Monday, July 19, 2010

அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

கடந்த சில நாட்களாக நம் மனதில், பலவித எண்ண அலைகளை ஏற்படுத்துவது, போலி மதிப்பெண் சான்றிதழ் பற்றிய செய்திகளே..!
இதில் யார் குற்றவாளி என்று தீர்மானிப்பது அரசின் வேலை. ஆனால் எது இவர்களை இந்த மாதிரியான இழிவான செயல்களை செய்யத் தூண்டியது என்பது பற்றி மட்டும் பார்க்கலாம்...

ஒவ்வொரு பெற்றோருக்கும், தனது பிள்ளைகள் மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் உள்ளது. அதற்கு யாரும் விதிலக்கல்ல. இதில் போலி மதிப்பெண்ணில் சிக்கிக் கொண்ட பெற்றோரும் அடங்குவர். தமது பிள்ளைகளை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வதை யாரும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், வழிதான் இங்கு பிரச்சினை.
சில விஷயங்களை, நாமே வரையறை செய்துகொண்டு, அதுதான் சிறந்தது என்று முடிவெடுத்து விடுகிறோம். அதில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது. குறிப்பாக மருத்துவப் படிப்பு குறித்த எண்ணம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப்படிப்பு அதிக பெற்றோரால் விரும்பப்படவில்லை. காரணம் அப்பொழுது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்கு ஏக மரியாதை. அன்று 'என் மகன் சாப்ட்வேர் எஞ்சினியர்' என்று சொல்லிக்கொள்வதில், ஒரு கர்வம் பெற்றோரிடம் காணப்பட்டது. அதற்கு மரியாதை குறையும் போது, தடாலடியாக அந்தப் படிப்பைத் தூக்கி போட்டுவிட்டார்கள்.
மேலும் பெரிய கல்லூரிகளில், தனது பிள்ளை படிப்பதை பெருமையாகப் பேசும் பெற்றோர் பலர் உள்ளனர். தான் பெருமையாகப் பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் பிள்ளைகளைக் கருவியாக்குகிறார்கள்.

ஒரு மாணவர் சிறு வயது முதலே, தான் டாக்டராக வேண்டுமென்கிற கனவுகளோடு படித்து, கடைசியாக சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில்,அது கிடைக்காமல் போகும் நிலையில், அந்த மாணவர் துவண்டு போய்விடுகிறார். அதனை தாங்கிக் கொள்ளமுடியாத பெற்றோர், சொத்து சுககங்களை விற்று தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுபவர்களும் உண்டு. சிலர் இந்தமாதிரி குறுக்கு வழியை நாடுவதும் உண்டு. முதலிலேயே பிள்ளைகளை, இரண்டு விதமான படிப்புக்குத் தயார் செய்யவேண்டும்.

எங்களது மகனை சிறு வயது முதல் டாக்டராக்க வேண்டும் என்ற ஆவலில் தயார் செய்தோம்.அவனும் நன்றாகப் படித்து வந்தான். +2 அரையாண்டுத் தேர்வில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்து, மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை, வேறு படிப்பில் சேர்க்கலாம் என்று சிந்தித்து, அவன் 'திறைமைக்குரிய' படிப்பாக தேர்வு செய்து 'வழக்கறிஞர்' படிப்புக் குறித்து நண்பர்கள் வழியாக விசாரித்து அறிந்தபோது, எனக்கு அந்தப் படிப்பின் மேல் ஈர்ப்பு வந்து, பிறகு அவன் மருத்துவம் படிக்க மதிப்பெண்கள் வாங்கியபோதும், மருத்துவக்கல்வி வேண்டாமென்று, சட்டப்பள்ளியில் சேர்த்தோம். இப்பொழுது மகிழ்ச்சியாகப் படிக்கிறான். தீர்வு இல்லாத பிரச்சினைகளே இல்லை என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.

பணக்காரப் பெற்றோர் தான் நினைத்ததை அடைய வழி உள்ளது. நன்கொடை கொட்டிக்கொடுத்தால் விரும்பும் படிப்பில்
சேர்த்துவிடலாம். எனக்குத் தெரிந்தவர் +2 -ல் தோல்வியடைந்த மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக்கொடுத்தார்.

பணம் இல்லாத பெற்றோர் ஆசையை அடக்க முடியாமல் குறுக்கு வழிகளில், இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதே சிறந்தது என்பதே இதன் மூலம் அறியலாம்.
பிள்ளைகளின் தகுதிக்கு கிடைக்கும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதே சிறந்த பலன் தரும்.இதை நான் 'எந்த படிப்பில் சேரலாம்?' என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன், புதியவர்கள் படித்து பாருங்களேன்.

பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவரும் அவசரத்தில், பெற்றோர் சட்டத்தையோ,தர்மத்தையோ மதிப்பதில்லை என்பதற்கு உதாரணம், மணப்பாறை டாக்டர் தம்பதிகள். தனது எட்டாவது படிக்கும் மகனைக் கொண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யச்சொல்லி, அதை படம்பிடித்து காட்டி சிக்கலில் மாட்டிகொண்டது நாம் அறிந்த ஒன்றே!

நேர் வழியை நமது குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும். அதை விடுத்து குறுக்கு வழியைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் எந்த நிலையை அடைந்தாலும், ஒருநாள் கீழே வந்துவிடுவார்கள். உதாரணம், கேத்தன் தேசாய்.

2006 -க்கு முன்பு வரை, அந்த வருடம் வாய்ப்புக்கிடைக்காத மாணவர்கள், அடுத்த வருடம் இம்ப்ருமென்ட் எனப்படும் மதிப்பெண் உயர்த்தும் தேர்வினை எழுதி, பலர் மருத்துவக்கல்லூயில் சேர்ந்தனர். அதனை அப்போதையா அரசு எடுத்துவிட்டது. மீண்டும் அந்த முறை வரலாம் என்று நான் நினைக்கிறேன். அப்படி வந்தால் பல மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்ய வாய்ப்பாக அமையும்.

இப்பொழுது எஞ்சினியரிங் பட்டதாரி பெண்மணி (திருமணமாகிவிட்டது) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார்.
அது சரி, அப்படி என்னதான் இருக்கு அந்தப் படிப்பில்?

25 comments:

 1. எல்லாமே வியாபராம் ஆய்டுச்சு...இதில் படிப்பு என்ன விதிவிலக்கா அதுதான் முதலில் உள்ளது.

  ReplyDelete
 2. சார் எல்லாரையும் ஈர்க்கிற மாதிரி தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டீங்க; விஷயமும் அவசியமானது தான்

  ReplyDelete
 3. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

  ReplyDelete
 4. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

  ReplyDelete
 5. மிக அவசியமான பதிவு.. வாழ்க்கையையே விலைபேசி விற்றுவிடுவார்கள் அமைதி அப்பா.... இன்று ஒரு செய்தியை பார்த்தேன். அதில் LKG க்கே 30,000 Fees ஆம்ம்ம்....எங்கு சென்று முடியபோகிறதோ?

  ReplyDelete
 6. அவசியமான பகிர்வு.
  பெற்றோர் ஆசை படுவது தவறில்லை. குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பது தான் தவறு. நீங்கள் கூறுவது போல் இன்னோரு சாய்ஸ் வைத்து கொள்ளலாம்.

  ReplyDelete
 7. நல்ல மதிப்பெண் பெற்று இப்படி போலி சான்றிதழ் வாங்கியது பேராசை காரணம்

  ReplyDelete
 8. ஒரு மாணவர் சிறு வயது முதலே, தான் டாக்டராக வேண்டுமென்கிற கனவுகளோடு படித்து, கடைசியாக சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில்,அது கிடைக்காமல் போகும் நிலையில், அந்த மாணவர் துவண்டு போய்விடுகிறார். அதனை தாங்கிக் கொள்ளமுடியாத பெற்றோர், சொத்து சுககங்களை விற்று தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுபவர்களும் உண்டு. சிலர் இந்தமாதிரி குறுக்கு வழியை நாடுவதும் உண்டு. முதலிலேயே பிள்ளைகளை, இரண்டு விதமான படிப்புக்குத் தயார் செய்யவேண்டும்.


  ..... true! இதில் பிள்ளைகளின் interests என்னவென்று பல பெற்றோர்களுக்கு தெரிவதே இல்லை... ம்ம்ம்... மாறுதல்கள் விரைவில் வரும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 9. rk guru said...
  எல்லாமே வியாபராம் ஆய்டுச்சு...இதில் படிப்பு என்ன விதிவிலக்கா அதுதான் முதலில் உள்ளது.//

  ஆமாம், வியாபாரத்தில் முதலில் இருப்பது கல்விதான்.

  ReplyDelete
 10. மோகன் குமார் said...
  சார் எல்லாரையும் ஈர்க்கிற மாதிரி தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டீங்க; விஷயமும் அவசியமானது தான்//

  உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 11. suganthi said...
  உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)//

  நன்றி மேடம், உங்கள் மெயில் ஐ.டி.யை அனுப்பிவிடுகிறேன்.

  ReplyDelete
 12. உண்மை பெற்றேரே அனைத்து தவறுகளுக்கும் மறைமுகமாக உடந்தை... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. பொண்ணு வீட்டுக்காரங்க முதல்ல டாக்டர் மாப்ளைக்கும்,எஞ்சினியர் மாப்ளைக்கும்தானே முதலிடம் தர்றாங்க?

  ReplyDelete
 14. புஷ்பா said...
  மிக அவசியமான பதிவு.. வாழ்க்கையையே விலைபேசி விற்றுவிடுவார்கள் அமைதி அப்பா.... இன்று ஒரு செய்தியை பார்த்தேன். அதில் LKG க்கே 30,000 Fees ஆம்ம்ம்....எங்கு சென்று முடியபோகிறதோ?//

  இதை விட கொடுமை,ஒரு அம்மா, தன்னோட மகளை Pre K.G.-ல் சேர்க்க 40,000-ம்
  பீஸ் கேட்டதா, ஸ்கூல் பற்றி பெருமையா சொன்னாங்க!

  ReplyDelete
 15. //பிள்ளைகளின் தகுதிக்கு கிடைக்கும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதே சிறந்த பலன் தரும்//

  உண்மையான வரிகள் ஆனால் இதை பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.

  ReplyDelete
 16. அம்பிகா said...
  அவசியமான பகிர்வு.
  பெற்றோர் ஆசை படுவது தவறில்லை. குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பது தான் தவறு. நீங்கள் கூறுவது போல் இன்னோரு சாய்ஸ் வைத்து கொள்ளலாம்.//

  குறுக்கு வழியை நாடாமல் இருக்க, இது ஒரு வாய்ப்பு மட்டுமே!
  மற்றபடி, பெற்றோர் மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.

  ReplyDelete
 17. சௌந்தர் said...
  நல்ல மதிப்பெண் பெற்று இப்படி போலி சான்றிதழ் வாங்கியது பேராசை காரணம//

  நிச்சயமாக.

  ReplyDelete
 18. Chitra said...

  ஒரு மாணவர் சிறு வயது முதலே, தான் டாக்டராக வேண்டுமென்கிற கனவுகளோடு படித்து, கடைசியாக சில புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில்,அது கிடைக்காமல் போகும் நிலையில், அந்த மாணவர் துவண்டு போய்விடுகிறார். அதனை தாங்கிக் கொள்ளமுடியாத பெற்றோர், சொத்து சுககங்களை விற்று தனியார் கல்லூரிகளில் சேர்த்துவிடுபவர்களும் உண்டு. சிலர் இந்தமாதிரி குறுக்கு வழியை நாடுவதும் உண்டு. முதலிலேயே பிள்ளைகளை, இரண்டு விதமான படிப்புக்குத் தயார் செய்யவேண்டும்./


  ..... true! இதில் பிள்ளைகளின் interests என்னவென்று பல பெற்றோர்களுக்கு தெரிவதே இல்லை... ம்ம்ம்... மாறுதல்கள் விரைவில் வரும் என்று நம்புவோம்.//

  ஆமாம், பிள்ளைகளின் ஆர்வம், திறமை இரண்டையும் கண்டறியவேண்டும்.

  ReplyDelete
 19. மதுரை சரவணன் said...

  உண்மை பெற்றேரே அனைத்து தவறுகளுக்கும் மறைமுகமாக உடந்தை... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள//

  ஆமாம், பதினேழு வயது பிள்ளைக்கு, எது நல்லது கெட்டது என்று ்ட்டதுஎப்படித் தெரியும்?
  பல வீடுகளில் பெற்றோரின் செயல்களால் பிள்ளைகள் வீணடிக்கப் படுகிறார்கள்.

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் said...
  பொண்ணு வீட்டுக்காரங்க முதல்ல டாக்டர் மாப்ளைக்கும்,எஞ்சினியர் மாப்ளைக்கும்தானே முதலிடம் தர்றாங்க?//

  ஆமாம் சார், எனக்கும் இது முதல்ல தெரியாம போயிட்டு. இப்ப வக்கில்ன்னா(எனது மகன், சட்டம் படிப்பதால்) பொண்ணு மட்டுமல்ல, வாடகைக்கு வீடும் கொடுக்க மாட்டாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்.

  ReplyDelete
 21. எஸ்.கே said...
  //பிள்ளைகளின் தகுதிக்கு கிடைக்கும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதே சிறந்த பலன் தரும்//

  உண்மையான வரிகள் ஆனால் இதை பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.//

  முட்டி, மோதி தெரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

  ReplyDelete
 22. எந்தக் குழந்தையும் பிறக்கும் போதே டாக்டராக வேண்டும் என்று நினைத்துப் பிறப்பதில்லை.
  எல்லாம் பின்னாட்களில் பெற்றோரும் சுற்றமும் சொல்லித் தருவதுதான். நாம் நினைத்தால்
  நிச்சயம் இராண்டு படிப்புகளுக்குத் தயார் செய்யமுடியும் என்கிற தங்களின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
  - ராமகிருஷ்ணன், மதுரை.

  ReplyDelete
 23. 'அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் படிப்பில்' என்ற உங்கள் கேள்விக்கு என்னாலியன்றவரை யோசித்ததில் :
  1) தத்தம் குடும்பப் பின்னணி, பொருளாதாரச் சூழ் நிலை, பெற்றோரின் 'வாங்கும் சக்தி' (ஆங்கிலத்தில் சொன்னால் 'affordability or financial viability to withstand cost of education'), படிக்கும் பிள்ளைகளின் சொந்த விருப்பு வெறுப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எதைச் செய்தாலும் நம் சக்திக்கும் அறிவுக்கும் உட்பட்டு நேர்மையாகவும், தர்மத்திற்கு ஊறு விளைவிக்காமலும் பிறர் மனம் புண்படாமலும், பண்புடனும் ஒவ்வொருவரும் (பெற்றோர், பிள்ளைகள் இருவருமே) நடந்து கொண்டால், அவரவர் தத்தம் தகுதிக்கேற்ற படிப்பு படிக்கலாம்.

  2) இதில் குழப்பம் வருவது எங்கே என்றால், எந்தத் துறையில் படித்தால் உடனே சும்மா வீட்டில் கிடக்காமல் தக்க பணி கிடைத்து, பின் அதற்கேற்ப தத்தம் தகவமைக்கேற்றவாறு தொடர்ந்த்து மாணவர் தம் கல்வி இன்ன பிற பிற்சேர்க்கைத் தகுதிகளை கூட்டிக்கொண்டு, வேலைச் சந்தையில் அல்லது தொழிற்சந்தையில் (சுய முன்னேற்றம் குறித்த தன்னார்வமும் சுய ஊக்குவிப்பும் அது சார்ந்த தொடர் முயற்சிகளால்) வேலை அல்லது தொழிலில் மேன்மேலும் முன்னேற அடியெடுத்து வைக்க வேண்டும்.

  3) நடப்புக் கால கட்டத்தில் 4 தொழில்களுக்கு வாழ்க்கை முழுவதும் என்றுமே ஓய்வின்றி (மரண பரியந்தம்) உழைக்க விருப்பமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கலாம் அ) மருத்துவம்: மனிதன் பிறப்பதிலிருந்து இறப்பு வரை அனைவருக்கும் எல்லாக் காலத்திலும் எல்லா வயதிலும் ஏதாவதோரு ஹெல்த் உபாதை வரும், அதற்கு முடிவே இல்லை. எனவே 58 வயதில் ஓய்வு என்பதை யோசிக்காமல் தொடர்ந்து உழைக்கலாம், பொருளாதார ரீதியாக மனிதன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம்; கூடவே, மருத்துவம் சார்ந்த பிற தொழில்கள், அதாவது மருத்துவமனை வளாகம்,மருத்துவர்கள், தாதியர், இன்ன பிற சிறப்புக் தொழில் (மருத்துவம் சார்ந்த) முனைவோருக்கும் இது சரியான பாதை.
  (ஆ) உணவகம், ஓட்டல், தங்கும் விடுதி: முன் சொன்ன பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்கு அத்தியாவசியமான தேவை உணவு. தரமான பொருள், தரமான காய்கறி, பழங்கள், இத்யாதியுடன் தரமான சுற்றுச் சூழ்னிலையில் நல்ல உணவு பரிமாற முடிந்தால் ஓட்டல், உணவுத்தொழில் நல்ல உதாரணம் அது சார்ந்த கல்வி பிற்காலத்திற்கு உதவும்.
  இ) வக்கீல்: மனிதன் வாழ்வில் எந்தக் காலத்திலும் எந்தச் சூழ் நிலையிலும் யாராவது எங்காவது எவரிடமாவது ஏதாவது வழக்கு வியாஜ்ஜியங்களில் உட்படுகிறார்கள். சில ஆண்டின் தொழில் அனுபவம் சேர்ந்தபின், நீதிபதியாகும் வாய்ப்பும் உள்ளது எனவே சட்டப்படிப்பும் ஒரு முன்மாதிரிதான்.
  (ஈ) சிவில் என்ஞினீரியங்க்: நாட்டில் அடிப்படைக்கட்டமைப்பு வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறுவதுதான். எனவே கட்டிடக்கலை, வடிவமைப்பு, அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சார்புள்ள தொழில் இங்கு அதிகம்; தவிர இன்ன பிற சார்புத் தொழில்களும் இதில் அடங்கும்.

  4) மேற்சொன்ன காரணங்களால், இவை யாவும் கல்வியை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை பெறுகின்றன.

  இன்னும் நிறைய சொல்லலாம், பிறகு நானே நிறைய பக்கங்களை ஆக்கிரமிக்க தோன்றும், நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 24. Sivasankaran said...

  //தத்தம் குடும்பப் பின்னணி, பொருளாதாரச் சூழ் நிலை, பெற்றோரின் 'வாங்கும் சக்தி' (ஆங்கிலத்தில் சொன்னால் 'affordability or financial viability to withstand cost of education'), படிக்கும் பிள்ளைகளின் சொந்த விருப்பு வெறுப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எதைச் செய்தாலும் நம் சக்திக்கும் அறிவுக்கும் உட்பட்டு நேர்மையாகவும், தர்மத்திற்கு ஊறு விளைவிக்காமலும் பிறர் மனம் புண்படாமலும், பண்புடனும் ஒவ்வொருவரும் (பெற்றோர், பிள்ளைகள் இருவருமே) நடந்து கொண்டால், அவரவர் தத்தம் தகுதிக்கேற்ற படிப்பு படிக்கலாம்//

  மிக நல்ல பல கருத்துக்களுடன் நெடிய பின்னூட்டமிட்ட தங்களுக்கு என் நன்றிகள் பல.

  ReplyDelete
 25. nammadesaththule maanvanin nadaththaiyavida avan peyarukku pinnal varum eluththukkale avanukku gouravam tharuvathaaga oru thappaana ennam ullathu , pala maanavargalpadikka aarvame ellaamal sutrithirinthu vendaatha ketta valakamkalukku adimai aaitu lifele settle aahanumpothu edhupola kurukkuvaliya naadaraan , enthakaalathule penngal neraiya padichchu melukku vara 5fig salaryum vangura, aanaal guys digree kuuda olunga mudikkama munneranumnu muttikkaraan ,adhan net result ethupola senjutu maattikaraanuga, thuttukoduththal kidaikkumnu nambaraan evanugalukku thuttuvangittu pattam alikka pala dubakuur palkalaikalum erukku, kodukkaravanum vangaravanum olunga erunthaal thaan endhakodumai oliyum

  ReplyDelete