Saturday, May 7, 2011

கண்டிப்பாக, அட்சய திருதியையன்று தங்கம் வாங்காதவர்களுக்கு மட்டும்!

'அட்சயதிருதியை' இந்த வார்த்தையை தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. அது குறித்தும் இங்கு நான் எதுவும் எழுதப்போவதில்லை. தங்கம் என்பது தேவை இல்லாத ஆடம்பர பொருள், அது மற்றுமோர் உலோகம் என்பதே எனது எண்ணம். அதற்கு காரணம், எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, 'தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு புத்திசாலித் தனம் கிடையாது' என்று எனக்குள் குடிகொண்டுவிட்ட நாம்பிக்கையை அத்தனை எளிதில் விரட்ட முடியாது என்றே தோன்றுகிறது.


தங்கத்தின் விலையை கடந்த பல ஆண்டுகளாக பார்த்தால் உண்மை புரியும். அதனை முதலில் பார்ப்போம். 2006 வருட இறுதியில்தான் விலையில் ஏறுமுகம் கண்டது. முதலில் கீழ்கண்ட வரைப் படத்தைப் பாருங்கள்.
இதன் விபரம் மேலும் அறிய இங்கே செல்லவும்.Yearly Average Prizes GOLD FROM 1833 TO 2002

YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
from 1833 to 1871 18,93 from 1872 to 1878 18,94 1879 18,93 from 1880 to 1885 18,94
from 1886 to 1887 18,93 1888 18,94 1889 18,93 1890 18,94
from 1891 to 1893 18,93 1894 18,94 1895 18,93 from 1896 to 1898 18,98
1899 18,94 1900 18,96 1901 18,98 1902 18,97
1903 18,95 1904 18,96 1905 18,92 1906 18,90
1907 18,94 1908 18,95 1909 18,96 1910 - 1911 18,92
1912 18,93 1913 18,92 from 1914 to 1918 18,99 1919 19,95
1920 20,68 1921 20,58 1922 20,66 1923 21,32
1924 20,69 1925 20,64 1926 20,63 1927 20,64
1928 20,66 1929 20,63 1930 20,65 1931 17,06
1932 20,69 1933 26,33 1934 34,69 1935 34,84
1936 34,87 1937 34,79 1938 34,85 1939 34,42
from 1940 to 1944 33,85 from 1945 to 1948 34,71 1949 31,69 1950 - 1951 34,72
1952 34,60 1953 34,84 1954 35,04 1955 35,03
1956 34,99 1957 34,95 1958 - 1959 35.10 1960 35,27
1961 35,25 1962 35,23 1963 35,09 1964 35,10
1965 35,12 1966 35,13 1967 34,95 1968 38,69
1969 41,09 1970 35,94 1971 40,80 1972 58,16
1973 97,32 1974 159,26 1975 161,02 1976 124,84
1977 147,71 1978 193,22 1979 306,68 1980 612,56
1981 460,03 1982 375,67 1983 424,35 1984 360,48
1985 317,26 1986 367,66 1987 446,46 1988 436,94
1989 381,44 1990 383,51 1991 362,11 1992 343,82
1993 359,82 1994 384,15 1995 384,05 1996 387,87
1997 331,29 1998 294,09 1999 278,57 2000 279,11
2005
271,04 2002 309,68 2003 363.38 2004 409.72
2005 444.72 2006 594.66(appr)இதனை விபரமாக அறிய இங்கே பார்க்கவும்.


பல்வேறு காலக் கட்டங்களில், தங்கம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துதான் வந்துள்ளது. எனவே, இப்பொழுது உள்ள விலை ஏற்றமும் தற்காலிகமானதுதான் அல்லது இனி தொடர்ந்து வரும் பல ஆண்டுகளுக்கு இந்த விலையே தொடரும் என்று நினைத்து தங்க நகை வாங்காதவர்கள் மகிழ்ச்சியடையலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. இது, தங்கம் வாங்க முடியாதவர்களை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே! மற்றபடி அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கியவர்களுக்கு, அவர்களே இனி வேண்டாம் என்றாலும் விடாது இந்த ஆண்டு முழுதும் தங்கம் கொட்டியே தீரும். அதை, யாராலும் தடுக்க முடியாது.

இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!


24 comments:

 1. ரெண்டு நாளா வீட்டைவிட்டு வெளியே காலடி வைக்கலை. குந்துமணித் தங்கமும் வாங்கலை.

  நேத்து அக்ஷ்ய த்ருதியை முன்னிட்டு வீட்டுலே இருக்கும் ஸ்வாமி விக்ரஹங்களுக்குத் திருமஞ்சனம் செஞ்சு புது உடைகள் அணிவிச்சேன்.

  கோபால் வேலையில் இருந்து வீடு வரும்போது ஒரு பாக்கெட் உப்பு வாங்கியாந்தார். விழா இனிதே முடிஞ்சது.

  தங்கம் விலை இப்படி ஏறுமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆனால்...இப்போதான் நகைக்கடைக்காரர்களின் விளம்பரம் அளவுக்கு மேலே போய்கிட்டே இருக்கு:(

  டிஸைன்களும் புதுமாதிரின்னு பார்க்கச் சகிக்கலை:(

  ReplyDelete
 2. தெளிவூட்டும் பதிவு
  தங்கம் வாங்கினாலும் விற்றாலும்
  அல்லது சும்மா வைத்திருந்தாலும்
  கடைக்காரருக்குத்தான் லாபம்
  நமக்கு நஷ்டம்தான்
  இதை எல்லோரும் உணர்கையில்
  நிச்சயம் விலை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிற்கும்
  அதுவரை......
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சார் இந்த க்ராபில் எங்கே விலை இறங்கியிருக்கு? 2008-09 கால கட்டத்தில் மட்டும் கொஞ்சம் இறங்கியிருக்கே தவிர மற்ற படி ஏறு முகம் தானே ? கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து தங்கம் 20 சதவீதம் ரிட்டர்ன் தந்து வருவதாக நேற்று தான் படித்தேன் அட்சய திருதை அன்று வாங்க சொல்ல வில்லை. தங்கம் தொடர்ந்து நல்ல முதலீடாக இருந்து வருகிறது என்கிறேன்.

  ம்ம் உங்களுக்கு இந்த கவலை எல்லாம் இல்லை. உங்களுக்கு தங்கம் வரவு மட்டும் தானே; நோ செலவு :)))

  ReplyDelete
 4. இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!//
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. தங்கத்துடன்தான் மணமேடைக்கு வர வேண்டுமெனும் நிலைமை நம் நாட்டில் எப்போது மாறுமோ? அதுவும் அடித்தட்டு மக்களின் நிலைமை மிகப் பரிதாபத்துக்குரியது. சம்பாத்தியத்தின் பெரும்பங்கை நகைச்சீட்டுக்கே செலவழிக்கிறார்கள். அப்படி வாங்கும் நகையும் பெரும்பாலும் அடகுக் கடையில்..

  ReplyDelete
 6. துளசி கோபால் said...

  //ரெண்டு நாளா வீட்டைவிட்டு வெளியே காலடி வைக்கலை. குந்துமணித் தங்கமும் வாங்கலை.//

  அதான் துணிச்சலா இந்தப் பதிவ படிச்சிருக்கீங்க:-))))!

  *******

  //நேத்து அக்ஷ்ய த்ருதியை முன்னிட்டு வீட்டுலே இருக்கும் ஸ்வாமி விக்ரஹங்களுக்குத் திருமஞ்சனம் செஞ்சு புது உடைகள் அணிவிச்சேன்//

  நல்ல விஷயம்.

  ************

  //தங்கம் விலை இப்படி ஏறுமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆனால்...இப்போதான் நகைக்கடைக்காரர்களின் விளம்பரம் அளவுக்கு மேலே போய்கிட்டே இருக்கு:(///

  எல்லோருக்கும் இந்தக் கவலை இருக்கிறதாலதான் இப்படி ஒரு பதிவு.

  ***********

  //டிஸைன்களும் புதுமாதிரின்னு பார்க்கச் சகிக்கலை:(//

  சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்)))!

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 7. Ramani said...

  //தெளிவூட்டும் பதிவு//

  மிக்க நன்றி சார்.

  *****************

  //தங்கம் வாங்கினாலும் விற்றாலும்
  அல்லது சும்மா வைத்திருந்தாலும்
  கடைக்காரருக்குத்தான் லாபம்
  நமக்கு நஷ்டம்தான்//

  சரியச் சொன்னீங்க சார்.

  ******************

  //இதை எல்லோரும் உணர்கையில்
  நிச்சயம் விலை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிற்கும்
  அதுவரை...... //

  நாம் வாங்காமல் இருக்கலாம்.

  *************

  //நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 8. :) ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை! எங்கே போய் முடியுமோ தெரியல!

  ReplyDelete
 9. தங்கம் தேவையில்லாத ஆடம்பர பொருள், சரியா சொல்லிடிங்க சார். புள்ளி விவரங்களுடன் தங்களின்
  பகிர்வு அருமை

  ReplyDelete
 10. நல்ல விஷயம். அருமையா சொல்லி இருக்கீங்க சார்.

  ReplyDelete
 11. மோகன் குமார் said...

  //சார் இந்த க்ராபில் எங்கே விலை இறங்கியிருக்கு?//

  1996 இருந்த விலை குறைந்து மீண்டும் 2003 -ல் தான் 96 ஆம் வருடத்திய விலையைத் தொட்டிருக்கிறது சார். 1980 முதல் 1990 வரை பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை.

  ***************

  // 2008-09 கால கட்டத்தில் மட்டும் கொஞ்சம் இறங்கியிருக்கே தவிர மற்ற படி ஏறு முகம் தானே ?//

  நான் சொல்ல வந்தது பழையக் காலத்தைப் பற்றி சார். கொஞ்சம் விபரமாக எழுதியிருக்க வேண்டும். பதிவு நீண்டதால் சுருக்கமாக எழுதிவிட்டேன்.

  **************

  // கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து தங்கம் 20 சதவீதம் ரிட்டர்ன் தந்து வருவதாக நேற்று தான் படித்தேன//

  அப்படியா?! எனக்கு இந்தக் கணக்கு எல்லாம் புரியவில்லை. கையில பணமில்லை அதனால தங்கம் வாங்க முடியவில்லை. குடும்பத்தில் குழப்பம் வரக்கூடாதுன்னு இப்படி பதிவெல்லாம் எழுதி சமாளிக்கிறேன். அவ்வளவுதான்:-)))!

  ******************


  // அட்சய திருதை அன்று வாங்க சொல்ல வில்லை. தங்கம் தொடர்ந்து நல்ல முதலீடாக இருந்து வருகிறது என்கிறேன்.//

  1980 வது ஆண்டு வாங்கிய தங்கம் 90ஆம் ஆண்டு அதே விலையில் விற்றுள்ளது. அப்படி இப்பொழுது நிகழாது என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்.
  இது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளது. மற்றொரு பதிவில் பார்ப்போம்.

  ***************

  //ம்ம் உங்களுக்கு இந்த கவலை எல்லாம் இல்லை.//

  ஹா ஹா ஹா....

  *************

  // உங்களுக்கு தங்கம் வரவு மட்டும் தானே; நோ செலவு :))) //

  சார்... இதுக்கு இப்ப நான் பதில் சொல்ல இயலவில்லை!

  ******************

  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 12. இராஜராஜேஸ்வரி said...

  இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!/

  பாராட்டுக்கள்.//

  தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி மேடம்.

  ReplyDelete
 13. ராமலக்ஷ்மி said...

  //தங்கத்துடன்தான் மணமேடைக்கு வர வேண்டுமெனும் நிலைமை நம் நாட்டில் எப்போது மாறுமோ?//

  மாற்றுவதற்கு வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும்!

  ****************

  //அதுவும் அடித்தட்டு மக்களின் நிலைமை மிகப் பரிதாபத்துக்குரியது.//

  நிச்சயமாக. பலர் தங்கத்தை சேமிப்பு என்ற பெயரில் முடக்கி வைத்துவிடுகிறார்கள். அதனால், ஏழை மக்கள் காதில் அணியும் நகைகள் கூடத் தங்கத்தில் வாங்க முடியாத நிலை!

  *****************

  //சம்பாத்தியத்தின் பெரும்பங்கை நகைச்சீட்டுக்கே செலவழிக்கிறார்கள்.//

  அதிலும் சிலர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது இன்னும் கொடுமை.

  ***************


  //அப்படி வாங்கும் நகையும் பெரும்பாலும் அடகுக் கடையில்..//

  இந்த அனுபவம் எனக்கு அதிகமுண்டு. எனக்கு தெரிந்து பலர் நகையை வாங்கிய அன்று பார்த்ததோடு சரி. மற்றபடி, எப்பொழுதும் அடகுக்கடையில் பாதுகாப்பாக இருக்கும். முதலீட்டை வைத்துக்கொண்டு, நம்முடைய பணத்திற்கு நாமே வட்டிக்கட்டும் நிலை இது!

  ******************

  தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 14. வெங்கட் நாகராஜ் said...

  // :) ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை! எங்கே போய் முடியுமோ தெரியல!//

  நிச்சயம் ஒரு முடிவு உண்டுதானே?!

  ********************

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 15. manivannan said...

  //தங்கம் தேவையில்லாத ஆடம்பர பொருள், சரியா சொல்லிடிங்க சார்.//

  பாராட்டுக்கு நன்றி சார்.

  *****************

  // புள்ளி விவரங்களுடன் தங்களின்
  பகிர்வு அருமை//

  நான் படித்ததை மற்றவர்களுக்கு தந்துள்ளேன் அவ்வளவே!

  ***********

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 16. எம் அப்துல் காதர் said...

  // நல்ல விஷயம். அருமையா சொல்லி இருக்கீங்க சார்.//

  பாராட்டுக்கு நன்றி சார். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 17. இந்த லிங்க்.......பாருங்க http://www.sharelynx.com/chartsfixed/600yeargold.gif என்ன ஆட்டம் போட்டிருக்கு தங்கம்

  ReplyDelete
 18. புள்ளி விவரம் எல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க!
  (வார இறுதி நாட்களில்-சனி,ஞாயிறு-மின்னஞ்சல் தவிர இண்டர்நெட்டில் வேறெதுவும் செய்வதில்லை.எனவே தாமதம்)

  ReplyDelete
 19. பாலா said...

  //இந்த லிங்க்.......பாருங்க//

  வணக்கம் சார், ரொம்ப நல்ல இருக்கு நன்றி.

  *********************

  //http://www.sharelynx.com/chartsfixed/600yeargold.gif//

  அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய வரைபடம். இதன் பிறகாவது புரிந்து கொண்டால் சரி.

  ********************

  //என்ன ஆட்டம் போட்டிருக்கு தங்கம்//

  இப்ப தங்கம் ஆட்டம் போடல. அதை வச்சிருக்கவங்கதான் ஆட்டம் போடுறாங்க. கால் வலிச்சு கீழே உட்கார்ந்திடுவாங்க!

  ********

  வருகைக்கும் லின்க்கும் நன்றி சார்.

  ReplyDelete
 20. அட்ஷர சுத்தமான
  தங்கப்பதிவு

  ReplyDelete
 21. என்னவரும் அந்த கிராஃபைத்தான் அடிக்கடி அந்தத் தளத்தில் பார்த்து எதேதோ சொல்லுவார் - உங்களை, மோகன்குமார் மாதிரியெல்லாம்!! ;-))) நான், தங்கம் வாங்கவேண்டாம்னா நேரடியாச் சொல்லுங்க, இப்படி குழப்பாதீங்கனு சொல்லுவேன். :-))))

  இப்பலாம், தங்கம் வாங்குறமாதிரி இல்லை. ஆசைக்கு வாங்கணும்னா 18 காரட் பக்கம் போயிடறது. ஆனா, அதுலயும், செய்கூலில தாளிச்சுடுறாங்க. :-(((

  ReplyDelete
 22. A.R.RAJAGOPALAN said...

  //அட்ஷர சுத்தமான
  தங்கப்பதிவு//


  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 23. ஹுஸைனம்மா said...

  // என்னவரும் அந்த கிராஃபைத்தான் அடிக்கடி அந்தத் தளத்தில் பார்த்து எதேதோ சொல்லுவார் - உங்களை, மோகன்குமார் மாதிரியெல்லாம்!! ;-))) //

  சார் சொல்றது சரியாத்தான் இருக்கும்.


  //நான், தங்கம் வாங்கவேண்டாம்னா நேரடியாச் சொல்லுங்க, இப்படி குழப்பாதீங்கனு சொல்லுவேன். :-))))//

  வீட்டுக்கு வீடு இப்படித்தானா?


  // இப்பலாம், தங்கம் வாங்குறமாதிரி இல்லை. ஆசைக்கு வாங்கணும்னா 18 காரட் பக்கம் போயிடறது. ஆனா, அதுலயும், செய்கூலில தாளிச்சுடுறாங்க. :-(((//

  இந்த ஐடியா நல்லா இருக்கே. நானும் வீட்ல பேசிப்பார்க்கிறேன்.

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete