தால் தான் எங்கள் நோக்கம்புரியும்.
எனது பதில்:
என்னுடைய மகன் அமைதி விரும்பி இறுதியாண்டு பி.எல்.(ஹானர்ஸ்) படிக்கிறான். இதுவரை எந்த விதமான ஜாதி, மத, அரசியல் ஈடுபாடும் இல்லாமல் படித்து வருகிறான்.அவனுடன் படிக்கும் பலரும் இப்படித்தான் உள்ளார்கள்.
எதோ சிலர் அடிதடி, அரசியல்தான் வக்கீல் தொழில் என்று நினைப்பதால்தான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நல்லவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் காலம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அதற்கு உதாரணம் இந்த வருடம், உயர்ந்த கட் ஆப் மதிப்பெண்களுடன் அதிக அளவு பெண்களும் சட்டம் படிக்க வந்துள்ளதே சாட்சி.
ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டால் அது அழிக்கப்பட முடியாதபடி விழுந்து விடுகிறது.
ReplyDeletegoma said...
ReplyDeleteஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டால் அது அழிக்கப்பட முடியாதபடி விழுந்து விடுகிறது.//
ஆமாம் மேடம், அதை அழிக்கும் சிறு முயற்ச்சிதான் இது. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம்.
நன்றி.
கல்லூரிகள் இப்போ கவலைப்பட வேண்டிய விசயமாகிவிட்டது
ReplyDelete//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteகல்லூரிகள் இப்போ கவலைப்பட வேண்டிய விசயமாகிவிட்டது//
ஆமாம் சார், நிலைமை ஒரு நாள் மாறும் என்று நம்புவோம்.
வருகைக்கு நன்றி.