Thursday, October 20, 2011

புகழ் சோறு போடுமா?!

ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படி புகழ் அடைவதற்கு தன்னால் முடிந்த வரையில் தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.  புகழ்ப் பெற்றவர்கள் வாழ்வில் கடைசி வரை  மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.


புகழ்ப்  பெற்ற மனிதர்களில்  சிலர் கடைசிக் காலத்தில் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிகழ்வுகளை  நினைத்தால் 'புகழுக்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை' என்று தான் தோன்றுகிறது.


கடந்த வருடம்   நடிகை காஞ்சனா கஷ்டப்படுவதாக  பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இன்று மாலைமலர் பத்திரிகையில் நடிகர் லூஸ் மோகன் பற்றி வந்துள்ள செய்தியும் என்னை வருத்தப்பட வைத்துள்ளது. அவரது மகன் அவருக்கு சாப்பாடு போடுவதில்லை என்று போலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். செய்தியைப் படிக்க இங்கே செல்லவும்.


எனக்கு தெரிந்து, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பெற்றோரை நல்ல மாதிரி கவனிக்கிறார்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பாது காக்கிறார்கள். ஆனால்,  வசதிப் படைத்த குடும்பங்களில்தான், பெரும்பகுதி பெற்றோரை கண்டு கொள்ளாமல், இப்படி தவிக்க விடும்   நிலை உள்ளது.


'நமக்கும் வயதாகும், முதுமையும் வரும்' என்று ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை!



14 comments:

  1. பச்சை ஓலையைப் பார்த்து பழுத்த ஓலை சிரிச்சதுன்னு சொல்லுவாங்க.. தானும் ஒரு நாள் பழுப்போம்ங்கறதை மறந்துடுது பச்சை ஓலை.

    ReplyDelete
  2. சிறிய பதிவானாலும் சீரிய பதிவு. இதன் பின்னுள்ள சோகம் வலிக்கிறது

    ReplyDelete
  3. நானும் லூஸ் மோகன் பற்றிய செய்தியை படித்தேன்... அவருக்கு உதவ திரையுலக நண்பர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  4. இந்த நிகழ்ச்சியினால் உணரவேண்டிய நீதி என்னவேன்றால் ஒவ்வொருவரும் நன் கடைசி காலத்திற்கு என்று தனியாக சேமித்து வைக்கவேண்டும் என்பதே.

    ReplyDelete
  5. தன தந்தையை மதித்து நடப்பவனின் மகன், அவனையும் மதிப்பான்... இது உலக நியதி... லூஸ் மோகன் அவர் தந்தையை எப்படி நடத்தி இருப்பார் என்று தெரியாததால் கருத்து கூற முடியவில்லை..

    ReplyDelete
  6. புகழ் குறித்து கூற திருவள்ளுவரை துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்...
    வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய
    வாழ்வாரே வாழாதவர்
    குறள் 240

    ReplyDelete
  7. வருத்தம் தரும் பகிர்வு. அவசியமான பகிர்வு.

    ReplyDelete
  8. உண்மை தான். வசதியான பெற்றோர் மட்டுமல்ல,அதிக செல்லம் மற்றும் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்.. குழந்தைகளிடம் ஒருவிதமான 'தனித்துவ மனப்பான்மை' கொண்டு வருகின்றனர். இது பிற்காலத்தில் அகங்காரமாய் உருவெடுக்கின்றது.யாரையும் சேர்த்துக்கொள்ள முடிவதில்லை. அதன் உச்சம் தான் பெற்றோரை, இறுதி காலத்தில் கை விடுவது.இனி வரும் காலங்களில் இது அதிகமாகிக் கொண்டு போகும்.வயதானவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு சேர்த்து வைத்துக் கொள்வது நல்லது.

    ReplyDelete
  9. அமைதி அப்பா அவர்களே..

    என்னுடைய பதிவில் தங்களுடைய பின்னூட்டம் கண்டேன். அமைதி விரும்பி குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி..அவர் எல்லா வளமும் பெற்று மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

    நன்றி
    முகுந்தஅம்மா

    ReplyDelete
  10. காலம் திரும்பும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  11. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

    ReplyDelete
  12. லூஸ் மோகன் இன்று காலமானார். அவருக்கு நமது அஞ்சலி!

    ReplyDelete
  13. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete