Monday, May 2, 2011

வீட்டுக் கணக்கு...?!

வீட்டுக் கணக்கு எழுதும் ப(வ)ழக்கம் , நம்மில் எத்தனைப் பேருக்கு உண்டு என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் குடும்பத்தில் கடந்த வருடம் முதல்தான் எழுத ஆரம்பித்தோம். முன்பெல்லாம், என்னிடம் யாராவது "வீட்டு வரவு செலவு கணக்கு எழுதுவீர்களா?" என்றுக் கேட்டால், "நாங்க, எந்த அனாவசிய செலவும் செய்வதில்லை. அதனால், அதை எழுதி சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை" என்பேன். அது மிகப் பெரிய தவறான வாதம் என்பதை பிறகுதான் உணர்ந்தேன்.

அப்படிக் கணக்கு எழுதுவதால் வரும் நன்மை தீமைகளை இங்கேப் பார்ப்போம்.

1 . நம்முடைய செலவுகளை மாத இறுதியில் ஒருமுறை படித்துப் பார்க்கும் பொழுது, எந்த செலவைக் குறைத்திருக்கலாம், எதை தவிர்த்திருக்காலாம் என்று சிந்திக்க முடியும்.

2 . வாடகை, பால், கேபிள், டெலிபோன், கரண்ட் பில்,இன்சூரன்ஸ் போன்றவை எந்த தேதியில் கட்டப் பட்டது என்பதை நினைவு கொள்வது எளிது.

3 . வண்டி எந்த தேதியில் சர்வீஸ் செய்தோம். டாக்டரிடம் எந்த தேதியில் சென்றோம், ஊருக்கு எப்பொழுது சென்று வந்தோம் என்பதை எளிதாக நினைவுப் படுத்திக்கொள்ளலாம்.

4 . அடிக்கடி வாடகை வீடு மாறுபவர்களுக்கு, எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்தோம். எந்த தேதியில் கொடுத்தோம் என்ற விபரங்களை எளிதில் அறிய முடியும். பலர் வாடகைப் பத்திரம் கேட்பதுமில்லை, கொடுப்பதுமில்லை.

5 . பல வருடங்களுக்குப் பிறகு இத்தைகைய கணக்குப் நோட்டை பார்த்தால், நம்முடைய பொருளாதார வளர்ச்சி / வீழ்ச்சி குறிந்து அறிந்து கொள்ளலாம். சந்ததியினர்களுக்கும், நம் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.

6 . ஒரே தீமை என்றால், அது நம்முடைய வருமானத்தை பிறர் அறிந்து கொள்ளவார்கள். இதிலும், நேர்மையான வருமானம் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.

'ஆற்றில் போட்டாலும், அளந்து போடு' என்பார்கள். அது சரிதானே?

எங்கே புறப்பட்டுட்டீங்க, நோட்டு வாங்க கடைக்கா?


14 comments:

 1. அட இப்படியும் செய்யலாமா ? நம்மளுக்கும் பழக்கமில்லியே..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

  ReplyDelete
 2. நல்ல பதிவு. நான் செய்து வருகிறேன். கணக்கில் சற்று வீக். நோட்டில் எங்கே பிழை விட்டேன் என சரி பார்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்:)! இப்போ 16 வருடமாய் கணினியின் கணக்கு கச்சிதமாக! நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை பாயிண்டுடனும் ஒத்துப் போகிறேன்.

  ReplyDelete
 3. விடுப்பட்ட விஷயம்...

  கடந்த ஆண்டு கணக்கு எழுத தீர்மானித்தப்பிறகு, கடைக்குச் சென்று சிறிய அளவிலான நோட்டை வாங்கி, கணக்கு எழுத ஆரம்பித்தேன். ஆனால், அது மிகவும் சிரமமாகிவிட்டது. சிறிய அளவில் நோட்டு இருந்ததால், அடிக்கடி காணாமல் போய்விடும்.அதைத் தேடும் நேரத்தில் கணக்கு எழுதும் எண்ணம் குறைய ஆரம்பித்தது.

  எனவே, இந்த ஆண்டு துவக்கத்தில் பெரிய சைஸ் நோட்டாக வாங்கிவிட்டேன். இப்பொழுது நோட்டை தேடும் வேலை மிச்சமாகிவிட்டது.

  ReplyDelete
 4. //♔ம.தி.சுதா♔ said...
  அட இப்படியும் செய்யலாமா ? நம்மளுக்கும் பழக்கமில்லியே..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 5. இந்தியாவில் இருந்தவரை தவறாமல் எழுதி வச்சுருந்தோம்.

  எப்பவாவது இந்த நோட்புக் கள் கண்ணீல் பட்டால் அவைகளைப் பார்த்து வியந்து சிரித்து அப்போதைய நிதிநிலமையில் நாம் என்னெல்லாம் செஞ்சுருக்கோமுன்னு ....... நல்ல பொழுது போக்கு.

  நேத்துக்கூட இப்படி ஒன்னு கண்ணில் பட்டது:-))))

  ReplyDelete
 6. இது ஒரு நல்ல வழக்கம்... சில சமயங்களில் பழைய புத்தகங்களைப் பார்க்கும் போது அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் மனதில் வந்து போகும்....

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. ராமலக்ஷ்மி said...

  //நல்ல பதிவு. நான் செய்து வருகிறேன்.//

  நன்றி மேடம்.

  //கணக்கில் சற்று வீக். நோட்டில் எங்கே பிழை விட்டேன் என சரி பார்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்:)!//

  எப்போதாவது, அப்படி நிகழ்வதும் உண்டு.

  //இப்போ 16 வருடமாய் கணினியின் கணக்கு கச்சிதமாக!//

  'கணினியில் வீட்டுக் கணக்கு எழுதுவது எப்படி?' என்று ஒரு பதிவு போடலாமே. எங்களைப் போன்றவர்களுக்கு பயன்படுமே!

  //நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை பாயிண்டுடனும் ஒத்துப் போகிறேன்.//

  மிக்க மகிழ்ச்சி மேடம்.

  ReplyDelete
 8. //சி.பி.செந்தில்குமார் said...
  ஹி ஹி ஹி//

  ஹா ஹா ஹா

  நன்றி சார்.

  ReplyDelete
 9. நானும் இவ்வாறு கணக்கு எழுதுவேன். நமது வருமானம் இதனால் தெரியும் என்கிறீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தானே தெரியும். மற்றவர்கள் பார்க்க போவதில்லையே !

  ReplyDelete
 10. வாழ்க்கையின் அவசியத்தை அனாசயமாக எடுத்து சொல்லியிருக்கிங்க
  இந்த மாதம் முதல் நானும் தொடங்குகிறேன்

  ReplyDelete
 11. நல்ல ஒரு செயலை இன்று எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறீர்கள். இனி தொடருவோம்.

  ReplyDelete
 12. துளசி கோபால் said...

  //இந்தியாவில் இருந்தவரை தவறாமல் எழுதி வச்சுருந்தோம்.//

  இனியும் தொடரலாம்தானே?!

  *********************

  //எப்பவாவது இந்த நோட்புக் கள் கண்ணீல் பட்டால் அவைகளைப் பார்த்து வியந்து சிரித்து அப்போதைய நிதிநிலமையில் நாம் என்னெல்லாம் செஞ்சுருக்கோமுன்னு ....... நல்ல பொழுது போக்கு.//


  சிறு வயதில், என்னுடைய தாத்தா எழுதிய நோட்டைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால், எனது பேரனுக்கு அப்படி ஒரு வியப்பைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், அப்பொழுது எனக்கு வரவில்லை.

  ****************

  //நேத்துக்கூட இப்படி ஒன்னு கண்ணில் பட்டது:-))))//

  மகிழ்ச்சி!

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 13. என்னுடை 18 வயதில் 500 சம்பளம் வாங்கியபோது எழத தொடங்கினன்.தற்போது 37 வயதிலும் எழுதுகிறன்.அதற்க்கு தனியாக நோட் தேவையில்லை நமது டைரி போதும்,நாம் வருமானம் சரியான
  முறையில் செலவு செய்கிறோமா என நமக்கு நாமே எழுதும் தேர்வு,சேமிப்பு அதிகரிக்கும்,

  ReplyDelete