அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)
எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.
'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.
நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.
சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.
கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.
இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.
அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/
2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!
படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.
மிகவும் உபயோகமான
ReplyDeleteஉன்னத பதிவு
நான் கூட சட்ட கல்லூரியில் இடமும் கட்டணமும் அதிகம் என்றே நினைத்திருந்தேன்
நன்றி
தங்க தகவலை தந்ததற்கு
Sorry to have some differences. English s used to go fast. Sorry again for that.
ReplyDeleteFirst of all, congrats to the woman who have come first in the competitive exam. Nothing more from me for her ! I don't feel proud and I dont need to held my
But of what use for all Tamilians that ? How does it make our heads held high ? U have not explained it.
Why is there the School for Excellence in Law ? Y was it started at all ? Was it to mean the other law colleges r nt/ or shd not be so ?
Some time back, there was a proposal to creat schools for excellence for meritorious students mooted by Central Govt ? It was immediately shouted out and buried. Coz. in a democracy it will create unnecy divide among people. V have so many other divisions, and y to add one more, that too, affecting children?
Y School for Excellence in Law ?
What s the objective of such school ? As u wrote, to create legal luminaries !!
Then, what shd other law colleges do ? To produce legal idiots or mediocres? Y this discrimination among institutions created by Govt itself ?
Come back to her again.
ReplyDeleteShe said she would wipe out corruption by changing the system.
She is exposing her childish ignorance.
For that to do, namely to change the system, it will require more than 3 decades in the service, and a extraordinary amount of courage, to change the system.
To change the system, one needs to build a political consensus. That s possible for only politcians. Not for bureaucrats. If an officer attempts to do, she or he will b shown her or his place at once. If she or he persists, then, she or he will hav to face serious consequences even danger to their lives, and the lives of near and dear ones. As Bhat IPS is facing now in Gujrarat. Or Alhpone in Kerala, Kairnarar in Mahrastra, and ur own Uma Shankar in TN.
தங்களின் அனுபவத்திலும்,பலரும் பயன் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திலும்,அருமையான பதிவு சார்,
ReplyDeleteதிவ்யதர்ஷனி க்கு வாழ்த்துகள்.ஒரு நல்ல பதிவுக்காக உங்கலுக்கு நன்றி!
ReplyDeleteSuppose she means her words: "I will change the system and root out corruption."
ReplyDeleteThen, u need to wait for that, i.e many decades. If she does that, at least partly, only then, and repeat only then, your title of the blog will b justified.
Tamilians can feel proud only if she does not go back on her words; and achives the meaning in reality, even partly.
Her mere passing of the exam and topping it, does not make our heads held high. But her future action will.
U dont seem to have au fait with IAS exams as held today. If u know, u will come to know that if u master the system, u will be in. The exam s not successful in getting the right Indians. It is nothing but an exam for a job.
Our best wishes to her!
ReplyDeleteHav seen so many candidates boasting 'I will change the system for better' and finally seen amassing wealth and absuing power within a decade of service, by building an unholy nexus with politicians for getting lucrative tenures etc.
ReplyDeleteI m not saying Ms Divya Dharahini (What a name for a Tamilian !) will do all that; but only point out that such words carry no conviction in today India as v r surrounded by corruption - ridden bureaucracy both at centre and state. A few may b there and v hav seen. But that s negligible, that cd not even make a ripple effect.
If u dont believe me, look at today TN. The officers in service while Muka was in power, now are shunted out and posted in sinecures (w/o any use- only salary). And the officers loyal to Je hav been posted. If after 5 yrs, non-Aiadmk comes to power, the current batch of officers will b shunted out.
Dont justify the new govt needs new officers. The fact is that there are groups w/in bureaucracy. U join a a group and wait for ur sun shine to make hay.
What s this all show it to u?
To change the system, study anything u like, if legal degree, well and good. Join politics and become a leader. U can change the system. As an officer, u r a pigmy and even a slave to the system u head or part of.
ReplyDeleteTN Sheshan was in IAS for nearly 4 decades. He could nt do anything to change the system suppose he disliked that. Out of IAS, he became EC. A consitutional authority under no govt or politician. Right under President only.
Seen and assured of such powers, he exercised it to bring certain changes in the electoral law like Voters card.
After nearly 40 years, that too, out of IAS.
Ur decrying of Madras Law college as producing rowdies and upholding School of Excellence in Law as producing IAS toppers, makes sad reading.
ReplyDeleteMLC makes one conscious of his rights, human rights, and a passion for justice, and an urge to agitate against the system. Such courage cant be found among other college students as the students r expected to be slaves to society.
MLC students r not slaves. From among whom our hope rests for future leaders as politicians national and regional, who CAN CHANGE THE SYSTEM.
It has produced many. Like this MLC, JNU also.
Free thinking, no mental slavery.
On the contray, take ur School of Excellence in Law. What does it produce ? And who shd it produce as u say? IAS officers. Will they change the system ?
Please ask urself this qn:
ReplyDeleteWhat use is her eduction in the School of Excellence in Law ?
She used it to write IAS, didnt she?
Then, y shd there be School for Excellence in Law and y shd govt run that ?
saro said...
ReplyDelete//உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.//
நன்றி.
A.R.RAJAGOPALAN said...
ReplyDelete// மிகவும் உபயோகமான
உன்னத பதிவு//
நன்றி சார்.
***
// நான் கூட சட்ட கல்லூரியில் இடமும் கட்டணமும் அதிகம் என்றே நினைத்திருந்தேன் ,நன்றி
தங்க தகவலை தந்ததற்கு.//
என்னுடைய நோக்கத்தை சரியாகப் புரிந்துக் கொண்டமைக்கு, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் சார்.
திவ்யதர்ஷினிக்கு வாழ்த்துக்கள். +2 ரிசல்ட் வெளியாகியுள்ள இந்த சமயத்தில் சட்டப் படிப்பு குறித்தான உங்கள் பகிர்வு பலருக்கும் பயனாகும்.
ReplyDeleteCongrats Dhivyadharshini... nice informative post
ReplyDeleteGood Information
ReplyDeleteதிவ்யதர்ஷினிக்கும்
ReplyDeleteஅமைதி விரும்பிக்கும்
எனது நல்வாழ்த்துக்கள் .
திவ்யதர்ஷனிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..,
ReplyDeletesimmakkal said...
ReplyDelete// Sorry to have some differences. English s used to go fast. Sorry again for that.
First of all, congrats to the woman who have come first in the competitive exam.
Nothing more from me for her!........................................................
.............. Then, what shd other law colleges do ? To produce legal idiots or mediocres? Y this discrimination among institutions created by Govt itself ?//
வணக்கம் மேடம், என்னுடைய பதிவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மிக நீண்ட பின்னூட்டம் எழுதியமைக்கு முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
ஆங்கிலம் எனக்கு சரளமாக வராது. ஓரளவுக்கு புரிந்து கொள்ள மட்டுமே முடியும். அப்படி, நான் புரிந்து கொண்ட வகையில் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
முக்கியமாக, இந்தப் பதிவானது சட்டக்கல்வி பக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைப் பட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப் பட்டது.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவும்.
தங்களுடையக் கேள்வி இவரால்,தமிழனின் தலை எப்படி நிமிர்ந்தது என்பதாகும்.அதற்கு நான் பதில் கடைசி பாராவில் சொல்லி இருக்கிறேன்.
//2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!//
சட்டக் கல்லூரி வன்முறையை, அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். அது இந்திய அளவில், ஏன் உலகளவில் தமிழக மாணவர்களுக்கு எப்படி ஒரு தலைக் குனிவை உண்டு பண்ணியது என்பதையும் அறிவீர்கள்.
அப்படி இல்லையெனில் ஒரு சட்டக்கல்வி பயிலும் மாணவனின் தந்தை என்ற முறையில் நான் அனுபவித்த வேதனையும், எங்கள் உறவினர்கள் நண்பர்களின் பதட்டத்தையும் தங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteசரி, ஏன் சிறப்புப் பள்ளி?
ReplyDeleteஎன்ஜினியரிங் படிப்பதற்கு, நம்ம ஊர் கல்லூரிகளே போதுமே? பிறகு IIT, NIIT போன்ற கல்வி நிறுவனங்கள் எதற்கு?
MBA படிப்பதற்கு எதற்கு IIM?
இது விதண்டாவாத கேள்வியல்ல. உலகளவில் நம்முடைய சட்க்கல்வி தரம் உயர்த்தப்பட வேண்டும். இல்லையெனில், வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதை தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள்.
மேலும், இங்கு SOEL இல்லையென்றால் NLS அல்லது NALSAR போன்ற சட்டக் கல்லூரிகளை நாடி, நம் மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அப்படி செல்வதற்கோ அல்லது வெளி நாடு சென்று படிப்பதற்கோ எங்களைப் போன்ற நடுத்தர மற்றும் ஏழை மக்களால் எப்படி முடியும்?
மேலும், நம்முடைய பணம் படைத்த அல்லது இயன்ற மாணவர்கள் வெளிநாடு சென்று சட்டம் படித்து வருகிறார்கள். அப்படி அவர்கள் வரும் பொழுது, இங்கு படித்தவர்களுடன் தானே பணிபுரிகிறார்கள். இங்குள்ள வழக்கறிஞர்களிடையே ஏற்றத் தாழ்வு வந்துவிடும். அதனால், யாரும் வெளிநாடு சென்று படிக்கக் கூடாது என்று நாம் தடுக்க முடியுமா?
ஏதோ, நமக்கு உதவுவது இது மாதிரி கல்வி நிறுவனங்கள்தான் என்பதே என் கருத்து.
மற்ற தங்களின் கேள்விகளுக்கும் வரும் நாட்களில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். எது எப்படியோ, சட்டக்கல்வி பயின்றவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. இது எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என்பதே எனது எண்ணம்.
திவ்யதர்ஷனிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிகவும் அற்புதமான பதிவு. நீங்கள் ஒரு பொறுப்புள்ள அப்பா! ;-))
ReplyDeleteChitra said,
ReplyDelete//Our best wishes to her! //
நன்றி மேடம்.
மணி said,
ReplyDelete//தங்களின் அனுபவத்திலும்,பலரும் பயன் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்திலும்,அருமையான பதிவு சார்,//
மிக்க நன்றி சார்.
சென்னை பித்தன் said,
ReplyDelete//திவ்யதர்ஷனிக்கு வாழ்த்துகள்.//
நன்றி.
***
//ஒரு நல்ல பதிவுக்காக உங்களுக்கு நன்றி! //
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி சார்.
உங்க பிளாக் லே அவுட் வெரி சிம்ப்பிள் & நீட் .. சார்
ReplyDeleteராமலக்ஷ்மி said,
ReplyDelete//திவ்யதர்ஷினிக்கு வாழ்த்துக்கள். +2 ரிசல்ட் வெளியாகியுள்ள இந்த சமயத்தில் சட்டப் படிப்பு குறித்தான உங்கள் பகிர்வு பலருக்கும் பயனாகும். //
ஆமாம் மேடம், அதற்குத்தான் இந்தப் பதிவு. நன்றி.
அப்பாவி தங்கமணி said,
ReplyDelete//Congrats Dhivyadharshini... nice informative போஸ்ட்//
நன்றி மேடம்.
Thirupathi said,
ReplyDelete//Good Information //
நன்றி.
...αηαη∂.... said,
ReplyDelete//திவ்யதர்ஷனிக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.., //
நன்றி சார்.
இராஜராஜேஸ்வரி said,
ReplyDelete//திவ்யதர்ஷனிக்கு வாழ்த்துக்கள்.. //
நன்றி மேடம்.
RVS said...
ReplyDelete// மிகவும் அற்புதமான பதிவு.//
மிக்க நன்றி சார்.
**************
//நீங்கள் ஒரு பொறுப்புள்ள அப்பா!;-))//
ஹா..,ஹா...,ஹா..,
bala said,
ReplyDelete//பாலாஜி கருப்பம்புலம்//
தங்களுடைய வருகையும் கருத்துக்களும் மகிழ்ச்சியளிக்கிறது.
**************
//திரு சகாயம் போன்று ஒரு நல்ல அதிகாரியாக செல்வி திவ்யதர்ஷினி வரும்போது நிச்சயம் தமிழனின் தலை நிமிரும்//
நம்புவோம் சார்.
**************
//வக்கில்கள் என்றாலே அடாவடியில் ஈடுபடுகிறவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருப்பது என்னவோ உண்மைதான்.//
இதை மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். சட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அதிகளவில் சட்டக்கல்வி பயில வரவேண்டும்.
**************
//இந்திய நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரியவர்களில் 99 சதம் பேர் வக்கீல்கள் என்பதை மறந்தது விடக்கூடாது .வ.ஊ.சி. .ராஜாஜி நேரு காந்தி படேல் போன்றவர்கள் எல்லாம் யார்.ஏன் ஈழத்தில் தமிழினம் சொல்லவொண்ண துயர் பட்டபோது உணர்ச்சி மிக்க போராட்டங்களை நடத்தியவர்கள் யார். ஆசிரியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் போன்றவர்கள்தானே எந்த சமுகத்தை தூக்கி நிறுத்திகிறவர்கள்.//
நல்ல செய்தியை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி.
**************
//வக்கீல் தொழிலின் மேன்மையை மற்றவர்கள் உணர்வது இருக்கட்டும் முதலில் வகில்களும் ,வக்கிலுக்கு படிப்பவர்களும் உணரவேண்டும்.//
அருமையாக சொல்லியுள்ளீர்கள். ஆமாம், அவர்கள் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
good post
ReplyDelete-rama subramanian.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//உங்க பிளாக் லே அவுட் வெரி சிம்ப்பிள் & நீட் .. சார்//
விஷயம் ஒன்னுமில்லன்னு இவ்வளவு தெளிவா யாரும் சொன்னதில்ல சார்:-)))))!
Anonymous said...
ReplyDelete//good post
-rama subramanian//
நன்றி சார்.
முக்கியமாக, இந்தப் பதிவானது சட்டக்கல்வி பக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைப் பட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப் பட்டது.
ReplyDeleteஅந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவும்.//
I was on long leave. I saw ur response only now. As u r not comfortable with English, here s my response in Tamil:
அதற்கு காட்டப்பட்ட நபர் சரியல்ல என்பதே என் கருத்து. அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.
அவர் தன் சட்டக்கல்வியை - ஐந்தாண்டுகள் படித்தது; அதுவும் நீங்கள் சொன்னதுபோல உயரிய கல்லூரியில் படித்தது !- தூக்கியெறிந்து விட்டு கைகட்டிச்சேவகம் செய்யும் தொழிலுக்குப்போய் விட்டார். படிப்பறிவே இல்லா ரவுடி அமைச்சரானால் இவர் அவன் முன் கைகட்டித்தான் நிற்கவேண்டும்.
ஐஐடி, ல் படித்த பொறியாளர்கள் போன்றவர்கள் இப்படி தன் கல்வியை உதாசீனம் பண்ணினால், எவரேனும் இஞ்சினியரிங் படியுங்கள். அது ஒரு நல்ல படிப்பு. அம்மாணவர்கள் கவ்ர்ன்மெண்டு கிளார்க்காகி கோப்புகளில் எழுதிபிழைக்கலாம். தன் செல்வாக்கைப்பயன்படுத்தி பவனி வரலாம் என்று சொல்வீர்களா ?
இல்லை. சிரிதரன் சென்னையில் சிவில் பொறியியல் படித்து இன்று இந்திய நகரங்களில் உலகம் மெச்சும் மெட்ரோ ரயிலைக்கொண்டுவந்தார் உலகத்தவர் வந்து பார்த்து 'எம் நாட்டிலும் இதைச் செய்யுங்கள்' என அவருக்கு அழைப்பு விடுக்கிறார்கள். விசுவேசுவரய்யா, பென்களூரு சட்டசபையைக்கட்டி புகழெய்தினார். எனவே மாணவ்ர்களே பொறியியல் படியுங்கள் என்பீர்களா? அல்லது ஒரு சிவில் பொறியியல் படித்த நடிகன் ஒருவனைக் காட்டி பொறியியல் படியுங்கள் என்பீர்களா ?
எனவே நண்பரே ! சட்டம் படியுங்கள் அது நல்ல படிப்பு என்பதற்கு நீங்கள் காட்டிய முன்மாதிரி நபர் மாணாக்கர்களுக்கு நீங்கள் காட்டிய தவறான வழி.
முக்கியமாக, இந்தப் பதிவானது சட்டக்கல்வி பக்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பார்வைப் பட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப் பட்டது.
ReplyDeleteஅந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவும்.
//
I was on long leave. I saw ur response only now. As u r not comfortable with English, here s my response in Tamil:
அதற்கு காட்டப்பட்ட நபர் சரியல்ல என்பதே என் கருத்து. அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.
அவர் தன் சட்டக்கல்வியை - ஐந்தாண்டுகள் படித்தது; அதுவும் நீங்கள் சொன்னதுபோல உயரிய கல்லூரியில் படித்தது ! - தூக்கியெறிந்து விட்டு கைகட்டிச் சேவகம் செய்யும் தொழிலுக்குப் போய்விட்டார். படிப்பறிவே இல்லா ரவுடி அமைச்சரானால் இவர் அவன் முன் கைகட்டித்தான் நிற்கவேண்டும்.
ஐஐடி, ல் படித்த பொறியாளர்கள் இப்படி தன் கல்வியை உதாசீனம் பண்ணினால், எவரேனும் இஞ்சினியரிங் படியுங்கள். அது ஒரு நல்ல படிப்பு. அம்மாணவர்கள் கவர்ன்மெண்டு கிளார்க்காகி கோப்புகளில் எழுதி பிழைக்கலாம் தன் செல்வாக்கைப்பயன்படுத்தி பவனி வரலாம் என்று சொல்வீர்களா ? இல்லை, சிரிதரன் சென்னையில் சிவில் பொறியியல் படித்து இன்று இந்திய நகரங்களில் உலகம் மெச்சும் மெட்ரோ ரயிலைக் கொண்டுவந்தார் உலகத்தவர் வந்து பார்த்து 'எம் நாட்டிலும் இதைச் செய்யுங்கள்' என அவருக்கு அழைப்பு விடுக்கிறார்கள். விசுவேசுவரய்யா, பென்களூரு சட்டசபையைக் கட்டி புகழெய்தினார். எனவே மாணவர்களே பொறியியல் படியுங்கள் என்பீர்களா? அல்லது ஒரு சிவில் பொறியியல் படித்த நடிகன் ஒருவனைக் காட்டி பொறியியல் படியுங்கள் என்பீர்களா ?
எனவே நண்பரே ! சட்டம் படியுங்கள் அது நல்ல படிப்பு என்பதற்கு காட்டிய முன்மாதிரி நபர் மாணாக்கர்களுக்கு நீங்கள் காட்டிய தவறான வழி.
//சட்டக் கல்லூரி வன்முறையை, அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். அது இந்திய அளவில், ஏன் உலகளவில் தமிழக மாணவர்களுக்கு எப்படி ஒரு தலைக் குனிவை உண்டு பண்ணியது என்பதையும் அறிவீர்கள். அப்படி இல்லையெனில் ஒரு சட்டக்கல்வி பயிலும் மாணவனின் தந்தை என்ற முறையில் நான் அனுபவித்த வேதனையும், எங்கள் உறவினர்கள் நண்பர்களின் பதட்டத்தையும் தங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.//
ReplyDeleteஇந்த பதிவை எழுதுவதற்கு உங்களை விட உங்கள் மகனுக்கே தகுதி என்று நினக்கிறேன்.
சட்டக்கல்லூரி மாணவர்களின் ரவுடியிசத்திற்கு சட்டப்படிப்புக்கும் என்ன தொடர்பு? ஜாதிவாரி வரும் ரவுடியிசம் தென்மாவட்டங்கள் பலகல்லூரிகளில் நடந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அவை விளம்பரப்படுத்தப் படவில்லை. அங்கே ஆண்டுதோறும் ஓரிரு கொலைகள் விழும் கல்லூரி தொடங்கும் மாதங்களில். இதற்கு அக்கல்லூரிக்கல்வி காரணமா ? அவைகள் சட்டக்கல்லூரிகள் இல்லை.
மாணவர்களின் ரவுடியிசத்தில் இறங்க சமூகக்காரணிகளே உந்துகள். அவை போகும்போது இவர்கள் மாறுவார்கள். நிற்க. ஒரு சில குழு மாணவர்களே இவற்றில் இறங்கினார்கள். அனைவரும் அல்ல. அதே ஆண்டு சென்னைச்சட்டக்கல்லூரி மாணவர்கள் மூவர் ஐரோப்பாவில் நடந்த ஒரு சட்டப்போட்டியில் உலகளவில் வென்றார்கள் என்று தெரியுமா ?
சென்னைச் சட்டக்கல்லூரி பல சட்ட மேதைகளைப் படைத்திருக்கிறது என்பது தெரியுமா ?
அப்படியே உங்கள் வாதம் சரியென்றால், சட்டம்படிக்க விழைவோர் இக்கல்லூரியைத்தான் தவிர்ப்பார்களேயொழிய சட்டப்படிப்பையல்ல.
உங்கள் பதிவு சட்டக்கல்வியைப்பற்றியதாக மட்டும் இருக்கவேண்டும். சட்டக்கல்லூரியைப்பற்றி இருந்தால் அதன் பொருள் வேறு.
கடைசியாக,
எந்தக் கல்வியையும் இன்று எவரும் அதில் மேதையாகி உலகுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை. எல்லாப் படிப்புமே ஒரு சூதாட்டம். வேலை, கைனிறைய சம்பளம். அரசு உத்தியோகமன்றால் நிறைய கையூட்டு. அதிகாரப்பவனி. மற்றவரென்றால் பிறரை எப்படி ஏமாற்றி சம்பாதிக்கலாம் என்றுதான்.
கல்வி இன்று ஒரு கடைச்சரக்கு.
Dont confuse the subject and the behavior of students. Dont confuse between the college and its students.
Both are different.
தமிழர்கள் பெருமைப்பட வேண்டும். இவர் ஐஏஎஸ்ஸில் தேர்வு பெற்று மக்களால் மதிப்பிழந்த சட்டக்கல்வியை மீண்டும் மதிப்புறச்செய்யுமாறு பண்ணிவிட்டார் என்பதுதானே நீங்கள் சொல்ல வந்தது ?
ReplyDeleteஇது மிகவும் தவறானப் பார்வை நண்பரே.
யாரோ ஒருவர் இங்கு சொன்னமாதிரி ஒரு நேர்மை தவறா அதிகாரியாகி அக்கடமையில் அப்பாவி பொதுமக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமானால் மட்டுமே பெருமைப்படலாம். இப்போதே என்றால் பின்னர் ஏமாந்து விடுவீர்கள்.
தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேலான ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள் ? அவர்கள் எத்தனை பேர் நேர்மை தவறா அதிகாரிகள்? அவர்களுள் எத்தனை பேரால் நாட்டுக்கு நன்மை ?
எனவே பெருமை இப்போதே இவரைப்பற்றி படுவது 'பிள்ளை பெருமுன்பே பேர் வைப்பது போலாகும்! பிள்ளை உயிரோடு பிறக்குமா ? ஆணா பெண்ணா ?
சட்டக்கல்வியின் பெருமையை இந்த நபர் குறைத்துவிட்டார் என்பதுவே என் கருத்து.
I am seriously dead against the idea of feeling proud for an act of somebody. Such pride harms the society as a whole. It already harmed many times.
பெருமைப்படுதலைப்பற்றி நான் ஒரு தனிப்பதிவு எழுதலாமென இருக்கிறேன். அப்போது மேலும் என் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
I am not a woman. There s a mistake in my profile. To be corrected soon.