Wednesday, July 29, 2020

தெரியாத குற்றமும் தெரிந்த தண்டனையும்!

குருவும் சிஷ்யனும்...

"பாதிக்கப்பட்டவர்களால், குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை எந்த நாட்டிலாவது உண்டா?"

"உலகெங்கிலும் ஒரு குற்றத்திற்கான தண்டனையை மட்டும், பாதிக்கப்பட்டவர்கள் வழங்குகிறார்கள்"

"அப்படியா, அது என்ன குற்றம்?"

"தன் பிள்ளைகளுக்கு நீதி, நேர்மை, நியாயம், தர்மம், அன்பு, பாசம், ஈவு  இரக்கம் மற்றும் நல்ல நண்பர்களுடன் பழகுதல் போன்றவைகளை கற்றுக்கொடுக்காத குற்றத்திற்காக, வாழ்க்கையில் இவைகளை அறியாமல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளே, குற்றவாளிகளான பெற்றோருக்கு தண்டனையளிக்கும் நடைமுறை, எல்லா நாட்டிலும் உண்டுதானே...?!"

2 comments:

  1. எடுத்துக்காட்டு:
    அன்பு, பாசம், ஈவு இரக்கம் போன்றவைகளை கற்றுக்கொடுக்காத குற்றத்திற்காக,முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைத்தல்!

    ReplyDelete