எனது பிறந்த ஊரான கருப்பம்புலம் நண்பர், திரு S. K. வெங்கடாசலம் & திருமதி திலகா தம்பதியினரின் மகன் S. K. V. அரவிந்தன், B.E மற்றும் சென்னை, வேளச்சேரி, திரு. S. ஆனந்தசேகர் & திருமதி. A. சுமதி தம்பதியரின் மகள்
A. ஐஸ்வர்யா, B.Sc., M.A., D.Fit.& style இவர்களது திருமணம் தோப்புத்துறை அம்மன் திருமண மஹாலில் கடந்த 7.6.26 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நண்பர்கள் மூலம் அறிந்தேன்.
நண்பர் திரு SKV அவர்கள்
என்னை விட இரண்டு வயது இளையவர் என்பதால், கருப்பம்புலம் பள்ளியில் இரண்டாண்டுகள் எனக்கு பின்னால் படித்தார்.
ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.
அந்த நாள்களில் பள்ளிக்கு நாகரீகமாகவும், நேர்த்தியாகவும் உடை உடுத்தி வருகின்ற ஒன்றிரண்டு மாணவர்களில் அவரும் ஒருவர்.
அந்த வயதிலேயே மிடுக்கான தோற்றமும், தலைமைப் பண்பும் அவரிடம் இயல்பாக இருந்ததை கண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என்று அனைவரிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர்.
நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இருவருக்கும் இடையே மெல்லிய நட்பு எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கும்.
எனது மகன் அமைதி விரும்பி சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்தபோது, நண்பர் என்னிடம் ஆர்வமுடன் விசாரித்ததோடு, சட்டப்படிப்பு குறித்து நேர்மறையான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார்.
மேலும், நேரில் பார்க்கும்போது என்னுடைய பதிவுகளை பாராட்டுவதோடு, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துபவர்.
நண்பர் வீட்டு திருமண வரவேற்பு சென்னையில் எங்கள் வீட்டருகே 13.06.26 அன்று மாலையில் நடைபெற உள்ளதையும், அழைப்பிதழ் வந்திருப்பதையும் ஊரில் உள்ள, என்னைவிட மூத்த நண்பரிடம் தெரிவித்தேன்.
அப்போது அந்த நண்பர், தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நண்பர் SKV உதவியதைத் தெரிவித்ததோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் SKV அவர்கள் அக்காவின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றதையும் பகிர்ந்துக் கொண்டார். இதே தகவலை சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவரும் ஏற்கனவே என்னுடன் பகிர்ந்திருந்தார்.
வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்த நண்பரும், அவரது சம்பந்தியும் அன்புடன் குடும்பத்தோடு வாங்க என்றழைத்தார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் குடும்பத்தோடு, மொத்தமாக சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினோம்.
மிகப் பிரமாண்டமாக நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் கருப்பம்புலம் நண்பர்களை சந்தித்தது, அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது என்று மாலைப் பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது.
புதுமணத் தம்பதிகள் அரவிந்தன் – ஐஸ்வர்யா ஆகியோர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களும் பெற்று, என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பததோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன்.
வழக்கம் போல் தங்களின் வாழ்த்துக்களும் மணமக்களுக்கு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment