தமிழக அளவில் பிரபல ஜோதிடராகத் திகழும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் திரு திருப்பதி(எ)ம.திருப்பதிராஜன் மற்றும் திரு ம. பாலாஜி ஆகியோரின்
தந்தையார் திரு 'பூ மகாலிங்கம்' (எ) திரு. இரா. மகாலிங்கத்தேவர் அவர்கள் 03.12.2025 புதன்கிழமை மாலை இயற்கையெய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் மனவேதனையடைகிறேன்.
இவர், பல ஆண்டுகள் முத்துப்பேட்டையில் பூக்கடை நடத்தி வந்தவர்.
திரு திருப்பதி அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை, குரோம்பேட்டையில் வசித்தபோது, அங்கு வரும்போதெல்லாம், பேத்தியை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கும் வருவார். அப்போது, அவருடன் நிறைய ஊர் தகவல்களை பேசிக்கொண்டிருந்தது இப்போது நினைவலைகளில் வந்துசெல்கிறது. அதன் பிறகு, அவருடன் பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
No comments:
Post a Comment