Monday, April 11, 2011

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

என்னுடைய ஒரு ஒட்டு, என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது? என்பதுதான் பலரின் கேள்வி. இப்படி நினைப்பவர்கள், சுமார் முப்பதுக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர். இவர்கள்தான், வாக்குச்சாவடிப் பக்கம் செல்வதில்லை. இதில் பெரும்பகுதியினர் படித்தவர்கள் என்பதும், அரசியல் நிலைபாடு நன்கு அறிந்தவர்கள் என்பதும்தான் வேதனையான விஷயம்.
இந்தத் தேர்தலில் கூட கிராமத்து மற்றும் ஏழை மக்களை குறிவைத்தே பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளதே இதற்கு சான்று. படித்தவர்களின் ஒட்டு அவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன். எனவே, உங்கள் தொகுதியில் போட்டியிடும் நல்ல வேட்பாளருக்கு, அவரின் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வாக்கை, அவசியம் பதிவு செய்யுங்கள். இன்றைக்கு நம்முடைய ஒட்டு மதிப்பில்லாமல் போவது போல் தோன்றும். ஆனால், வரும் தலைமுறைக்கு அது நல்ல அரசியல் சூழ்நிலையை உருவாக்க வழி வகுக்கும். நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும், அது அவரவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதையும் மறக்க கூடாது.

சரி, எனது தொகுதியில் உள்ள வேட்பாளர் யாருமே எனக்குப் பிடிக்கவில்லை என்பவர்களுக்கு, 49 'ஒ' இருக்கிறது. இதுமாதிரியான ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் அதிகம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது வெற்றிப் பெற்ற வேட்பாளரின் வித்தியாசத்தைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், தோல்வியடைந்த கட்சி, நல்ல வேட்பாளரை நிறுத்தியிருந்தால், இந்த 49 'ஒ' வாக்களித்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களே என்று நினைக்கத் தோன்றலாம் அல்லவா? அப்படி நடந்தால், அது எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.

' உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.

விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!

17 comments:

  1. //கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//

    Yes sir. Correct. Good post. Got to know that our names are also added and we are going to vote !

    ReplyDelete
  2. நூறு பாலோயர்கள் மேல் கண்டதற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்ல விதைகளாக விதைப்போம்!

    ReplyDelete
  4. விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!


    ..... சரியாக சொல்லி இருக்கீங்க.... "எது பயிர்" , " எது களை" என்று தெரியாவிட்டால், நஷ்டம் விவசாயிக்குத்தான்.

    ReplyDelete
  5. மோகன் குமார் said...

    //கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//

    Yes sir. Correct. Good post. Got to know that our names are also added and we are going to vote !//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  6. மோகன் குமார் said...

    // நூறு பாலோயர்கள் மேல் கண்டதற்கு வாழ்த்துகள்//

    வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. சென்னை பித்தன் said...

    // நல்ல விதைகளாக விதைப்போம்!//

    நிச்சயமாக. நன்றி சார்.

    ReplyDelete
  8. Chitra said...

    //விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!

    ..... சரியாக சொல்லி இருக்கீங்க.... "எது பயிர்" , " எது களை" என்று தெரியாவிட்டால், நஷ்டம் விவசாயிக்குத்தான்.//

    'விவசாயிக்கு நஷ்டம் வரக்கூடாது. அது நாட்டுக்கு நல்லதல்ல' என்பதுதானே உங்கள் கருத்து.

    உங்களுடைய பாராட்டுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  9. //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.

    விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//

    மிகச் சரி. அவசியமான நேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

    ReplyDelete
  10. // உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்
    விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//
    சேவிக்கின்ரேன் ஜீவி. ஜுனியரில் மீண்டும் ஒரு நல்ல பதிவு.
    வென்ட்ரால் கட்டை விரல்
    ஓட்டு கேட்க்க/ போட ஊழல் காட்டி சுட்டு விரல்
    வென்ர பின் மக்கலுக்கு நடுவிரல்
    நாட்டு நலப்பனிக்கு மொதிர விரல்
    மாட்டிகொண்டால் சுட்டு விரல்

    என்ரே தனித்து செயல்படும் விரல்கள், ஐந்தாண்டு திட்டதிரக்கு மட்டும் இரண்டு, ஐந்து என்ட்ரு கூட்டனி வைத்துவிடுகின்ரன. மூன்ராம் கட்சி சூபெர் என்ரே சுட்டு விரலை மடிக்காமல் சுன்டு விரலை மடித்து நாமம் போடும் அரசியல் நாட்டில் பிரந்த பின்னர் 49 ஓ மட்டும் என்ன புதுமை செய்துவிட முடியும்.

    ReplyDelete
  11. ராமலக்ஷ்மி said...
    //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.
    விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//

    மிகச் சரி. அவசியமான நேரத்தில் அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.//

    உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  12. //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது//

    'எது பயிர், எது களை' என்று Voter-குத் தெரியும்!

    எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.

    Nice Post with Golden Lines..,

    ReplyDelete
  13. Anonymous said...

    உங்களுடைய நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களின் பெயரை சொல்லாமல் விட்டுவிடுவதேன்?

    *****************
    //49 ஓ மட்டும் என்ன புதுமை செய்துவிட முடியும்//

    இதற்கு, என்னுடைய விளக்கம் புரியவில்லையா அல்லது போதவில்லையா:-)))))?!

    ReplyDelete
  14. Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...
    //வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது//
    'எது பயிர், எது களை' என்று Voter-குத் தெரியும்!
    எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.
    Nice Post with Golden Lines..,///

    உங்களுடைய பாராட்டுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு. ஆனா இப்ப களையெடுக்க முடியுமான்னு தெரியலையே அ.அப்பா! ;-))

    ReplyDelete
  16. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை

    நச்!!!

    ReplyDelete
  17. மனக்கவர்ந்த கருத்துக்கள் அய்யா (அப்பா )
    மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்
    உண்மையை உரக்க உறைக்கும் படி சொல்லி இருக்கின்றீகள்

    உங்களின் வருகைக்கு மனம் நிறைந்த நன்றி

    ReplyDelete