Monday, March 21, 2011

பிறவிக் குணம் மாறுமா?










திரு.தமிழருவி மணியன் அவர்கள் கொஞ்ச நாட்களாக அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். பல வருடங்களாக அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து நடுநிலையோடு அவர் எழுதி உள்ளதை, நடுநிலையோடு படித்ததால் வந்த சிந்தைனைதான் இங்கே பதிவாக வருகிறது.



பெரும்பகுதி
நான் எழுதுவதெல்லாம் எனது அனுபவத்தில் கிடைத்தவைகள் மட்டுமே. இங்கேயும், என்னுடன் பிறந்தவர்கள், படித்தவர்கள், எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னையும் சேர்த்து பல வருடங்களாக எங்களின் செயல்கள் எப்படி உள்ளது என்று சிந்தித்தேன்.

1. எனது நண்பர் (பெயரைத் தவிர்த்துவிட்டேன்) அவரின் 13-வது வயதில், ஒரு வருடம் மட்டுமே அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதே சிந்தித்து பேசுவார். அவரின் நடையில் ஒரு கம்பீரம் தெரியும்.எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த நண்பரை பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகச் சந்தித்தேன். அப்பொழுதும், நான் பார்த்த குணங்களுடன், பணியில் நேர்மையாகவும், சிறந்த மேலலாளராக பணியாற்றி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

2.என்னுடன் படித்த காதர் என்கிற நண்பர், பல வருடங்களாக ஒரே கொள்கையோடு இருக்கிறார். அவர் ஒரு பகுத்தறிவாதி. ஆனால், மனித நேயம் மிக்கவர்.

மோசமான உதாரணங்களைச் சொன்னால், தேவையற்ற பிரச்சினைகள் வரும். அதனால், அவைகளைத் தவிர்க்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


'விளையும் பயிர் முளையிலையே தெரியும்' 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' போன்ற வழக்கு மொழிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மையை அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுதும், ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோன்றுகிறது.

.
படங்கள் உதவி: கூகிள்

16 comments:

  1. //ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோன்றுகிறது//

    இருக்கலாம்.. பிறவிக்குணம் மட்டையை வெச்சு கட்டினாலும் போகாதுன்னு சொல்லுவாங்க :-))

    வேண்டாதகுணங்களை ஒழிக்க, தானே முயற்சி செய்து மாற்றிக்கொள்ள முடியாதா என்ன?? :-)

    ReplyDelete
  2. பிறவிக் குணம் என்று ஒன்று கிடையவே கிடையாது. நாம் வளரும் சூழ்நிலையே அதை தீர்மானிக்கிறது. ஒரு நல்ல சூழலில் நாம் இருப்போமேயானால் அதுவே நம்மை தொற்றிக்கொள்ளும். ;-)

    ReplyDelete
  3. நம் குணத்திற்கு சந்தர்ப்பம் சூழ் நிலையே காரணம்.
    பிறந்தபோது இருந்த குழந்தை மனமா வளர்ந்தபிறகு
    இருக்கிரது? இல்லியே?

    ReplyDelete
  4. Though you do not tell the name, We know who is referred here.

    ReplyDelete
  5. நல்ல ஆய்வு. ஆனால் மாறாகவும் பல பேரிடம் கண்டதுண்டு. சாரல் சொல்லியிருப்பது போல சிறுவயதில் காணப்பட்ட வேண்டாத குணங்களை அறவே துறந்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் பலரும்.

    ReplyDelete
  6. //இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.//

    வேற யாரையும் சொல்றதைவிட என்னை பற்றி சொல்கிறேன் :))

    கல்லூரி காலம் வரை பிடிவாத குணம் மிக அதிகம் உண்டு ஆனா இப்போது இல்லை என்றாலும் சில சமயங்களில் பிடிவாதம் எட்டி பார்ப்பது உண்டு...சூழ்நிலை பார்த்து அதை தவிர்த்துவிடுவேன்.

    அதனால் வேண்டாத பிறவி குணம் என்று ஒன்று இருந்தாலும் சூழ்நிலையும், சுய கட்டுப்பாடும் நம்மை வழி நடத்தும் என்று எண்ணுகிறேன்.

    ஆனால் சில குணங்கள் மறைந்ததுபோல் தெரிந்தாலும் அதற்கேற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிவந்து விடும் என்பது என் கருத்து. :))

    நல்லதொரு ஆய்வு. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அமைதிச்சாரல் said...

    //இருக்கலாம்.. பிறவிக்குணம் மட்டையை வெச்சு கட்டினாலும் போகாதுன்னு சொல்லுவாங்க :-))//

    புதுசா ஒன்னு தெரிஞ்சிகிட்டேன். நன்றி.

    // வேண்டாதகுணங்களை ஒழிக்க, தானே முயற்சி செய்து மாற்றிக்கொள்ள முடியாதா என்ன?? :-)//

    முடியும் மேடம். நம்மிடமுள்ள தேவையற்ற அல்லது தவிர்க்க வேண்டிய குணங்கள் எவை என்று சிந்தித்து, விட்டொழிக்க வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் அப்படி செய்வதில்லை என்பதே உண்மை.

    படித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  8. RVS said...
    //பிறவிக் குணம் என்று ஒன்று கிடையவே கிடையாது.//

    ஆமாம் சார், இயற்கைக் குணம் என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால், எங்கள் பகுதியில் பிறவிக்குணம் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் அடிப்படையான சில குணங்கள் இருக்கும். அவை மாறாது என்பதே என் கருத்து.

    //நாம் வளரும் சூழ்நிலையே அதை தீர்மானிக்கிறது. ஒரு நல்ல சூழலில் நாம் இருப்போமேயானால் அதுவே நம்மை தொற்றிக்கொள்ளும். ;-)//

    சூழ்நிலை நம்முடைய இயல்பை மாற்றும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒரே வீட்டில் பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த, எனக்கும் எனது சகோதரர்களுக்கும் வேறுபட்ட குணங்கள் இருப்பதை எங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் அறிவார்கள்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி சார்.

    ReplyDelete
  9. ராஜேஷ், திருச்சி said...

    //piravi kunam pogadhu dhan//

    நன்றி சார்.

    ReplyDelete
  10. Lakshmi said...
    //நம் குணத்திற்கு சந்தர்ப்பம் சூழ் நிலையே காரணம்.பிறந்தபோது இருந்த குழந்தை மனமா வளர்ந்தபிறகு இருக்கிரது? இல்லியே?//

    உண்மைதான் மேடம். சந்தர்ப்ப சூழ்நிலைதான் நம்முடைய குணத்தைத் தீர்மானிக்கிறது. 'நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை, எதிரி தீர்மானிக்கிறான்' என்பார்கள்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையான சில இயல்புகள் மாறாமல் இருக்கும். இதில், விதிவிலக்கான மனிதர்களும் உண்டு.

    ரொம்ப நன்றி மேடம்.

    ReplyDelete
  11. மோகன் குமார் said...
    Though you do not tell the name, We know who is referred here.//

    நான் தனிப்பட்ட யாரையும் சுட்டிக் காட்டவில்லை. இந்தப் பதிவின் நோக்கமே படிப்பவர்களுக்கு, யாராவது ஒரு நபராவது நினைவுக்கு வரவேண்டும் என்பதுதான். அப்படி உங்களுக்கும் ஒரு நபர் மனதில் தோன்றி இருக்கலாம். அந்த வகையில் இந்தப் பதிவு வெற்றி கண்டிருக்கிறது.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  12. என்னையே நான் பரிசீலித்துக் கொள்கிறேன், இப்பதிவைப் படித்தபின்.

    ReplyDelete
  13. பிறவி குணம் என்பது இல்லை,நாம் வளரும் சூழ்நிலை,அனுபவம்,நல்ல பண்புகள்,நல்ல நண்பர்கள்,இவை அனைத்தையும் விட சுயசிந்தனை
    சுய கட்டுப்பாடு,இது போன்ற மனித இயல்புகள் பின்பற்றினால் பிறவி குணம் காணமல் போய்விடும்,
    சார் உங்கள் பகிர்வு அருமை, நல்ல சிந்தனை

    ReplyDelete
  14. சராசரி மனிதர்களோடு அரசியல்வாதிகளை எப்படி ஒப்பிட முடியும் ............. நியாயம் பேசும் இந்த தமிழருவி மணியனின் குணமே பலமுறை மாறியிருக்கிறதே .............

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
    அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே

    "விதை ஒன்னு போட்ட சுரை ஒண்ணா முளைக்கும்"

    ReplyDelete
  15. நல்ல சிந்தனையை தூண்டும் பிரமாத பகிர்வு

    ReplyDelete