Thursday, January 6, 2011

இலவசமாய் எம்.பி.பி.எஸ். படிக்க, இறுதி வாய்ப்பு!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு வருடம்தோறும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது, இப்பொழுது பிரச்சினையாக உள்ள பொது நுழைவுத்தேர்வல்ல. அது வேறு, இது வேறு.


இந்தத் தேர்வை தடுக்கவோ, இதில் தமிழகம் இழக்கும் இடங்களை மீட்கவோ ஒருவருமில்லை. இந்தத் தேர்வின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், பதினைந்து சதவிகித இடங்கள் நிரப்பபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமாராக 280 இடங்கள், இந்தத் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்படுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் தாமதக் கட்டணத்துடன் வரும் 10/01/2011 முதல் 17/01/2011 வரை கூடுதாலாக ரூ. 500/- செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.www.aipmt.nic.in

"இதற்கெல்லாம் ஒரு பதிவா?" என்று சிலருக்கு கேள்வி எழுவது இயற்கையே!
அவசியம்தான் என்பதற்கு என்னைச் சுற்றி நடந்த சில நிகழ்வுகள் ஆதாரமாய் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2005-2006-ல் 'அமைதி விரும்பி' +2 படித்தபோது, எனக்கு இதைப் பற்றிய விபரம் தெரியவில்லை. அப்பொழுது, எனது நண்பர் சொன்னார் "அரசுக்கலூரியில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்படுகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதி இடம் பிடித்துவிடுகிறார்கள். அதைப்பற்றிய விபரமும், எந்தத் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்றவை எதுவும் தெரிய மாட்டேங்குது" என்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த நண்பரின் இரண்டு மகள்கள் அரசுக்கலூரியில் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் மூன்றாவது மகளை எம்.பி.பி.எஸ். சேர்க்கவேண்டும் என்று நினைப்பில்தான் என்னிடம் மேற்கண்டவாறு கூறினார். அவரும் விண்ணப்பிக்கவில்லை.

மற்றொரு செய்தி, மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்த, எனது உறவினர் பெண் இந்தவருடம் +2 எழுதுகிறார். அந்தப் பெண்ணுக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ, இப்படி ஒரு நுழைவுத்தேர்வு நடப்பது தெரியவில்லை. ஆசிரியர்களும் வழிக்காட்டவில்லை. இந்த நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரங்கள் தமிழக பத்திரிக்கைகளில் வருவதில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார்ப் பள்ளிகள், குறிப்பாக நாமக்கல், ஈரோடு மாவட்ட 'பெயர் பெற்றப்பள்ளிகள்' இம்மாதிரி நுழைவுத்தேர்வு குறித்துக் கண்டுக்கொள்வதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமில்லை. மேலும், இந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும் கிடையாது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதி பதினைந்து சதவிகித தமிழக ஒதுக்கீட்டில் சேர்ந்தால், எழுத முடியாதவர்களுக்கு (தேர்வு ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது கடினம்) தமிழகத்தில் எண்பத்தைந்து சதவிகித இடத்தில் வழி விடலாமே!!

ஐ. ஏ. எஸ். தேர்வில் சாதனைப்புரியும் நாம், சரியான வழிக்காட்டுதல் இருந்தால், இந்தத் தேர்விலும் சாதனைப்புரிய முடியும். இன்றே துவங்குவோம்! உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக் குறித்து தெரிவிப்போம்!!

.

20 comments:

  1. நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் தந்திருக்கிறீர்கள்....

    ReplyDelete
  3. ஆனால்,

    "நா வக்கணையா உக்காந்து காலாட்டிகிட்டு தான் இருப்பேன். நீ தான் எல்லாத்தையும் வந்து எனக்கு செஞ்சி தரணுங்குற" கேவலமான நாதாரிப்பய புத்தி தமிழ் நாட்டுல நல்லாவே நிலச்சிருக்கு.

    நம்ம உருப்படணும்னா நம்ம தான் மெனக்கெடனும்.

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள‌ தகவல்! நிறைய பேருக்கு இது வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete
  5. தங்களின் அனைத்துப் பதிவுகளும் சமூக அக்கறையுடன் உள்ளது பாராட்டுக்குரியது... அவசியமானப் பதிவு. வாழ்த்துக்கள். தொடராட்டும் சேவை.

    ReplyDelete
  6. தகவல் ஓ.கே தான்.

    கல்லூரிக் கட்டணம் அந்த அந்த கல்லூரிகளைப் பொறுத்ததுதான். முற்றிலும் இலவசம் கிடையாது

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...
    நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  8. Chitra said...
    It is surely an useful info.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  9. SUREஷ் (பழனியிலிருந்து) said...

    தகவல் ஓ.கே தான்.//

    நன்றி சார்.

    ********************

    //கல்லூரிக் கட்டணம் அந்த அந்த கல்லூரிகளைப் பொறுத்ததுதான். முற்றிலும் இலவசம் கிடையாது//

    ஆமாம் சார், முற்றிலும் இலவசம் கிடையாது. தனியார் கல்லூரிகளின் கட்டணத்தை ஒப்பிடும் போது அரசுக்கல்லூரிகளின் கட்டணம் சொற்பமாக இருப்பதாலும், எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைக்க வேண்டுமென்பதாலும் தலைப்பை இப்படி வைத்தேன்!

    தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  10. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வார்த்தை said...

    நல்ல தகவல் தந்திருக்கிறீர்கள்.... //

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. மனோ சாமிநாதன் said...
    மிகவும் பயனுள்ள‌ தகவல்! நிறைய பேருக்கு இது வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  13. மதுரை சரவணன் said...
    தங்களின் அனைத்துப் பதிவுகளும் சமூக அக்கறையுடன் உள்ளது பாராட்டுக்குரியது... அவசியமானப் பதிவு. வாழ்த்துக்கள். தொடராட்டும் சேவை.//

    தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி சார்.

    ReplyDelete
  15. நாகை மணி; பயனுள்ள செய்தி

    ReplyDelete
  16. தங்களின் அனைத்துப் பதிவுகளும் சமூக அக்கறையுடன் உள்ளது பாராட்டுக்குரியது... அவசியமானப் பதிவு. நல்ல தகவல் தந்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள். தொடராட்டும் சேவை.

    ReplyDelete
  17. Dear Amathi Appa
    You are doing very good work, meantime I have visited the same website and I found some information about All India Engineering Entrance Exam (AIEEE 2011). The closing date for the exam will be 14.01.2011 and the website address is http://aieee.nic.in/aieee2011/aieee/welcome.html
    Regards
    Lenin
    From Malaysia

    ReplyDelete
  18. நல்ல தகவல், அடுத்த வருடம் இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே வெளியிடவும். -குமார்.எஸ். கும்பகோணம்.

    ReplyDelete