Sunday, August 15, 2010

அகரமும், அலட்சியப் பள்ளிகளும்.

அகரம் பற்றிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் 15.8.10   காலை  9 மணிக்கு ஒளிப்பரப்பினார்கள்.
நிகழ்ச்சியில் ஒவ்வொருவர் பேசும்போதும், என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.  இது, எதோ எனக்கு மட்டும் கண்ணீர் வருவதாக  நான் நினைத்தேன்.  ஆனால், நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  இயக்குனர் பாலா அவர்கள், அகரம் தேர்ந்தெடுத்தவர்களின் விபரத்தை அறிந்தபோது, அவரால் அழுகையை அடக்க முடியாமல்  கேட்பதை நிறுத்திவிட்டதாகச்  சொன்னார்.   

கல்  உடைக்கும் பெற்றோரின் மகன் டாக்டருக்குப் படிப்பதும், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் கூலி வேலைப் பார்த்து, படிப்பைத் தொடர்வதும், மின்சார விளக்கு இல்லாத வீட்டுப் பிள்ளைகள்,  நல்ல மதிப்பெண் பெற்றதையும் நினைக்கையில்  நமக்குத் தெரியாத உலகம் ஒன்று இருப்பதை உணரமுடிந்தது. 
பிறக்கும் போதே வசதியான வீட்டுப்பிள்ளையான சூர்யாவுக்கு, எப்படி இவர்களின் வலி தெரிந்தது என்பதுதான் ஆச்சர்யம்.  அதற்காக திரு. சூர்யா அவர்களை, நாம்  அனைவாரும் பாராட்டத்தான் வேண்டும். மேலும் நன்கொடை வழங்கிய ஒருவர் பேசும்போது  "ஓரளவுக்கு மேல், பணம் வெறும்  பேப்பர் மாதிரிதான்" என்றார். எத்தனை உண்மை. அவருடைய பெயர் சரியாகத் தெரியவில்லை, மன்னிப்பாராக!
ஒரு மாணவன் தனக்கு பள்ளியில் கொடுத்த பரிசுத்தொகை  ஒரு லட்ச ரூபாயை அகரம் அமைப்பினரிடம் வழங்கிவிட்டு, அகரம் கொடுக்கும் உதவித்தொகையைப் பெறுவதை அறிந்தபோதும் நெகிழ்ந்துவிட்டேன்.

அகரம் அமைப்பினர், உதவிபெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்த விதம், அவர்களின் நல்ல மனது  மற்றும் உரியவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை, எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு, ஏழை மாணவர்களை கண்டறிய  கல்வித்துறை இயக்குனர்களின் ஒப்புதல் கடிதத்தோடு, சுமார் 850 கிராமப்புற பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், பதில் கிடைத்ததோ சுமார் 150  பள்ளிகளில் இருந்து மட்டும்தான் என்பதை பேராசிரியர் திரு. கல்யாணி அவர்கள் அறிவித்தபோது, என்னையறியாமல் தலையில் அடித்துக் கொண்டேன். எவ்வளவு வெட்கக்கேடான  விஷயம் பாருங்கள். பிறரால் கொடுக்கப்படுகின்ற  உதவியை, தனது மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்ககூட,  இந்த 'பொறுப்பு' ஆசிரியர்களுக்கு மனதில்லை. இவர்களிடம் கல்விக் கற்று,  நல்ல குடிமகனாக எப்படி ஒருவன் வரமுடியும்?

எனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் பலர், மிகச் சிறந்த சமுக சேவை செய்பவராகவும், நன்றாக கற்பிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்கள். ஆனால், அகரம் கொடுக்கும் புள்ளிவிபரம், வேறு மாதிரி உள்ளது. 
சுமாராக 700 பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க, வரும் ஆண்டில் அவர்கள் பல ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியளித்து, அகரம் உதவித் தொகைப் பெற சிபாரிசு செய்தால் மட்டுமே அந்தப் பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க முடியும். செய்வார்களா ஆசிரியர்கள்?
அப்படி செய்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.

41 comments:

 1. நானும் காலையில் சிறிது நேரம் பார்த்தேன். இதைப் படித்ததும் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

  ReplyDelete
 2. இடுகையின் மூலம் ஒரு நல்ல நிகழ்வை தெரியப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 3. இடுகையின் மூலம் ஒரு நல்ல நிகழ்வை தெரிவித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. அடடா .. நல்ல நிகழ்ச்சி. பார்க்க தவறி விட்டேனே.. பகிர்ந்தமைக்கு நன்றி; டிவியில் இந்த நிகழ்ச்சி பார்த்தாவது அந்த பள்ளிகளும் பதில் அனுப்புவார்கள் என நம்புவோம்..

  ReplyDelete
 5. நல்ல இடுகை. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்கிற வருத்தத்துடன்

  வெங்கட்.

  ReplyDelete
 6. உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.

  ReplyDelete
 7. நானும் கண்களில் நீர் வடிய இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன் .பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. அருமையான பதிவை பகிர்ந்து கொண்டதிற்கு முதலி நன்றி,


  நீங்கள் சொல்வது மிகச்சரிதான் அப்பா..

  யாரோ ஒருவர் சோம்பேறியாக, நன்மை தரக்கொடிய அடியை எடுத்து வைப்பதற்கு சங்கடப்படுவதினால் எத்தனை குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கபடுகிறது என்பதை நினைக்கையில் பதிக்க செய்கிறது அப்பா. இந்த மாதிரி தப்பு பண்றவங்கள ஒரே ஒரு தடவை உலகம் அறியுமாதிரி தண்டிக்கப்படும்போளுது இந்த தவறுகள் குறையும் என நம்புகிறேன் ...

  ReplyDelete
 9. விஜய் தொலைக்காட்சியில் வந்ததை வலைப்பூவில் வடித்ததற்கு பாராட்டுக்கள்.பெரும்பான்மையான தலைமையாசிரியர்கள் பொது நலத்தில் அக்கறை எடுப்பதில்லை.அதனால் தான் அரசுப்பள்ளிகள் பொலிவிழந்து ஓட்டை ஒட்சல் பாத்திரம் போல காணப்படுகின்றன. இது தனது பள்ளி என்ற எண்ணம் வர கல்வித்துறை அவர்களுக்கு மூளைச்சலவை செய்ய வேண்டும்.

  ReplyDelete
 10. பிளாக் ஐ படித்து கருத்து சொன்னமைக்கு நன்றி தொடர்ந்து படித்து ஆலோசனைகளை சொல்லுங்கள் அகரம் அறகட்டளை பற்றிய உங்களது பதிவு உண்மையை தெளிவுற சொல்லிருந்தது

  ReplyDelete
 11. //ராமலக்ஷ்மி said...
  நல்ல இடுகை.//

  மேடம், தங்களின் பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 12. //R Gopi said...
  நானும் காலையில் சிறிது நேரம் பார்த்தேன். இதைப் படித்ததும் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.//

  நன்றி சார், தவறு செய்த ஆசிரியர்கள்,
  வருந்த வேண்டுமே!

  ReplyDelete
 13. // அமைதிச்சாரல் said...
  அருமையான இடுகை..//

  நன்றி மேடம், தங்களின் பாராட்டுக்கு.

  ReplyDelete
 14. //Anonymous said...
  இடுகையின் மூலம் ஒரு நல்ல நிகழ்வை தெரியப்படுத்தியதற்கு நன்றி.//

  நன்றி சார்/மேடம்.

  ReplyDelete
 15. //முகுந்த் அம்மா said...
  அருமையான இடுகை//

  தங்களின் பாராட்டுக்கு,நன்றி மேடம்.

  ReplyDelete
 16. //மோகன் குமார் said...
  அடடா .. நல்ல நிகழ்ச்சி. பார்க்க தவறி விட்டேனே.. பகிர்ந்தமைக்கு நன்றி; டிவியில் இந்த நிகழ்ச்சி பார்த்தாவது அந்த பள்ளிகளும் பதில் அனுப்புவார்கள் என நம்புவோம்..//

  நன்றி சார், ஆசிரியர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

  ReplyDelete
 17. //வெங்கட் நாகராஜ் said...
  நல்ல இடுகை. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்கிற வருத்தத்துடன்
  வெங்கட்.//

  பாராட்டுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 18. //Chitra said...
  உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 19. // asiya omar said...
  நானும் கண்களில் நீர் வடிய இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.//

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 20. //விஜய் said...
  அருமையான பதிவை பகிர்ந்து கொண்டதிற்கு முதலி நன்றி,
  நீங்கள் சொல்வது மிகச்சரிதான் அப்பா..
  யாரோ ஒருவர் சோம்பேறியாக, நன்மை தரக்கொடிய அடியை எடுத்து வைப்பதற்கு சங்கடப்படுவதினால் எத்தனை குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கபடுகிறது என்பதை நினைக்கையில் பதிக்க செய்கிறது அப்பா. இந்த மாதிரி தப்பு பண்றவங்கள ஒரே ஒரு தடவை உலகம் அறியுமாதிரி தண்டிக்கப்படும்போளுது இந்த தவறுகள் குறையும் என நம்புகிறேன் ...//

  நன்றி விஜய்.

  ReplyDelete
 21. // JAIVABAIESWARAN said...
  விஜய் தொலைக்காட்சியில் வந்ததை வலைப்பூவில் வடித்ததற்கு பாராட்டுக்கள்.பெரும்பான்மையான தலைமையாசிரியர்கள் பொது நலத்தில் அக்கறை எடுப்பதில்லை.அதனால் தான் அரசுப்பள்ளிகள் பொலிவிழந்து ஓட்டை ஒட்சல் பாத்திரம் போல காணப்படுகின்றன. இது தனது பள்ளி என்ற எண்ணம் வர கல்வித்துறை அவர்களுக்கு மூளைச்சலவை செய்ய வேண்டும்.//

  நன்றி சார்.
  கல்வித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 22. //ஸ்ரீ ராமானந்த குருஜி said...
  பிளாக் ஐ படித்து கருத்து சொன்னமைக்கு நன்றி தொடர்ந்து படித்து ஆலோசனைகளை சொல்லுங்கள் அகரம் அறகட்டளை பற்றிய உங்களது பதிவு உண்மையை தெளிவுற சொல்லிருந்தது//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 23. thanks for ur sharing. some teachers r like that. v can,t change them . they r working for money only. its fate of our system.

  ReplyDelete
 24. சமூகப்பொறுப்புள்ள இடுகை.

  ReplyDelete
 25. மிக நல்ல பதிவு.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 26. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"னு சின்னதுல படிச்சு இருக்கோம்... இப்ப நேர்ல பாக்குறோம்... பெரிய பணி ... திரு.சூர்யாவை பாராட்டத்தான் வேண்டும் நிச்சியமாக... நல்ல பதிவு

  ReplyDelete
 27. அன்பின் அமைதி அப்பா

  அருமை அருமை - முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் அகரம் பற்றிய நிகழ்ச்சி கண்ட போதே மனம் நெகிழ்ந்தோம். சூர்யாவின் மனதினையும் சிவகுமாரின் வளர்ப்பினையும் பாராட்ட சொற்களே இல்லை.

  அகரம் மேன்மேலும் வளர்ந்து - ஏழைக்குழந்தைகளின் கல்வித்திறனை வளர்த்து - சேவை என்பதின் பொருள் புரிய - பணி செய்து புகழின் உச்சத்தினை அடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 28. சார் உங்களின் இந்த இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

  ReplyDelete
 29. மதுரை சரவணன் said...
  thanks for ur sharing. some teachers r like that. v can,t change them . they r working for money only. its fate of our system.//

  மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்.
  நன்றி.

  ReplyDelete
 30. சி.பி.செந்தில்குமார் said...
  சமூகப்பொறுப்புள்ள இடுகை.//

  தங்களின் பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 31. RVS said...
  மிக நல்ல பதிவு.
  அன்புடன் ஆர்.வி.எஸ்.//

  நன்றி சார்.

  ReplyDelete
 32. balaji said...
  good post.//

  நன்றி சார்.

  ReplyDelete
 33. அப்பாவி தங்கமணி said...
  "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"னு சின்னதுல படிச்சு இருக்கோம்... இப்ப நேர்ல பாக்குறோம்... பெரிய பணி ... திரு.சூர்யாவை பாராட்டத்தான் வேண்டும் நிச்சியமாக... நல்ல பதிவு//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 34. மோகன் குமார் said...
  சார் உங்களின் இந்த இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்//

  படித்தேன் சார், மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 35. cheena (சீனா) said...
  அன்பின் அமைதி அப்பா
  அருமை அருமை - முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் அகரம் பற்றிய நிகழ்ச்சி கண்ட போதே மனம் நெகிழ்ந்தோம். சூர்யாவின் மனதினையும் சிவகுமாரின் வளர்ப்பினையும் பாராட்ட சொற்களே இல்லை.
  அகரம் மேன்மேலும் வளர்ந்து - ஏழைக்குழந்தைகளின் கல்வித்திறனை வளர்த்து - சேவை என்பதின் பொருள் புரிய - பணி செய்து புகழின் உச்சத்தினை அடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா//

  தங்களின் பாராட்டுக்கு மிக மிக நன்றி ஐயா.

  ReplyDelete
 36. 'விதை' தொடர்பான அகரம் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த பொங்கலன்றும் பிறகு சுதந்திரதினத்தன்றும் வந்தது, பார்த்தபின் நாட்டின் கல்விச் சூழ் நிலை மிகவும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. சூர்யாவின் இந்த முயற்சி நல்ல பலனளிக்க வேண்டிக் கொள்கிறேன்.

  என்ன செய்வது, இந்த நாட்டில் இதைப்போல் எத்தனையோ சாபக்கேடுகள்!!

  ReplyDelete
 37. NICE.
  Read: http://kalviskm.wordpress.com/

  ReplyDelete