Wednesday, May 18, 2011

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


22 comments:

  1. எல்லாவற்றிலும் அவசரம்! பாசக்கயிற்றோடு எமன் வந்தால் இது போல அவசரப்படுவார்களா என்று தெரியவில்லை. டிராபிக் சிக்னலில் இருந்து கட்டணக் கழிவறை வரை முந்தி செல்கிறார்கள். கோவில் குளத்திற்கு சென்றாலும் இதே கதிதான். மக்கள்தொகை பெருத்துவிட்டது. ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். ஆனால் ரிஸர்வர்ட் கோச்சில் ஏறுவதற்கும் ஆன்லைனில் விண்ணப்பம் இருந்தும் முண்டி அடிப்பதற்கும்..... என்ன சொல்வது என்றே தெரியவில்லை... இவர்களே கும்பல் கூட்டி பெரிது படுத்துகிறார்கள். எல்லாவற்றையும். நல்ல பகிர்வு அமைதி அப்பா! ;-))

    ReplyDelete
  2. அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)>>>>

    ஹா...ஹா... சின்ன வயசிலேயே முண்டியடிக்க பழகிருரானுங்க

    ReplyDelete
  3. யோசிக்கும் திறனில்லாததையே இது காட்டுகிறது. ஆர்விஎஸ்ஸின் பின்னூட்டமும் அர்த்தம் சேர்க்கிறது.

    ReplyDelete
  4. விழிப்புணர்ச்சியை மக்களிடத்திலே தூண்டுகிற பதிவு, சில பல விஷயங்களுக்கு நம்மிடையே காரண காரியங்கள் இல்லை , அது போலவே இதுவும் , இதுதான் இந்தியா இன்னும் இப்படி இருந்தால்தான் இந்தியா, பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. இதெல்லாம் மாறவே மாறாது!

    ReplyDelete
  6. வரிசைமுறைங்கிறது நம்ம ஊர்ல எப்ப வருமோ!!

    ReplyDelete
  7. தமிழனின் அடையாளங்கள் இவை! என்றும், எங்கும் மாறாது!

    ReplyDelete
  8. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். நாம்ம நாட்டில் நிலவும் நிச்சயமின்மை, மற்றும் வதந்திகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  9. பிள்ளைப்பாசம்தான் காரணம். நர்சரிப்பள்ளிகளில் காரணம் விண்ணப்பம் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் வினியோகிக்கப்படும் என்பதால். முன்பதிவு பெட்டியிலும் முந்துர முந்துதல் தம் பொருட்களை படிக்கைக்குக்கீழே வைக்கமுடியாமல் தமக்கு முந்தி வந்தவர்கள் வைத்துவிடுவார்களோ என்ற பயம். பொறியியல் மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பங்களின் காரணம் ஒருவேளை இன்று தீர்ந்து விட்டது நாளை வாருங்கள் என்று வெறுங்கையுடன் வீடு திரும்பினால் பெண் அல்லது பிள்ளையின் தாயார் 'உங்களுக்கு அக்கறையே இல்லை !' என்று திட்டிவிடுவார் என்ற பயமும், நாளையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். பேருந்துகளில் முட்டிமோதியேறுவது, உட்கார இருக்கை கிடைக்கும் என்பதாலும் அல்லது நிற்க இடம் கிடைக்கும் என்பதாலும், அல்லது தாம் ஏறுவதறுக்குமுன் பேருந்து நகன்று விட்டால் அடுத்த பேருந்து எப்போது வரும். எப்போது குறித்த் நேரத்தில் போய்ச்சேருவது என்ற பயம். பயம்..பயம்..பயம்..

    கிராம வாழ்க்கையில் இப்படிப்பயங்கள் இல்லை. வாழ்க்கை மெதுவாகச்செல்லும். அதனால் மன உலைச்சலும் அழுத்தமும் இல்லை.

    நாம் மக்களைக்குறை சொல்லி ஒன்றும் ஆகாது. மக்கள் செயப்படுபொருட்கள். செய்விப்பது வாழ்க்கைக் காரணிகள். அக்காரணிகள் எவ்வாறு வந்தது? அவற்றை மாற்றி மக்களின் வேகத்தைக்குறைக்கலாமா என்ற ஆராய்ச்சியை முடிந்தால் செய்யுங்கள்.

    ஜோ. அமலன்.

    ReplyDelete
  10. விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைப்பதும் எல்லாருக்கும் கிடைக்கும் என்பதும் சரியாக அறிவிக்கப் படவில்லையோ? ட்ரெயினில் ஏற முந்துவதற்கும் விண்ணப்பம் வாங்க லைன் கட்டுவதற்கும் வேறே வேறே உந்துதல்கள் இல்லையோ? இரணடையும் சேர்த்து மக்களுக்குப் பொறுமையில்லை என்ற judgment, apple is not like orange என்பது போல் அல்லவா?

    ReplyDelete
  11. //RVS said...
    எல்லாவற்றிலும் அவசரம்! பாசக்கயிற்றோடு எமன் வந்தால் இது போல அவசரப்படுவார்களா என்று தெரியவில்லை. டிராபிக் சிக்னலில் இருந்து கட்டணக் கழிவறை வரை முந்தி செல்கிறார்கள். கோவில் குளத்திற்கு சென்றாலும் இதே கதிதான். மக்கள்தொகை பெருத்துவிட்டது. ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். ஆனால் ரிஸர்வர்ட் கோச்சில் ஏறுவதற்கும் ஆன்லைனில் விண்ணப்பம் இருந்தும் முண்டி அடிப்பதற்கும்..... என்ன சொல்வது என்றே தெரியவில்லை... இவர்களே கும்பல் கூட்டி பெரிது படுத்துகிறார்கள். எல்லாவற்றையும். நல்ல பகிர்வு அமைதி அப்பா! ;-))//

    நன்றி சார்.

    ReplyDelete
  12. தமிழ்வாசி said,
    //அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)>>>>

    ஹா...ஹா... சின்ன வயசிலேயே முண்டியடிக்க பழகிருரானுங்க //

    என்னத்தச் சொல்றது?!
    நன்றி சார்.

    ReplyDelete
  13. சுந்தர்ஜி said,
    //யோசிக்கும் திறனில்லாததையே இது காட்டுகிறது. ஆர்விஎஸ்ஸின் பின்னூட்டமும் அர்த்தம் சேர்க்கிறது.//

    நண்பர் ஆர்வி எஸ் பல்வேறு சமயங்களில் இந்தமாதிரி விஷயங்களை எழுதுவார். அப்படி எழுதப்பட்டதால்தான் இப்படி ஒரு பதிவு.
    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  14. A.R.RAJAGOPALAN said,

    //விழிப்புணர்ச்சியை மக்களிடத்திலே தூண்டுகிற பதிவு,//

    மிக்க நன்றி.

    ************

    //சில பல விஷயங்களுக்கு நம்மிடையே காரண காரியங்கள் இல்லை , அது போலவே இதுவும் //

    ஹா ஹா ஹா ஹா ஹா ......

    *******************

    //இதுதான் இந்தியா இன்னும் இப்படி இருந்தால்தான் இந்தியா, பாராட்டுக்கள். //

    இப்படி மனம் வெறுத்துச் சொன்னால் எப்படி?!

    ************

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said,

    //இதெல்லாம் மாறவே மாறாது!//

    ஊதுற சங்க ஊதுவோம், கேட்பவர்கள் காதில் விழட்டும் என்பார்கள்.

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  16. ஹுஸைனம்மா said,

    //வரிசை முறைங்கிறது நம்ம ஊர்ல எப்ப வருமோ!! //

    அப்படி சீக்கிரம் வர வேண்டுமென்பதே நம் அனைவரின் விருப்பம்.
    நடக்கும் என்று நம்புவோம்.

    வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  17. சிநேகிதன் அக்பர் said

    //உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.//

    நன்றி சார்.

    **************

    //நம்ம நாட்டில் நிலவும் நிச்சயமின்மை, மற்றும் வதந்திகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.//

    நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். இது போன்றவைகள் பாமர மக்களை வேண்டுமானால் பாதிக்கலாம். ஆனால்,நாம் குறிப்பிடுவது படித்த நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அல்லவா?!
    இவர்கள் மாற வேண்டும். இல்லையெனில், நாம் இன்னும் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை!

    ReplyDelete
  18. **********************
    ஜீ...said,

    //தமிழனின் அடையாளங்கள் இவை! என்றும், எங்கும் மாறாது! //

    இந்த அடையாளம் மாற வேண்டும். அதற்கு நாம்தான் பாடுபட வேண்டும். இப்படி சொல்லி விட்டுட்டா எப்படி?!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வணக்கம் ஜோ. அமலன் சார்,
    தங்களுடைய கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தாலும். நமக்குக் கிடைக்கும் என்று தெரிந்த பிறகும் அடித்துக் கொள்வது நியாயமா?

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  20. அப்பாதுரை said...

    //விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைப்பதும் எல்லாருக்கும் கிடைக்கும் என்பதும் சரியாக அறிவிக்கப் படவில்லையோ? ட்ரெயினில் ஏற முந்துவதற்கும் விண்ணப்பம் வாங்க லைன் கட்டுவதற்கும் வேறே வேறே உந்துதல்கள் இல்லையோ? இரணடையும் சேர்த்து மக்களுக்குப் பொறுமையில்லை என்ற judgment, apple is not like orange என்பது போல் அல்லவா?//

    எல்லாவற்றிலும் தான்தான் முந்தியிருக்க வேண்டும் என்கிற வியாதி மனிதனை ஆட்டிப்படைக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete