Friday, October 7, 2011

வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி - நல்ல ஆரம்பம்!கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் சுயேட்சையாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  இதற்கு முன், இவர் எந்தக அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையாம்.   தற்பொழுது, அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துள்ளது. இதோ விபரம்....

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் திரு. சந்தானம் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு!  அவரை  குரோம்பேட்டையின் 'டிராபிக் ராமசாமி' என்று சொன்னால் சரியாக இருக்கும். இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களின் அலட்சியத்தை அம்பலப்படுத்துபவர். 

                                              படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 'புதிய தலைமுறை' பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பு, மூன்று பக்கங்களில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  மூன்று முறை  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  இங்கு சென்று படிக்கவும்.ஒரு நகாராட்சியில் இரண்டு பெரியக் கட்சிகளின் வேட்பாளரும் தாதாக்கள். எப்படியோ ஒரு தாதா பதவிக்கு வருவது உறுதி.  இப்படி, பல ஊர்களில் அரசியல் கட்சிகளில் நல்ல வேட்பாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில், இந்த மாதிரியான சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள்  வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.  அவர்களும் அதிகாரத்தின் துணைக் கொண்டு, பல நல்ல காரியங்களை செய்வார்கள் என்று நம்பாலாம். இல்லையெனில், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.
எது எப்படியோ, இப்போதைக்கு தோழர்களுக்கு ஒரு 'வணக்கம்' போடலாம்!  
.

24 comments:

 1. நல்ல தகவல் நண்பா

  வணக்கம் போட்டுருவோம்

  ReplyDelete
 2. நல்ல முன்னுதாரணமாய் இருக்கிறதே
  இதை எல்லோரும் கவனத்தில் கொள்ளலாமே
  இதை பதிவாக்கி அனைவரும் அறியச்
  செய்தமைக்கு நன்றி
  த.ம 1

  ReplyDelete
 3. தோழர்களுக்கு வணக்கம்!

  ReplyDelete
 4. நல்லமுன்னுதராணம்தான். நல்லதகவலும் கூட.

  ReplyDelete
 5. சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள் வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.ஆனா வாய்ப்பு கிடைக்குமா சார் ?????????????

  ReplyDelete
 6. வைரை சதிஷ் said...

  // நல்ல தகவல் நண்பா

  வணக்கம் போட்டுருவோம்//

  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. இது காலம் காலமாய் மார்க்சிஸ்ட் கட்சியில் நடப்பது தான், கேரளாவில் சில மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்களாக கூட இருக்க மாட்டார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்... பொதுவுடைமை கட்சிகளின் வேட்பாளருக்கு தேர்தல் செலவு செய்வது வேட்பாளர்கள் அல்ல, கட்சியே... இப்படி எண்ணற்ற நல்ல விஷயங்கள் வைத்துள்ள கட்சி ஒன்றுக்கும் ரெண்டுக்கும் அலையும் பொழுது தான் மனம் வலிக்கிறது

  ReplyDelete
 8. Ramani said...

  // நல்ல முன்னுதாரணமாய் இருக்கிறதே
  இதை எல்லோரும் கவனத்தில் கொள்ளலாமே
  இதை பதிவாக்கி அனைவரும் அறியச்
  செய்தமைக்கு நன்றி//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 9. // மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.//

  நல்ல விசயம். பார்ப்போம்.

  ReplyDelete
 10. கோகுல் said...

  //தோழர்களுக்கு வணக்கம்!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 11. Lakshmi said...

  //நல்லமுன்னுதராணம்தான். நல்லதகவலும் கூட.//

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 12. வெங்கட் நாகராஜ் said...

  // நல்ல தகவல்....//

  நன்றி சார்.

  ReplyDelete
 13. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  // ம் ...//

  நன்றி சார்.

  ReplyDelete
 14. manivannan said...

  //சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள் வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.ஆனா வாய்ப்பு கிடைக்குமா சார் ?????????????//

  இது ஒரு ஆரம்பம்தான். பார்ப்போம்...!

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 15. நல்ல பதிவு. நல்லது நடக்கட்டும்.

  ReplyDelete
 16. suryajeeva said...

  //இது காலம் காலமாய் மார்க்சிஸ்ட் கட்சியில் நடப்பது தான், கேரளாவில் சில மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்களாக கூட இருக்க மாட்டார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்...//

  நல்ல விஷயமா இருக்கே...!
  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 17. த. ஜார்ஜ் said...

  **** /// மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.//

  நல்ல விசயம். பார்ப்போம்.///***


  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 18. ராமலக்ஷ்மி said...

  // நல்ல பதிவு. நல்லது நடக்கட்டும்.//

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 19. suryajeeva said...

  //இது காலம் காலமாய் மார்க்சிஸ்ட் கட்சியில் நடப்பது தான்,//

  அப்படியா, எனக்கு இப்பொழுதான் தெரிய வருகிறது.

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. த. ஜார்ஜ் said...

  ***~ // மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.//

  நல்ல விசயம். பார்ப்போம்.~***

  அதற்கான வாய்ப்பை மக்கள் கொடுக்கவில்லை.

  ReplyDelete
 21. ராமலக்ஷ்மி said...

  //நல்ல பதிவு. நல்லது நடக்கட்டும்.//


  அவ்வளவு சீக்கிரம் நடக்காது போல் உள்ளது.

  நன்றி மேடம்.

  ReplyDelete
 22. இந்தப் பதிவினை படித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. மேலும் திரு. சந்தானம் அவர்கள் இந்த முறையும் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete