Tuesday, July 5, 2011

கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு!


குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை. நேற்று நான் படித்து செய்தி, எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. அது என்னவெனில், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் நானோ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மோட்டார் சைக்கிள், டிவி செட்டுகள், மிக்சி வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.அவசரப்படாதீங்க, இது தமிழ்நாட்ல இல்ல. ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜுனு மாவட்ட சுகாதார துறை அலுவலகம்தான் இப்படி அறிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இன்னும், இருபது ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் நாம் சீனா-வை முந்தி விடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட, இதுல மட்டுமாவது உலகத்தில் முதலிடம் பிடிக்கலாம்ன்னு பார்த்தா, அதுக்கும் விடமாட்டாங்க போலிருக்கேன்னு உங்க மனசு சொல்லுதா?

இன்று எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், எதற்கெடுத்தாலும் அடிபிடி என்கிற சூழ்நிலை. பேருந்து, தொடர் வண்டி, பெட்டிக்கடை முதல் பெரியக் கடைகள் வரை, எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம். இது மேலும் அசுர வேகத்தில் வளராமல் இருக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முந்தைய அரசு குழந்தைப் பெற்றுக் கொண்டால் ஆறாயிரம் ரூபாய்க் கொடுத்தது. ஆனால், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு சொற்பத் தொகையே சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது.

ஆண்களுக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால், வாசெக்டமி செய்து கொள்ளும் ஆண்களுக்கு, குறைந்தப் பட்சம் பத்தாயிரம் ரூபாய்க் கொடுக்கலாம். இது பெண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை வழங்கலாம். பெண்களின் மீது அக்கறை உள்ள அரசு என்பதால், தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் இப்படி ஒரு புரட்சிக்கரமான திட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவைப் பாருங்கள்

திருந்தவே மாட்டார்களா?!

மக்கள் பெருக்கத்தின் அபாயம் புரியும்.

11 comments:

 1. தேவையான பகிர்வு.... அரசாங்கமே ‘Incentive' என்பதில் இருந்து “Dis-incentive" என்ற முறைக்கு மாறி விட்டது பல வருடங்களுக்கு முன்பே....

  ReplyDelete
 2. நல்ல கருத்துக்கள்!

  இன்றைய சூழ்நிலைக்கு மிக அவசியமான பதிவு!

  ReplyDelete
 3. nalla pathivu,,,
  valththukkal,,,,


  can you come my said?

  ReplyDelete
 4. மக்கள் கூட்டம்ன்னு சொல்றதைவிட வெள்ளம்ன்னே சொல்லலாம்..அவ்ளோ பெருகிடுச்சு :-(

  ReplyDelete
 5. >
  குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை

  ஹா ஹா ஓப்பனிங்கலயே கோபத்தோட ,ஆதங்கத்தோட ஸ்டாட்ர்ர்ட்டட்

  ReplyDelete
 6. நல்ல முயற்ச்சிதான்...

  இதை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தி மக்கள் தொகை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்...

  ReplyDelete
 7. ஜனங்க இதுக்குகூட ஏதாவது இலவசமா கொடுத்து இழுக்க வேண்டியிருக்கு..


  என்ன செய்வது...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. //வெங்கட் நாகராஜ் said...

  தேவையான பகிர்வு.... அரசாங்கமே ‘Incentive' என்பதில் இருந்து “Dis-incentive" என்ற முறைக்கு மாறி விட்டது பல வருடங்களுக்கு முன்பே....//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post_11.html

  மேலும் இந்தப் பதிவை வைத்து ஒரு பதிவு எழுதிய தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. //மனோ சாமிநாதன் said...

  நல்ல கருத்துக்கள்!

  இன்றைய சூழ்நிலைக்கு மிக அவசியமான பதிவு!//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 11. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete