Monday, September 13, 2010

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமா?

கடந்த ஆண்டு  தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பளக்கமிஷன் அமுல்படுத்தப்பட்டது. அதில்  குறைபாடுகள்  உடையவர்களுக்கு ஒரு நபர்  கமிஷன் அமைக்கப்பட்டு குறைகள் நிவர்த்திச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்பளக்க கமிஷனைப் பற்றியோ அதில் உள்ள நிறை குறைகளைப் பற்றியோ நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

ஆறாவது சம்பளக்கமிஷன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள்  அனைவரும் பயனடைந்தனர். ஆனால், தற்சமயம் ஒரு நபர்  கமிஷன்  சிபாரிசின் மூலம்  இரண்டு  லட்சம் பேருக்குத்தான் பயன்கிடைக்கும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால், ஏற்கனவே அதிகப்படியான பயனடைந்தவர்கள் கூட  'இப்பொழுது தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை' என்று புலம்புகிறார்கள்.


என்னுடன் பேருந்தில் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டதிலிருந்தும், சில நண்பர்களுடன் நான் பேசியதிலிருந்தும்
 நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான்,  'நம்மைவிட அவன் அதிகமாக வாங்குகிறான், இவன் அதிகமாக வாங்குகிறான்,எனக்கும் அவனுக்கும் நூறு ரூபாய் மட்டும்தான் கூடுதல்'  போன்றவைகளே 
இவர்களுடைய வேதனை!  'தனக்கு என்ன வேண்டும் என்பதைவிட மற்றவர்களுக்கு  என்ன கிடைக்கிறது'  என்பது மட்டுமே இவர்களுக்கு பிரச்சினை. இது நடுத்தரமாக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் மனநிலை. 



கூடுதல் சம்பளம் வாங்கும் ஊழியர்களில் சிலரோ , மென்பொருள் பொறியாளர்களின் சம்பளத்துடன்  ஒப்பிட்டு வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். சம்பளத்தை மட்டும்தான் ஒப்பிட்டு பேசுகிறார்கள். வேலை, வேலையின் தன்மை, அறிவு, திறமை, உழைப்பு இவைகளோடு ஒப்பிட்டுக் கொள்வதில்லை!



போதும் என்ற மனம், அரசு ஊழியர்கள் பலரிடமில்லை  என்று  நினைக்கையில் மிகவும் வேதனையாக உள்ளது. இந்த மன நிலையால்தான் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் லஞ்சம் வாங்குவதை இவர்கள்  விடுவதாயில்லை.
படித்த, அறிவார்ந்த அரசு ஊழியர்களே  மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளவதை என்னவென்று சொல்வது. 



கடந்த வருடம்     மகிழ்ச்சியாக இருக்க..! என்பது குறித்து ஒரு பதிவு எழுதினேன். படித்துப் பார்க்கவும்.   
       

இவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கினால் மட்டும் போதாது,   நல்ல சிந்தனை வளர 'கிடைப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்வது'  குறித்து சிறந்த அறிஞர்களைக் கொண்டு  கற்றுக்கொடுக்க  வேண்டும். இது மட்டுமே தனது  ஊழியர்களுக்கு, தமிழக  அரசு உடனடியாக செய்ய வேண்டியது.

.

10 comments:

  1. என்னுடன் பேருந்தில் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டதிலிருந்தும், சில நண்பர்களுடன் நான் பேசியதிலிருந்தும்
    நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான், 'நம்மைவிட அவன் அதிகமாக வாங்குகிறான், இவன் அதிகமாக வாங்குகிறான்,எனக்கும் அவனுக்கும் நூறு ரூபாய் மட்டும்தான் கூடுதல்' போன்றவைகளே
    இவர்களுடைய வேதனை! 'தனக்கு என்ன வேண்டும் என்பதைவிட மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது' என்பது மட்டுமே இவர்களுக்கு பிரச்சினை. இது நடுத்தரமாக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் மனநிலை.


    ..... To the Point ..... இப்படி சொல்லிட்டீங்களே! இவங்க ஆட்டோ அனுப்ப மாட்டாங்கதானே!

    ReplyDelete
  2. Mp kooda copmparing their salary with s/w people appuram ivanga??

    ReplyDelete
  3. அமைதியான அப்பா.அட்ரா சக்கை.

    ReplyDelete
  4. அமைதியான அப்பா.அட்ரா சக்கை.

    ReplyDelete
  5. நல்ல பதிவு சார். இதனை அரசு ஊழியர்கள் படித்தால் நல்லாயிருக்கும்

    ReplyDelete
  6. ஒப்பீடுகளினால் தேர்ந்தெடுத்து அமர்ந்த வேலைக்கும் நியாயம் செய்வதில்லை. வாழ்விலும் திருப்தி அடைவதில்லை என்பதை சொன்னதோடு அருமையான தீர்வையும் வழங்கியுள்ளீர்கள். நன்று அமைதி அப்பா.

    ReplyDelete
  7. பாராட்டுடன் கருத்துக்களைத் தெரிவித்த

    சித்ரா மேடம்,
    எல்கே சார்,
    அன்புடன் மலிக்கா மேடம்,
    மோகன் குமார் சார்,
    ராமலக்ஷ்மி மேடம்.

    அனைவருக்கும் நன்றி.

    எல்லா அரசு ஊழியர்களும் மன மகிழ்ச்சியுடன், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே நமது விருப்பம். பார்ப்போம்!

    .

    ReplyDelete
  8. அரசு‍ உதவி பெறும் ஒரு தனியார்‍ கல்லூரியில் மேனேஜ்மென்ட் ஊழியனாக பணியாற்றுகிறேன். காலை முதல் மாலை வரை வேலை நடக்கிறதோ இல்லையோ, டிஏ, HRA, இன்கிரிமென்ட் இது‍ போல பணப்பயன் தொடர்பான பேச்சுகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். என்னைப் போன்ற மேலும் இருவர் அதே அலுவலகத்தில் மிக சொற்ப சம்பளத்திற்கு‍ மாங்கு‍ மாங்கென வேலைசெய்து‍ கொண்டிருப்போம். நிர்வாகமும் எங்களை தான் பெண்டு‍ நிமிர்த்தும். பணி ஓய்வு பெற்ற பழைய ஊழியர்கள் யாராவது‍ அலுவலகம் வந்தாலும் அவர்கள் வருகை பெரும்பாலும் ஓய்வூதியம் அல்லது‍ அரியர் பற்றியேதான் இருக்கும். இன்னும் எவ்வளவோ வயித்தெரிச்சலை பகிர்ந்து‍ கொள்ளலாம். ஆனாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
    ஜெ.பா.
    கோவை

    ReplyDelete
  9. Anonymous said...

    அரசு‍ உதவி பெறும் ஒரு தனியார்‍ கல்லூரியில் மேனேஜ்மென்ட் ஊழியனாக பணியாற்றுகிறேன். காலை முதல் மாலை வரை வேலை நடக்கிறதோ இல்லையோ, டிஏ, HRA, இன்கிரிமென்ட் இது‍ போல பணப்பயன் தொடர்பான பேச்சுகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். என்னைப் போன்ற மேலும் இருவர் அதே அலுவலகத்தில் மிக சொற்ப சம்பளத்திற்கு‍ மாங்கு‍ மாங்கென வேலைசெய்து‍ கொண்டிருப்போம். நிர்வாகமும் எங்களை தான் பெண்டு‍ நிமிர்த்தும். பணி ஓய்வு பெற்ற பழைய ஊழியர்கள் யாராவது‍ அலுவலகம் வந்தாலும் அவர்கள் வருகை பெரும்பாலும் ஓய்வூதியம் அல்லது‍ அரியர் பற்றியேதான் இருக்கும். இன்னும் எவ்வளவோ வயித்தெரிச்சலை பகிர்ந்து‍ கொள்ளலாம். ஆனாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
    ஜெ.பா.
    கோவை//

    மற்றவரைப் பற்றி சிந்திக்கும் ஆற்றலை மனிதன் இழந்து கொண்டிருக்கிறானோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    தனக்கு கிடைக்கும் சம்பளம் போதும் என்கிற மனநிலை ஒரு சிலருக்குத்தான் உள்ளது. அந்த நிலை மாறவேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள 2,653 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங் கள் நிரப்ப முடிவு செய்யப்பட் டுள்ள நிலையில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அனுப்பிவிட்டு வேலை கிடைக்கவேண்டுமே என்று ஏக்கத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் ஏற்கனவே அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் தங்களுடைய வேலையின் மதிப்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

    நன்றி திரு.ஜெ.பா.
    கோவை.

    ReplyDelete
  10. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை அழகாக சொன்ன அமைதி அப்பாவும் ஒரு அரசு ஊழியரோ ?

    ReplyDelete