Thursday, January 20, 2011

'கார்' காலம்!




கடந்த வருடம் தொடர்ச்சியாக இந்திய அளவில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. "நாடு முன்னேறுகிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே...!" என்பதுதானே உங்கள் எண்ணம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புறநகருக்கு குடி வந்த பொழுது, தெருக்களில் எங்காவது ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இன்று தெருவுக்கு பத்துக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகலான சந்துகளில் நேரெதிரே இரண்டு கார்கள் நின்று கொண்டு, யார் எப்படி போவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. அதிக அளவில் 'L' போர்ட் கார்களைக் கானமுடிகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு வருடங்களில் தெருக்களில் வாகனம் போவதோ, சாலைகளில் போக்குவரத்தோ அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

இதற்கெல்லாம் காரணம் கார் விலை குறைந்ததுதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அது உண்மையில்லை. முன்பெல்லாம் ஒவ்வொருவரும் முதலில் சொந்த வீடு வாங்க வேண்டும். அதன் பின்பு கார் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இன்று அடுக்குமாடி வீடு வாங்குவதென்றால் கூட, முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இன்றைய நிலையில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் மட்டுமே வீடு வாங்குவது குறித்து சிந்திக்க முடியும். இன்றைக்கு புதிதாக ஐ.டி. துறையில் வேலையில் சேரும் இளைஞர்களாகட்டும், மத்தியத் தர அரசு ஊழியராக இருந்தாலும் வீடு வாங்க முடியாது என்பது எதார்த்தம். அதனால், மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குவோர் கூட கார் வாங்குகிறார்கள் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. கையில் இருக்கும் பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்குபவர்களும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. சொந்தமாக வீடு இருப்பது கௌரவத்தின் அடையாளமாக இருந்த நிலை மாறி, கார் வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகி விட்டது. இப்படி எல்லோரும் 'கார் வாங்குவது' கௌரவத்தின் அடையாளமாகக் கருதினால் சென்னையின் போக்குவரத்து என்னாவது? இப்பொழுதே பத்து கிலோ மீட்டர் பயணம் செய்ய ஒரு மணி நேரமாகிறது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும். இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும். இனி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போதே கட்டாயம் 'கார் பார்க்கிங்' இருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்தவேண்டும். மேலும், நடுத்தர வர்க்கம் வீடுகள் வாங்கும் விலையில் அரசே குறைந்த விலைகளில் வீட்டைக் கட்டி விற்க வேண்டும். இல்லையெனில், இந்தக் கார் வாங்கும் கலாச்சாரம் நிச்சயம் நம்மையெல்லாம் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சென்னை மற்றும் பெரு நகரங்களில்
வீடுகள் கட்டி குறைந்த விலையில் விற்போம்" என்று வரும் தேர்தலில் வாக்குறுதியளிக்கும் கட்சிக்கே என்னுடைய வாக்கு!

"உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!

படம் உதவி: கூகுள்!

.

20 comments:

  1. "உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!

    ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... You are putting ideas in our heads.

    ReplyDelete
  2. ///////வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. ////இன்றைய காலத்தில் சொந்த வீடு இருப்பதைக் காட்டிலும் சொந்தமாக வாகனம் இருப்பதையே கௌரவம ஆக நினைக்கிறார்கள்..

    ReplyDelete
  3. சென்னை எவ்வளவோ பரவாயில்லை. சென்னை, பாம்பே, கொல்கத்தா அவற்றின் வாகன எண்ணிக்கையைக் கூட்டினால் எவ்வளவு இருக்குமோ அதை விட தில்லியில் அதிகம் என ஒரு புள்ளி விவரம் படித்ததாய் நினைவு. தில்லியில் அவ்வளவு வாகனங்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    வெங்கட் நாகராஜ்
    http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  4. நேரடி அனுபவத்திலிருந்து எழுதிருக்கீங்க சரி தான்

    ReplyDelete
  5. மும்பைலலாம் இன்னமும் மோசம். வீட்டுக்கு 2, 3 கார்கள் வைத்திருப்பவர்களும் உண்டு.

    ReplyDelete
  6. ஓட்டுரிமை இல்லைனா என்ன தல... கள்ளவோட்டு போட்டு காசாக்கிடுவோம் விடுங்க

    ReplyDelete
  7. இதுக்குத்தான் என்னை மாதிரி திருச்சில இருக்கனும். ஒரு ட்ராபிக் ஜாம் கூட இல்லாம பொழுது போகும்

    ReplyDelete
  8. உங்க கவலை புரியுது சார், முதல் கனவு வீடு ஆனா பணம் அதிகமா வேணும் ,
    கார் அப்படில்ல அதனால் முதலிடம் ,இன்னும் 10 வருடங்களில் சென்னை வளரும் சார்,

    ReplyDelete
  9. நல்ல வாக்குறுதி கேட்டுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல பதிவு. பகிர்ந்திருக்கும் படத்துடன் தொடர்புடையதாக ஒரு விஷய்ம்... சென்னையின் சராசரி போக்குவரத்து வேகம் 20 kmph என்கிறது இன்றைய TOI, The Crest-ன் தலைப்புச் செய்தி. மேலும் பெங்களூரில் ‘96-ல் 6 லட்சமாக இருந்த கார்களின் எண்ணிக்கை இன்று 40;டெல்லியில் 65; மும்பையில் வருடத்துக்கு 5 லட்சம் அதிகரித்தபடி என்கிறது புள்ளி விவரங்கள்.

    பெங்களூர் ஹோசூர் சாலை ஃப்ளை ஓவரில் வாகனங்கள் செல்ல கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏனைய பல நாடுகளில் உள்ளது போல நம் நாட்டு பெரு நகரங்களின் முக்கிய சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    ReplyDelete
  11. ஆனால் எல்லோருமே கெளரவத்துக்காக கார் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் என சொல்லி விட முடியாது. ஒரு அவசர ஆபத்து நேரத்தில், கால் டாக்ஸிக்குக் காத்திருக்க முடியாத சூழலில், கூப்பிடும் இடத்துக்கு வருகிற மாதிரி நம் ஊர் ஆட்டோக்கள் இருப்பதில்லை. தினசரி உபயோகத்துக்கு இல்லாவிட்டாலும் அத்தியாவசிய தேவைக்காகவும் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்கிற பரவலான எண்ணத்துக்கு வங்கிக் கடன்களும் காரணமே.

    பார்க்கிங். நீங்கள் சொல்கிற மாதிரி மிகப் பெரும் பிரச்சனைதான் குடியிருப்புகளிலும் சரி, தனி வீடுகளில் நிறுத்த இடமின்றி இரவு தெருவை அடைக்கின்ற வாகனங்களாலும் சரி.

    லக்ஷ்மி சொல்லியிருப்பது போல வீட்டுக்கு 2,3 வண்டிகள் பெங்களூரிலும் சகஜம்.

    பதிவு வழக்கம் போல நல்ல அலசல்.

    ReplyDelete
  12. Chitra said...

    "உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!
    ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... You are putting ideas in our heads.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash said...

    ///////வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. ////இன்றைய காலத்தில் சொந்த வீடு இருப்பதைக் காட்டிலும் சொந்தமாக வாகனம் இருப்பதையே கௌரவம ஆக நினைக்கிறார்கள்..////

    நன்றி சார்.

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் said...

    சென்னை எவ்வளவோ பரவாயில்லை. சென்னை, பாம்பே, கொல்கத்தா அவற்றின் வாகன எண்ணிக்கையைக் கூட்டினால் எவ்வளவு இருக்குமோ அதை விட தில்லியில் அதிகம் என ஒரு புள்ளி விவரம் படித்ததாய் நினைவு. தில்லியில் அவ்வளவு வாகனங்கள்.///

    சென்னைவாசிகளை சமாதனப் படுத்திவிட்டீர்கள்.
    தகவலுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  15. மோகன் குமார் said...

    நேரடி அனுபவத்திலிருந்து எழுதிருக்கீங்க சரி தான்//

    ஆமாம், நன்றி சார்.

    ReplyDelete
  16. Lakshmi said...

    மும்பைலலாம் இன்னமும் மோசம். வீட்டுக்கு 2, 3 கார்கள் வைத்திருப்பவர்களும் உண்டு.//

    தகவலுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  17. டக்கால்டி said...

    ஓட்டுரிமை இல்லைனா என்ன தல... கள்ளவோட்டு போட்டு காசாக்கிடுவோம் விடுங்க///

    நல்ல யோசனை! நன்றி சார்.

    ReplyDelete
  18. jaisankar jaganathan said...

    இதுக்குத்தான் என்னை மாதிரி திருச்சில இருக்கனும். ஒரு ட்ராபிக் ஜாம் கூட இல்லாம பொழுது போகும்//

    இப்படியே போனா சென்னை திருச்சிக்கே வந்துடும் சார். இப்பவே திண்டிவனம் வரை சென்னை வந்துவிட்டது!

    நன்றி சார்.

    ReplyDelete
  19. மணி said...

    உங்க கவலை புரியுது சார், முதல் கனவு வீடு ஆனா பணம் அதிகமா வேணும் ,
    கார் அப்படில்ல அதனால் முதலிடம் ,இன்னும் 10 வருடங்களில் சென்னை வளரும் சார்,//

    நன்றி சார்.

    ReplyDelete
  20. மதுரை சரவணன் said...

    நல்ல வாக்குறுதி கேட்டுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//

    நன்றி சார்.

    ReplyDelete