Tuesday, May 3, 2011

உலக ஆஸ்த்மா தினம் - ஒரு பார்வை!


இன்று உலக ஆஸ்த்மா தினம். நான் இதை அறிந்தவுடன் "இப்படி ஒரு தினம் கடைப்பிடிக்கப் படுகிறதா?" என்கிற ஆர்வத்தில் தேடிப் படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், முதல் செவ்வாய்க் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த வருட ஆஸ்த்மா தினத்தின் மையக் கருத்து "உங்களுடைய ஆஸ்த்மா நோயை உங்களால் கட்டுப்படுத்த முடியும்" (You Can Control Your Asthma)
என்பதாகும். வருகிற 2015 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்த்மா நோயால் மருத்துவமனையில் தாங்கி சிகிச்சைப் பெறுபவரின் சதவிகிதத்தை ஐம்பதாக குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது GINA -(Global Initiative for Asthma) இதை தமிழில் 'உலகளவில் ஆஸ்த்மாவை முன்னிலைப் படுத்துதல்' என்று பொருள் கொள்ளலாம். முதல் ஆஸ்த்மா தினம் 1998 -ல் ஸ்பெயினில் கொண்டாடப்பட்டது. ஆஸ்த்மா குறித்த மேலதிக தகவல் ஆங்கிலத்தில் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மா தினத்தையொட்டி சென்னையில் 'டாக்டர் மேத்தா ஹாஸ்பிடல்' சார்பாக இலவச ஆஸ்த்மா நோய் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. மே 3 முதல் 12 வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 8.00 மணி வரை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 9841075876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே இங்கே குறிப்பிடுகிறேன். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மாவைக் கட்டுப்படுத்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஆராயிச்சி பற்றி அறிய இங்கே செல்லவும். கூடிய விரைவில் அந்தப் பக்கத்தை தமிழில் தர முயற்சி செய்யலாம் என்று உள்ளேன். மேலும் அவர்களின் ஆராயிச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளேன். பதில் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது குறித்து கடந்த ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆஸ்த்மா,அலர்ஜி நோயாளிகளுக்கு...! அது பலருக்கும் பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

விழிப்புணர்வு பெறுவோம், விரட்டுவோம் ஆஸ்த்மாவை!


7 comments:

  1. நல்ல பதிவு. விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படும் இத்தினம் பற்றிய தகவல் புதிது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. //"இப்படி ஒரு தினம் கடைப்பிடிக்கப் படுகிறதா?" //
    எனக்கும் இதே ஆச்சர்யம்தான்.

    ஆஸ்துமா நிஜமாவே ஒரு பயங்கர வியாதிதான். சின்னப் பிள்ளைகளும் கஷ்டப்படுறதைப் பாத்தாத்தான் ரொம்பக் கொடுமையா இருக்கும்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நன்றி சார்

    ReplyDelete
  4. ஆஸ்துமாவுக்குன்னும் ஒரு தினம் அனுசரிக்கப்படுதா.. புதுத்தகவல் இது. நிச்சயம் பயனுள்ளதும் கூட.

    ReplyDelete
  5. ராமலக்ஷ்மி said...
    //நல்ல பதிவு. விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படும் இத்தினம் பற்றிய தகவல் புதிது. பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  6. விழிப்புணர்வு பகிர்வு. நன்றி. ;-)

    ReplyDelete
  7. ஆஸ்துமாவை விரட்ட யோகாவில் மூச்சு பயற்சி செய்தால் போதும் என நண்பர் ஒருவர் கூறினார்,
    எந்த அளவிற்கு சாத்யாமன்னு தெரியல சார்

    ReplyDelete