கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.
பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.
சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!
இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!
பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!
படம் உதவி: கூகிள்.
பதிவர்கள் அனைவருக்குமான பயனுள்ள
ReplyDeleteஎச்சரிக்கைப் பதிவு
பதிவுக்கு நன்றி
த.ம 2
உண்மைதான். சில சமயம் நம் சுற்றுப்புறச்சூழல்களாலும் குடும்பத்தில் ஏற்படும் சில மனவருத்தங்கள், நெருங்கிய உறவினர் மரணம் போன்ற காரணங்களினால் ஏற்படும் மன அழுத்தத்தாலும் எழுத மூட் வரமாட்டேன் என்கிறதே:(
ReplyDeleteஆனால் அதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வச்சுட்டு எழுத முயற்சிக்கணும். அதைமட்டும் ஒரேடியா விட்டுறக்கூடாது!
கரெக்டு தான் சார் ! சீக்கிரம் பழைய படி வந்துடுவீங்க. வெளியூர் பயணமெல்லாம் போகும் போது எழுதுவது மிக சிரமமே.
ReplyDeleteஉங்கள் மனம் இருக்கும் நிலைமை உங்கள் எழுத்துக்களிலும் தெரியும்...
ReplyDeleteஒரு சிறுகதை எழுத உட்கார்ந்து விட்டால், அது முடியும் வரை அதே மன நிலையுடன் இருப்பது அவசியம்.. இல்லை என்றால் நம் மன நிலைக்கு ஒப்ப நம் கதாபாத்திரங்களும் மாறி விடுகிறார்கள்..
சோகமாக இருந்த பொழுது நான் எழுத தொடங்கிய ஒரு சிறுகதை, நான் மகிழ்ச்சி நிலையில் எழுத தொடர்ந்த பொழுது கதையின் தாக்கம் எனக்கே பிடிக்கவில்லை...
அகத்தின் அழகு எழுத்துக்களில் இன்னும் தெளிவாக தெரியும் என்பதே என் எண்ணம்
ஒரு கட்டத்தில் எழுதுவதற்கு சோர்வு ஏற்படுவது எல்லாருக்கும் நேர்வதுதான். ஆனால் அதிலிருந்து மீண்டு எழுத ஆரம்பித்தால் ஒரு எனர்ஜி கிடைக்கும் பாருங்கள்... பல வருடங்கள் ஓட வைத்துவிடும். நீங்களும் முன்னிலும் உற்சாகமாகத் திரும்பி வர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteProf. DrPKandaswamyPhD has left a new comment on your post "விட வேண்டாம் இடைவெளி...!":
ReplyDeleteதொடருங்கள்.
தொடருங்கள் நண்பரே!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
உங்கள் யோசனைக்கு நன்றி.
ReplyDeleteசரியா சொன்னீர்கள் .
ReplyDeleteநீங்க சொல்வதெல்லாம் சரிதான்.
ReplyDeleteமிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பலசமயங்களில் ‘போதும்’ என ஒரு அயர்வு ஏற்படுகையில் இந்த பயத்தாலேயே தொடர்கிறேன் என்பதே உண்மை.
ReplyDeleteஒரு கட்டத்துல ஏதாவது காரணங்களால சோர்வு ஏற்படுறது ஜகஜம்தான்.. ஆனா அதுலயே அழுந்திப் போகாம மீண்டு வரத்தானே வேண்டியிருக்கு. சில சமயங்கள்ல தொடர்ந்த வாசிப்பே கூட பழைய உற்சாகத்தை கொண்டாந்துடும் :-)
ReplyDeleteபதிவுகள் தொடர்ந்து வரட்டும், வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஇடைவெளியிலும் அவ்வப்போது வலைப்பூவை எட்டிப்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.(நீங்களும் நம்ம பதிவை எட்டிப் பாருங்கள்)
ReplyDeleteRamani said...
ReplyDelete//பதிவர்கள் அனைவருக்குமான பயனுள்ள
எச்சரிக்கைப் பதிவு//
மிக்க நன்றி சார்.
துளசி கோபால் said...
ReplyDelete//ஆனால் அதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வச்சுட்டு எழுத முயற்சிக்கணும். அதைமட்டும் ஒரேடியா விட்டுறக்கூடாது!//
ஆலோசனைக்கு நன்றி மேடம்.
மோகன் குமார் said...
ReplyDelete//கரெக்டு தான் சார் ! சீக்கிரம் பழைய படி வந்துடுவீங்க.//
உங்கள் நம்பிகையான வார்த்தைகளுக்கு நன்றி சார்.
suryajeeva said...
ReplyDelete//அகத்தின் அழகு எழுத்துக்களில் இன்னும் தெளிவாக தெரியும் என்பதே என் எண்ணம்//
மிக அழகா சொல்லியிருக்கீங்க சார். மிக்க நன்றி.
கணேஷ் said...
ReplyDelete// ஒரு கட்டத்தில் எழுதுவதற்கு சோர்வு ஏற்படுவது எல்லாருக்கும் நேர்வதுதான். ஆனால் அதிலிருந்து மீண்டு எழுத ஆரம்பித்தால் ஒரு எனர்ஜி கிடைக்கும் பாருங்கள்... பல வருடங்கள் ஓட வைத்துவிடும். நீங்களும் முன்னிலும் உற்சாகமாகத் திரும்பி வர வாழ்த்துகிறேன்.//
உங்களுடைய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete//தொடருங்கள் நண்பரே!
பகிர்விற்கு நன்றி நண்பரே! //
மிக்க நன்றி சார்.
Rathnavel said...
ReplyDelete// உங்கள் யோசனைக்கு நன்றி.//
மிக்க நன்றி.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDelete// சரியா சொன்னீர்கள் .//
மிக்க நன்றி சார்.
Lakshmi said...
ReplyDelete//நீங்க சொல்வதெல்லாம் சரிதான்.//
மிக்க நன்றி அம்மா.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பலசமயங்களில் ‘போதும்’ என ஒரு அயர்வு ஏற்படுகையில் இந்த பயத்தாலேயே தொடர்கிறேன் என்பதே உண்மை.//
மிக்க நன்றி மேடம்.
அமைதிச்சாரல் said...
ReplyDelete// சில சமயங்கள்ல தொடர்ந்த வாசிப்பே கூட பழைய உற்சாகத்தை கொண்டாந்துடும் :-)//
நல்ல ஆலோசனை! நன்றி மேடம்.
manivannan said...
ReplyDelete// பதிவுகள் தொடர்ந்து வரட்டும், வாழ்த்துக்கள் சார்//
மிக்க நன்றி சார்.
சென்னை பித்தன் said...
ReplyDelete//இடைவெளியிலும் அவ்வப்போது வலைப்பூவை எட்டிப்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.(நீங்களும் நம்ம பதிவை எட்டிப் பாருங்கள்)//
அவசியம் வர்றேன் சார். மிக்க நன்றி.