Monday, April 16, 2012

தேவை மீண்டும் முத்துக்குமரன்!

எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் பல விஷயங்கள் குறித்து என்னுடைய கருத்துகளை அண்மைக் காலமாக  பதிவு செய்யத்  தவறி வருகிறேன். இருந்தப் போதும், இந்தப் பதிவை எப்படியும் எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்கிறேன்....



கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜூனியர் விகடனில், புதுக்கோட்டையில் முத்துக்குமரன் என்கிற வேட்பாளர் சைக்கிளில் செல்கிறார். மிகவும் எளிமையானவர் போன்ற விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்பொழுது, இந்த வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். அத்தோடு சரி, அதன் பிறகு அவரைப் பற்றி மேற்கொண்டு அறிந்துக் கொள்ள நான் நினைக்கவில்லை.

ஏப்ரல் முதல் தேதி நடந்த சாலை விபத்தில் திரு. முத்துக்குமரன் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பத்திரிகையில் படித்தேன். பிறகுதான், அவர் சட்மன்ற உறுப்பினராக,  எவ்வாறு செயல்பட்டார் என்று அறிந்துக் கொண்டேன்.

''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!''  என்று சபாநாயகரே பாராட்டியிருக்கிறார் என்பதையும், விழுப்புரத்தில் பணிபுரியும் தனது மனைவிக்கு பணியிட மாறுதல் வாங்குவதற்கு, தனது பதிவியை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்த போது. ஏன், இவ்வளவு காலம் இவரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று வேதனைப் பட்டேன்.

குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது.

வருகிற இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம்  மறைந்த முத்துக்குமார் போல்,  எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

புதுக்கோட்டை வாக்காளர்களுக்கு, முத்துக்குமரன் இடத்திற்கு மீண்டும் ஒரு முத்துக்குமரனையே தேர்ந்தெடுங்கள். அப்பொழுதான் பல முத்துக்குமரன்கள்  அரசியலுக்கு வருவார்கள்.

 படம் உதவி : கூகிள் 

16 comments:

  1. அவசியமான கட்டுரை. ஜூவியில் இவர் பற்றி தேர்தல் நேரத்திலும் அவர் இறந்த பின்னும் படித்து நெகிழ்ந்து போனேன்

    ஆனால் ஆனால் நீங்கள் கடைசியில் சொன்ன விஷயம் நடக்காது அமைதி அப்பா ! முத்து குமரனே வலுவான கூட்டணி இருந்ததால் தானே வர முடிந்தது !

    வலிமை உள்ளவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற காலம் இது

    ReplyDelete
  2. //எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!//

    ஆதங்கம் சரியே.செய்யுமா அரசு?

    நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பதிவு.

    ReplyDelete
  3. ஒரு நல்ல மனிதரைப் பற்றிய விஷயங்கள் அறிந்து மகிழ்ச்சி. இது போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும். நடக்குமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி.

    திரு முத்துக்குமரன் விபத்தில் இறந்தார் எனப் படித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  4. நல்ல மனிதரை தேர்ந்தெடுத்த புதுக்கோட்டை வாக்காளர்கள் இன்னமும் நல்ல மனிதரை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவோம்

    ReplyDelete
  5. சிந்தனையைத் தூண்டும் பதிவு!ஆனால்..?
    இங்கே, சுயநலம் மிக்க தலைவர் கையில்
    சிக்கி அறியாமையில் கிடக்கும் மக்கள் சிந்திப்பார்களா?
    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மோகன் குமார் said...

    //அவசியமான கட்டுரை. ஜூவியில் இவர் பற்றி தேர்தல் நேரத்திலும் அவர் இறந்த பின்னும் படித்து நெகிழ்ந்து போனேன்//

    நான் இவரைப்பற்றி நிறையப் படித்தேன். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. நிச்சயம் தமிழ்நாட்டுக்கு, இவருடைய மரணம் மிகப்பெரிய இழப்புதான்.

    // ஆனால் நீங்கள் கடைசியில் சொன்ன விஷயம் நடக்காது அமைதி அப்பா ! முத்து குமரனே வலுவான கூட்டணி இருந்ததால் தானே வர முடிந்தது !//

    எந்தக் கட்சி வெற்றிப் பெறுகிறது என்பதல்ல என்னுடைய பிரச்னை. அவர் இடத்துக்கு அவரைப் போன்ற ஒரு எளிமையானவரை, அங்கு போட்டியிடும் கட்சிகள், தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை! ஒவ்வொரு கட்சியிலும் ஒரு முத்துக்குமரன்(எளிமையானவர்) கூடவா தேற மாட்டார்கள்?

    //வலிமை உள்ளவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற காலம் இது//

    காலம் ஒருநாள் மாறும் என்று நம்புவோம்!

    தங்களின் விரிவான கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...

    // நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பதிவு.//

    நல்ல மனிதரின் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வெங்கட் நாகராஜ் said...
    //இது போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும். நடக்குமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி.//

    இப்படி நினைத்திருந்தால், இந்த முத்துக்குமரன் வந்திருக்க முடியுமா? நடக்கும் சார். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. // குறைந்தப் பட்சம் அவரைப் பாராட்டி ஒரு கடிதமாவது எழுதியிருக்கலாம். அல்லது ஒரு பதிவு போட்டிருக்கலாம். எதையும் செய்யவில்லையே என்கிற வருத்தம் என்னுள் உள்ளது. //

    உங்கள் பதிவைப் படித்ததும் இதே ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது. மனதைத் தொட்ட பதிவு.

    ReplyDelete
  10. Vairai Sathish said...

    //நல்ல மனிதரை தேர்ந்தெடுத்த புதுக்கோட்டை வாக்காளர்கள் இன்னமும் நல்ல மனிதரை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவோம்//

    நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  11. subramanian said
    அரசியல் கட்சிகள் குறைந்தப் பட்சம் மறைந்த முத்துக்குமார் போல், எளிமையானவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான், இதுபோன்ற நல்ல மனிதர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி

    ReplyDelete
  12. அவசியமான கட்டுரை. ஜூவியில் இவர் பற்றி தேர்தல் நேரத்திலும் அவர் இறந்த பின்னும் படித்து நெகிழ்ந்து போனேன்

    ReplyDelete
  13. அவசியமான கட்டுரை. ஜூவியில் இவர் பற்றி தேர்தல் நேரத்திலும் அவர் இறந்த பின்னும் படித்து நெகிழ்ந்து போனேன்

    ReplyDelete
  14. இந்த மாதிரி ஒரு அபூர்வ மனிதர், சட்ட மன்ற தேர்தலில் , வெற்று பெற்றதே அதிசயம். அந்த தொகுதி மக்கள் பாராட்டுக்கு இரியவர்கள். பத்திரிக்கைகளோ, பதிவுகளோ, இவரை ப்பற்றி பரவலாக அறிவிக்காமல் , விட்டது, வருத்தப்பட வைக்கிறது. சென்சேஷனல் செய்திகளை போட்டு குவிக்கும் ஊடகங்கள், இவரை ஏன் வெளிச்சதில் கொண்டு வரவில்லை? நஷ்டம் யாருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  15. Please see this link for good people in politics.
    http://www.deccanherald.com/content/225969/priests-kindness-campaign-strikes-chord.html

    Unfortunately, they do not get elected. Even in Goa, where literacy rate is high.

    ReplyDelete