சென்னையில் இப்பொழுது தினம்தோறும் பலர், சிலரால் ஏமாற்றப்படுகிறார்கள்.
எனது அனுபவம் இதோ...
கடந்த வாரத்தில் குடும்பத்துடன் தி.நகர் சென்றிருந்தேன், மதியம் இரண்டு மணியளவில் உஸ்மான் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது சுமார் ஐம்பது வயதை தாண்டிய ஒருவர் என்னைப் பார்த்து சிநேகத்துடன்
"சார், நல்லாயிருக்கீங்களா?" என்றார். எனக்கு அவரை முன்பின் பார்த்த மாதிரி தெரியவில்லை. நான் சற்றே யோசித்தேன். உடனே அவர் "என்ன சார் யோசிக்கிறீங்க? குணசேகரன், ராஜேந்திரன்..!" என்றார். நான் அப்பாவியாக என்னுடைய பெயரையும் ஊரையும் சொல்லிவிட்டு, "நீங்கள் யாருன்னு நினைச்சி பேசுறீங்க?" என்றேன். "என்ன சார், உங்களை தெரிஞ்சிதான் பேசுறேன்" என்றார் அதிரடியாக.
எனக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. "என்னை எப்படி உங்களுக்கு தெரியும்" என்றேன்
உடனே அவர் எனது ஊரில் வேலைப்பர்த்ததாக சொன்னார்.(நான் தான் ஏற்கனவே, எனது பெயர்,ஊரின் பெயரைச் சொல்லிவிட்டேனே, அது புரியாமல் மேலும் நம்பிக்கையுடன்,அப்பாவியாகத் தொடர்கிறேன்) எந்த வருடம் என்றேன். அவர் 1992 என்றார். இப்ப, எங்க இருக்கீங்க என்றதற்கு திருச்சி என்றார். மேலும் சண்முகம், செல்வராஜ் எல்லாம் எப்படி இருக்காங்க என்றார். சரி யோதோ பேசுகிறார் நாமும் பேசிவிட்டு செல்வோமே என்று "இது எனது மகன், லாயருக்கு படிக்கிறான், இது எனது மனைவி" என்றேன். அவர் பதிலுக்கு "எனக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக உள்ளான், சின்னவன் எட்டாவது படிக்கிறான்" என்றார். அதன் பிறகு அவர் சொன்ன செய்தி, தனது தம்பி மாமியார் அப்போலோ ஹாஸ்பிட்டலில் அறுவை சிகிச்சையின் போது இறந்து விட்டதாகவும், இவர் தம்பியின் மாமனார் வீட்டுக்கு வந்த போது, அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் இன்னும் யோதேதோ சொன்னார்.
இடையில் ஒரு போன் நம்பரை வேகமாகாச் சொல்லி, அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதுன்னார். , இவர் பணம் வாங்க நினைக்கிறார் என்பது, எனக்கு கால தாமதமாக புரிந்து விட்டது.
உடனே நான், உங்களுடன் வேலைப்பார்த்த ஒருவரின் பெயரை சொல்லுங்கள் என்றேன். அவர் பல வருடங்கள் ஆகிவிட்டது மறந்து விட்டது என்றார். உடனே நான் அவர் குறிப்பிட்ட சண்முகம் என்பவருக்கு போன் செய்ய போனேன். அதற்கு "அவர் வேற சண்முகம் சார்..!" என்பதற்குள் நான் "போயா.." என்று சொல்லிவிட்டு வேகமாக வந்துவிட்டேன். இவை அனைத்தும் புரியாமல் எனது மகனும், மனைவியும் சற்று தொலைவில் நிற்கிறார்கள். அவர்கள் நான் நண்பருடன் பேசுவதாக நினைத்து ஒதுங்கிவிட்டார்கள்.
இந்த மாதிரி என்னிடம் பலர் பேச்சுக் கொடுத்து பிறகு சாரி, நான் தப்பாக என்னோட நண்பர்ன்னு நினைச்சிட்டேன் என்பார்கள். மேலும், நானும் பலரை தெரியவில்லை என்றாலும் தெரிந்த மாதிரி பேசி அனுப்பிவிட்டு, பிறகு மண்டையை குடைந்து கண்டுபிடித்திருக்கிறேன்.
இந்த நிகழ்வில் நான் கற்றுக்கொண்டது, நமக்கு புதியவர்களை புரியவில்லை என்றால், அவர்கள் மூலமாகவே நாம் செய்திகளை அறியவேண்டும். அவசரப்பட்டு நம்மை அறிமுகம் செய்து கொண்டு, நீங்கள் சரியான நபருடன் தான் பேசுகிறீர்களா? என்று அப்பாவியாகக்கேட்கக்கூடாது.
அவர் குறிப்பிட்ட பெயர்களில் நமக்கு நிச்சயமாக நண்பர்கள் இருப்பார்கள். அவர் நம்மை ஏமாற்றும் தந்திரம் அறிந்தவர். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த நபருக்கு உழைத்து சம்பாதிக்க உடல்தகுதி உள்ளது. அனால் அந்த நபர் நிச்சயம் இதுவரை பலரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்.
இந்த நிகழ்வுக்கு மறுநாள் காலை பத்திரிக்கையில் படித்த செய்தி. நடிகை சத்தியபிரியா(கோலங்கள் அபிஅம்மா) தி.நகரில் காரில் இருந்துகொண்டு டிரைவரிடம் ஹோட்டலில் பார்சல் வாங்க பணம் கொடுத் அனுப்பியிருக்கிறார். அப்பொழுது ஒரு நபர் வந்து "அம்மா, பத்து ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்து கிடப்பதாக சொல்லியிருக்கிறார், அதை நம்பி கதவை திறந்துகொண்டு வெளியில் வந்து ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் போது, காரில் இருந்தகைப்பையை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார் அந்த நபர். பிறகுதான் தான், ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார். பிறகு அவருக்கே தான் நூறு ரூபாய் நோட்டுத்தானே கொடுத்தோம் எப்படி பத்து ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக சொன்னதற்கு நம்பி ஏமார்ந்து இருக்கிறோமே என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
நாம் ஏமாறும் வரை, ஏமாற்ற தயாராக இருப்பார்கள்.
சார் அவசியமான பதிவு; குறிப்பா நீங்க முன் பின் தெரியாத நபர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். வெள்ளை மனதுடன் உங்களை பற்றி தெரியாத நபரிடம் சொல்லாதீர்கள் சார்
ReplyDelete\\நாம் ஏமாறும் வரை, ஏமாற்ற தயாராக இருப்பார்கள்\\
ReplyDeleteஉண்மைதான்.
அவசியமான பகிர்வு.
நல்ல பதிவு..சார்
ReplyDeleteCongrats for getting 50 followers!!
ReplyDeleteஇந்த அனுபவம் பலமுறை என் வாழ்வில் நடந்துள்ளது.
ReplyDeleteExcellent...Thankz
ReplyDeleteஇப்படி அடிக்கடி நடந்தாலும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதான் உலகத்தின் நெ.1 அதிசயம்.
ReplyDelete