Sunday, January 22, 2012

இப்படியும் ஒரு மருத்துவர்!

வேதாரணியம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' என்று அன்போடு அப் பகுதி மக்களால் அழைக்கப்படும்,  திரு டாக்டர் வி.ஜி.சுப்பிரமணியன் அவர்களைப் பற்றி 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தி வெளிட்டுள்ளது. மருத்துவர் பற்றி நான் அறிந்த விபரங்களையும் இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.




கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து. பின்பு, அந்தக் கிராமத்திலேயே மருத்துவம் பார்க்கும் திரைப்பட கதாநாயகன் போல், வேதாரணியம் அருகே செம்போடை என்கிற கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து. அரசு பள்ளிகளில் கல்விக் கற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்று,  லண்டனில் பணிபுரிந்து, பின்பு வேதாரணியம் பகுதியில் அரசு மருத்துவனைகளில் பணியாற்றி.  பின்பு,  அரசுப் பணியை விட்டு விலகி  தன்னுடையை சேவை, தான்  பிறந்த மண்ணிலேயே தொடர வேண்டும் என்பதற்காக,   வேதாரணியம் பகுதியிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.


 கிராமத்தில் பிறந்தாலும் தனது கிராமத்து மக்களின் மீது அக்கறைக் கொள்ளாமல்  நகரத்தில் மருத்தவம் பார்க்க விரும்பும் மருத்துவர்கள் மத்தியில், தான் பிறந்த கிராமத்திலேயே, அப் பகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, வருமானக் கணக்குப் பார்க்காமல், இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு  அண்மையில் ஐ.சி.யு. வசதியுடன் ஒரு நவீன மருத்துவமனையை 'நேதாஜி' பெயரில் திறந்துள்ளார். 

இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி, அங்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு எந்த வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவோம். மேலும், இவரைப் பின்பற்றி புதிதாக மருத்துவப்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், பொருளாதாரக் கணக்குப் பார்க்காமல் கிராமத்தில் சேவையாற்ற முன் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த மாதிரி, சமூக சேவை செய்பவர்களை கண்டுபிடித்து பாராட்டி உற்சாகப் படுத்தும் 'புதிய தலைமுறை'க்கு நன்றி தெரிவிப்போம்.

.

24 comments:

  1. இன்னும் இது போல நல்ல மருத்துவர்கள் இந்தியாவிற்குத் தேவை... இவரது சேவை தொடர வாழ்த்துவோம்.....

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இவரைப்போல மருத்துவர்கள் இருந்தால் நோயாளிகளுக்கு எவ்வளவு நல்லது?

    ReplyDelete
  3. எத்தனை பாராட்டினாலும் தகும்!

    ReplyDelete
  4. ஒரு மனிதாபிமானமிக்க மருத்துவரை
    அறிமுகப் படுத்திய புதிய தலைமுறை வார இதழுக்கும்
    அதைப் பதிவாக்கித் தந்த தங்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒரு மனிதரை அறிமுகப் படுத்தியதுக்கு உங்களுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மருத்துவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மிக மகிழ்ச்சி. அதுவும் அவர் உங்கள் ஊர் காரர் என அறிந்து கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete
  9. மருத்துவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  10. மருத்துவர் சேவை தொடரட்டும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. நாலா மனிதரை அடையாளம் காட்டிய புதியதலைமுறைக்கும் , உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  12. ஊருக்கு உழைப்பவர்களைப் பற்றி உலகமறிய எடுத்துச் சொன்னதுக்கு ஒரு நன்றி! நல்ல பகிர்வு! :-)

    ReplyDelete
  13. நல்ல மருத்துவரைஅறிமுகப் படுத்திய புதிய தலைமுறை வார இதழுக்கும்
    அதைப் பதிவாக்கித் தந்த தங்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    unmaivrumbi.
    Mumbai.

    ReplyDelete
  14. மனிதன் கையெடுத்து கும்பிடுவது அவரவர் கடவுள்களை அடுத்து மருத்துவரைத் தான். அவரின் சேவை தொடர வாழ்த்துவோம். உங்களுக்கும், புதியதலைமுறைக்கும் பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    //இன்னும் இது போல நல்ல மருத்துவர்கள் இந்தியாவிற்குத் தேவை... இவரது சேவை தொடர வாழ்த்துவோம்.....//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்!

    ReplyDelete
  16. பாராட்டுக்குரிய நபரை கெளரவம் செய்திருக்கும் புதிய தலைமுறைக்கும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் பாராட்டுகள்!

    ReplyDelete
  17. nice

    http://www.ambuli3d.blogspot.com/

    ReplyDelete
  18. Lakshmi said...

    //இவரைப்போல மருத்துவர்கள் இருந்தால் நோயாளிகளுக்கு எவ்வளவு நல்லது?//

    நிச்சயமா நல்லது மேடம். மிக்க நன்றி.

    ReplyDelete
  19. கே. பி. ஜனா... said...

    //எத்தனை பாராட்டினாலும் தகும்!//

    ஆமாம் சார், நிச்சயம் பாராட்ட வேண்டும்.
    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  20. Ramani said...

    //ஒரு மனிதாபிமானமிக்க மருத்துவரை
    அறிமுகப் படுத்திய புதிய தலைமுறை வார இதழுக்கும் அதைப் பதிவாக்கித் தந்த தங்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  21. அமைதிச்சாரல் said...

    //நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒரு மனிதரை அறிமுகப் படுத்தியதுக்கு உங்களுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  22. இந்த மாதிரி நாட்டிற்கு உழைக்கும் இளைஞர்களைப்பற்றி படித்தால் , நம் நாட்டின் எதிர் காலம் பற்றி கவலை இல்லை என்று தோன்றுகிறது.

    இவர்கள் தான் லீடர்கள்!

    நாம் எல்லோரும் பதிவுகள் எழுதுகிறோம். நமக்கு தெரிந்து இந்த மாதிரி நற் செயல் செய்யும் நல்ல மனிதர்களை பற்றி பகிர்ந்து கோண்டால்...

    ReplyDelete
  23. எல்லோருக்கும் நல்ல செய்தி சேரும்படி பதிவிட்டதற்கு நன்றிங்க.

    ReplyDelete