Tuesday, March 16, 2010

எங்கே போய் முடியும் இந்த பணமாலை..?!




என்னுடைய கவலையெல்லாம் இந்தியப் பணம் எவ்வளவு பாடுபடுகிறது என்பதுதான். நம் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டு கசங்கிவிட்டால், நமது மனது தாங்கிக் கொள்வதில்லை. கடையில் பொருட்களை வாங்கும்போது, நம் கையிலிருக்கும் புதிய நோட்டை முதலில் கொடுக்கமாட்டோம், தேடிப் பிடித்து பழைய தாளை கொடுப்போம்.

உ.பி.முதல்வருக்கு கோடிகணக்கான ரூபாய் நோட்டில் மாலை அணிவித்தார்கள் என்பதை அறிந்ததும், மனதை என்னவோ செய்கிறது. இந்த ரூபாய் நோட்டு மாலை மற்ற மாநிலங்களுக்கு பரவக்கூடாது, இதுவே எனது விருப்பம். பொறுத்திருந்துப் பார்ப்போம்.

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டை எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை கீழே படிக்கவும்.
இது உ.பி. மக்களுக்குத் தெரியாதா?!

Clean note policy:

Reserve Bank of India has been continuously making efforts to make

good quality banknotes available to the members of public.

To help RBI and banking system, the members of public are requested to ensure the following:

Not to staple the banknotes

Not to write / put rubber stamp or any other mark on the banknotes

Store the banknotes safely to prevent any damage











8 comments:

  1. மாலையை எப்படியாவது எடுத்துட்டு வாங்க. நாம பிரிச்சுக்கலாம்

    ReplyDelete
  2. நன்றி சார்,
    முயற்சி செய்கிறேன், அது சரி, பங்கு எப்படி பிரிச்சுகிறது? அத முதல்ல சொல்லிடுங்க..!

    ReplyDelete
  3. //அது சரி, பங்கு எப்படி பிரிச்சுகிறது? அத முதல்ல சொல்லிடுங்க..!
    /

    மாலை எனக்கு. கயிறு உங்களுக்கு

    ReplyDelete
  4. சரி, இன்னைக்கே உ.பி.க்கு போறேன், மாலையோட வர்றேன்...! ஆமாம், ரெண்டாவது மாலையும் போட்டாங்கலாமே, ஆளுக்கு ஒண்ணா வச்சுக்கலாமா?!

    ReplyDelete
  5. //என்னைப் பற்றி தெரிந்துகொண்டால், என்னுடைய எழுத்துக்கும், சிந்தனைக்கும் சரியான மதிப்பீடு இருக்காது என்று நான் நினைப்பதால் ஒளிந்துகொள்கிறேன்..!//

    சரியா சொன்னீங்க.


    மாயாவதி அக்காக்கு ஆடம்பரம் கண்ணை மறைக்குது.

    பிழைக்க வழிதெரியாத ஆள். ஆளாளுக்கு 1000 கோடி 2000 கோடி அடுத்தவங்களுக்கு தெரியாம அமுக்குற காலத்துல இப்படி ஓர் ஆள்.

    ReplyDelete
  6. நன்றி அக்பர் சார்,
    தொடர்ந்து வாருங்கள்,
    உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  7. //இந்த ரூபாய் நோட்டு மாலை மற்ற மாநிலங்களுக்கு பரவக்கூடாது, இதுவே எனது விருப்பம்.//

    நமது விருப்பம் அதுவே. ஆனால் ஆட்சியாளர் விருப்பம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். நல்ல இடுகை.

    ReplyDelete
  8. ராமலக்ஷ்மி மேடம் நன்றி.
    தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete