Sunday, February 20, 2011

ஓர் அபாய எச்சரிக்கை!

மதுரை அருகே அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் குடித்த 100 மாடுகள் பலியாகின. இதைப்பற்றி அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தது. " கண்மாயில் விஷம் கலந்து இருக்கலாம் அல்லது இப்பகுதியில் உள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியில் உள்ள கழிவு நீர் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது" இது பத்திரிகை செய்தி.

ஆங்காங்கே குளத்தில் மீன்கள் இறந்து ஒதுங்குவது வாடிக்கையாகிவிட்டது. இன்றும் ஒரு மாடு இறந்திருந்தால், இச்செய்தி இவ்வளவு தூரம் அனைவருக்கும் தெரிந்திருக்காது. வாயில்லா ஜீவன்கள் தங்களுடைய உயிரைக் கொடுத்து மக்களை எச்சரித்துள்ளது. எது எப்படியோ நூறு மாடுகள் இறப்பதற்கும் இன்னும் பல மாடுகள் உயிருக்கு போராடுவதற்கும் மனிதன் செய்யும் தவறே காரணம்.

நீர்நிலைகள் மனிதனின் கண்ணுக்கு எப்படித் தெரிகிறதோ தெரியவில்லை. அவைகளைப் பாழ்படுத்துவதில் போட்டிபோட்டுக் கொண்டு செயலில் இறங்குகிறான். நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் குளத்திற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கும் அதி மேதாவிகளே அதிகம்.

நீர்நிலைகளில் குப்பைக் கொட்டுவோரோ, கெமிக்கல் கழிவுகளை கலக்க விடுவோரோ, குடிநீர் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் நினைப்பெல்லாம் 'மினரல் வாட்டர்' குடித்துக் கொள்ளலாமென்று. அவையும் நிலத்தைடியிலிருந்து கிடைப்பதுதான் என்று சிந்திப்பதில்லை. இன்னும் சில பணக்காரர்கள், தாங்கள் இளநீர் குடித்துக் கொள்ளாம் என்று கூட நினைக்கலாம். ஆனால், வேர் மூலம் இளநீரில் விஷம் கலந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

மாடுகள் வைத்திருப்பவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் கிடையாது. குறைந்தப்பட்சம் மாடுகளுக்கு காப்பீடு கூட செய்திருக்க மாட்டார்கள். ஒரு மாட்டின் விலை பத்தாயிரம் என்றாலும் ரூ.பத்து லட்சம் இழந்து தவிக்கிறது அந்தக் குடும்பங்கள்.

அரசியல்வாதிகளுக்கோ வரும் தேர்தலில் 'எவன் தங்கள் கட்சியில் சேர்வான், எந்தக் கம்பெனிக்காரன் பணம் கொடுப்பான், எந்தக் கட்சி நம்மை சேர்த்துக் கொள்ளும்' என்ற சிந்தனை மட்டும்தான். யார் செத்தாலென்ன, எவன் குடும்பம் பாழாய்ப் போனாலென்ன?

அபாயச் சங்கு, இன்று மாடுகளின் இறப்பு வடிவத்தில் ஊதாப்பட்டுள்ளது. எத்தனை பேர் காதில் விழப்போகிறதோ?

.


9 comments:

  1. மனுஷன் செய்தாலே கவலைப் படறது இல்லை. இதுல மாடுங்களை பத்தி நம்ம அரசியல்வாதிகள் எங்கக் கவலைப் படபோறாங்க

    ReplyDelete
  2. உயிருக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது! செத்தது மாடுகள் தானே என்று மெத்தனமாக இருந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது. இயற்கையைக் கொஞ்சம் கொஞ்சமாய் சாகடித்து நமக்கே குழி தோண்டிக்கொண்டு இருக்கிறோம்!

    ReplyDelete
  3. muthu ramalingam
    to me

    show details 4:56 PM (1 hour ago)

    muthu ramalingam has left a new comment on your post "ஓர் அபாய எச்சரிக்கை!":

    hi,
    do you know about xxxx? he is one of the right hand of yyyy and local rowdy, he is dominant that area. he is one to be remove from that area if he removed from that place all the problems automatically settle down.///



    மேலே உள்ள கமெண்டில் சில பெயர்கள் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்ததால் அதை நீக்கி விட்டேன். திரு. முத்து ராமலிங்கம் மன்னிப்பாராக.

    ReplyDelete
  4. வருத்தமான செய்தி. சமூக அக்கறையுடன் தாங்கள் செய்திகளை பகிர்கிறீர்கள்

    ReplyDelete
  5. பேப்பர்ல வாசிச்சப்போ திக்னு இருந்துது. மக்கள் குடிக்காம இருந்தாங்களேன்னு நிம்மதி.

    ReplyDelete
  6. வாயில்லா ஜீவனுங்கள வாயில போட்டுக்கொண்ட அந்த நாதாரிகள் யாரோ!

    ReplyDelete
  7. கண்டும் காணாம இருக்குது அரசு. என்ன செய்றது? ஆதங்கம் தான் பட முடியும்.

    ReplyDelete
  8. தவறு செய்பவர்களுக்கு சரியான தண்டனை கிடைப்பதில்லை,அது பாண்டிய மன்னரின் ஆட்சியோடு முடிந்துவிட்டது,

    ReplyDelete
  9. இந்தப் பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு நன்றி.

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete